Header Ads



ஜனாதிபதி - பிரதமர் எம்மை தடுக்கவும், பாதயாத்திரையை நிறுத்தவும் முடியாது


அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணி நடத்தவுள்ள பாதயாத்திரையை தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகள்  அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன. நீதிமன்றம் வரை சென்று எமது பாதயாத்திரையை நிறுத்தவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார் என பொது எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். 

பிரதமர் என்ன செய்தாலும் எமக்கு எதிராக என்ன முயற்சிகளை எடுத்தாலும் எமது பாதயாத்திரையை தடுக்க முடியாது. தீர்மானித்தபடி எதிர்வரும் 28ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பதையாத்திரை இடம்பெற்றே தீரும் எனவும் அவர்  குறிப்பிட்டார்.  

பொது எதிரணியின் பாதயாத்திரை தொடர்பில் வினவியபோதே அதன் தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.  அவர் மேலும் கூறுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தை நம்பி மக்கள் வாக்களித்து இன்று ஏமாற்றம் கண்டுள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் இன்று மிகவும் கீழ் மடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் வரி அதிகரித்த வண்ணம் உள்ளது. மீண்டும் வடக்கிலும் கிழக்கிலும் இனவாதம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. அவ்வாறான நிலையில் இந்த அரசாங்கத்தை மக்கள் ஆதரிக்க வேண்டிய தேவை இல்லை. இன்று நல்லாட்சி அரசாங்கதின் ஏமாற்று வேலைகளை மக்கள் நன்றாக உணர்ந்துவிட்டனர். ஆகவே மஹிந்த ராஜபக்ஷவின் தேவையையும், எமது மீள் பிரவேசத்தையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

அரசாங்கம் மேற்கொள்ளும் மோசடிகளை விமர்சிக்கவோ அல்லது பாராளுமன்றத்தில் விமர்சிக்கவோ எமக்கு இடமில்லை. எமது பிரதிநிதித்துவம் இன்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் சர்வாதிகார போக்கை மாற்றியமைக்க எமக்கு பலமான ஒரு அணி   தேவைப்படுகின்றது. ஆரம்பத்தில் 20 பேருடன் ஆரம்பித்த பொது எதிரணி இன்று 50ற்கும் அதிகமான உறுப்பினர்களை இணைத்துக்கொண்டுள்ளது. இன்னும் சிறிது காலத்தில் மேலும் உறுப்பினர்கள் எம்முடன் கைகோர்க்கவுள்ளதுடன்   எமது அணியை பலப்படுத்துவோம். 

குறிப்பாக எதிர்வரும் 28ஆம் திகதி நாம் கண்டியில் இருந்து மேற்கொள்ளவுள்ள பாதயாத்திரை எமக்கு மேலும் பலம் சேர்க்கும். மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் நாட்டை நேசிக்கும் அனைவரும் இந்த கூட்டணியில் கைகோர்ப்பார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிக்கும் 51 எம்.பிக்கள் எம்முடன் கைகோர்த்து இந்த பாதையாத்திரையை முன்னெடுத்து செல்வதாக தெரிவித்துள்ளனர். 

அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணி நடத்தவுள்ள  பாதயாத்திரையை தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகள்  அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி இந்த பாதயாத்திரையை தடுக்க சகல விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எம்மை கட்டுப்படுத்துவதே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. ஆகவே எமக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்க வேண்டும் என்ற நிலைக்கு அவரது மனநிலை வந்துவிட்டது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருசிலர் எமக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. பிரதமர் என்ன செய்தாலும் எமக்கு எதிராக என்ன முயற்சிகளை எடுத்தாலும் எமது பாதையாத்திரையை தடுக்க முடியாது. தீர்மானித்தபடி எதிர்வரும் 28ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பதையாத்திரை இடம்பெற்றே தீரும். 

மேலும் நாளை(இன்று) பொது எதிரணியினர் ஒருசிலரை ஜனாதிபதி சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் எமக்கு அதற்கான அழைப்பு இன்னும் கிடைக்கவில்லை. எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் எம்மை தடுக்க முடியாது. நாம் ஜனநாயக ரீதியில் மக்களை இணைத்து இந்த பாதையாதிரையை நடத்துகின்றோம். அதனை தடுக்க எந்த முயற்சிகளை மேற்கொண்டாலும் அதனை தாண்டி நாம் எமது பாதையதிரையை முன்னெடுப்போம் என்றார்.  

No comments

Powered by Blogger.