Header Ads



நிந்தவூரில் மட்டும் ஏன், கோழியிறைச்சி அதிக விலையில் விற்கப்படுகிறது..?

கிழக்கிலங்கையின் கரையோரப்பிரதேசத்தின் சகல ஊர்களிலும் பார்க்க நிந்தவூர் பிரதேசத்தில்  கோழியிறைச்சி அதிக விலைக்கு விற்கப்படுவதாக  பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.ஒரு கிலோ கோழியிறைச்சி  ரூபா 650/-  இற்கு உள்ளூரில் விற்கப்படுவதாக  நுகர்வோர் பிரஸ்தாபிக்கின்றனர்.

அரசு கட்டுப்பாட்டு விலையினுள் விற்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளவற்றினுள் கோழியிறைச்சியும்  அடங்குகின்றது  இருந்த போதிலும் இப்பிரதேசத்தில் இந்த  விதி பின்பற்றப்படாமலேயே இருக்கின்றது. இதுவரை விலைக்கட்டுப்பாட்டு  அதிகாரிகளோ  நுகர்வோர் அதிகார சபையோ இதுவிடையமாக எதுவித நடவடிக்கையும்  எடுத்ததாக தெரியவில்லை.

பிரதேச சபையினால் கேள்வி மனு கோரப்பட்டு ஏலத்தில் குத்தகைக்கு விடப்பட்ட சில கோழிக்கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.அது பற்றி குத்தைக்கு பெற்றுக்கொண்டவரிடம்  வினவியபோது மிக அதிக குத்தகைக்கே கோழியிறைச்சிக் கடைகள்  வழங்கப்பட்டன,அவற்றினை  நடாத்துவது நஷ்டத்தினை  ஏற்படுத்துவதனால் கடைகள் மூடப்பட்டுள்ளன என கூறுகின்றார்.

எது எப்படி இருந்திற்ற போதிலும் அயலூர்களிலுள்ள  மக்கள் அனுபவிப்பது போன்ற விலைவாசியினை  ஏன்  நாங்கள் அனுபவிக்கக்கூடாது?இரண்டு மூன்று கிலோமீட்டர்களினுள் எப்படி இந்த விளைவித்தியாசம் ? என பொதுமக்கள்  அங்கலாய்ப்பதுடன் மட்டுமன்றி  இது சம்மந்தமாக பிரதேச ,பிராந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

4 comments:

  1. ஏன் நிந்தவூரில் மட்டும்?
    பொத்துவிலிலும் 650ரூபாதான்

    ReplyDelete
  2. Government had announced that fixed price is only for packed/frozen chickens not for fresh chicken.....do not mislead the public.

    ReplyDelete
  3. உடன் பிறந்த சகோதரிகளிடம் இலடசக்கணக்கி கோடிக்கணக்கில் சீதணம் வாங்கிய பைசா இருக்கு தானே! கோழி இறைச்சியின் விலை 6500 க்குப் போனாலும் இலாபம்!

    ReplyDelete
  4. If its true then do complain...

    ReplyDelete

Powered by Blogger.