Header Ads



இந்தியாவில் இப்படியும் நடந்தது - தலையிடுகிறார் முதலமைச்சர்

ரஷ்யாவை சேர்ந்த வோல்கா எபிமென்கோவா என்ற பெண் கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வந்தபோது, ஆக்ராவை சேர்ந்த விக்ராந்த் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதன்பிறகு ஆக்ராவில் உள்ள இந்தன்புரி பகுதியில் மாமியாரோடு கூட்டுகுடித்தனம் நடத்திய வோல்கா இந்திய மொழியை சரளமாக பேசக்கற்றுக்கொண்டார்.

இந்நிலையில், தான் இதுவரை சந்தித்திராத வரதட்சணை கொடுமையை எதிர்கொண்டுள்ளார், ஒரு கட்டத்தில் சித்ரவதை உச்சத்தை தொட்டுள்ளது, கணவன் குழந்தையுடன் ஓல்காவை வீட்டை விட்டு மாமியார் விரட்டியுள்ளார். இதனால் கோப்பமடைந்த  வோல்கா தனது மாமியார் வீட்டின் முன்பு தனது  3 வயது குழந்தையுடன் அமர்ந்து உண்ணாவிரதப்போராட்டத்தை துவங்கியுள்ளார், வீட்டுக்குள் தன்னை அனுமதிக்க வேண்டும் இல்லாவிட்டால் கணவரின் சொத்தை பிரித்து தரவேண்டும் என்பதுதான் வோல்காவின் கோரிக்கையாக உள்ளது.

தான் ரஷ்ய பெண் என்பதால் புகாரினை வாங்குவற்கு போலீசார் மறுப்பதாக வோல்கா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் உத்தரபிரதேச முதமந்திரி அகிலேஷ்யாதவ் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்   உதவு புரிவதாக தங்கள் டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளனர்.



No comments

Powered by Blogger.