Header Ads



"இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டமைக்கான, தண்டனையாம் இது"

இந்து மதக் கோட்பாடுகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாக அவ்வப்போது மதுரை ஆதினத்தின் மீது குற்றச்சாட்டுகள் கிளம்புவது வழக்கம். அந்தச் சந்தர்ப்பங்களில் அவற்றை ஆதினம் சட்டை செய்வதில்லை. 'இதுவும் கடந்துபோகும்...' என அமைதிகாத்து, அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்.

தற்போது மீண்டும் அதுபோன்ற ஒரு சர்ச்சை வளைத்தில் சிக்கியிருக்கிறார் மதுரை ஆதினம். கடந்த 2 ம் தேதி சென்னையில், அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு விருந்து நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற இந்த நிகழ்வில், மதுரை ஆதினமும் பங்கேற்றார். மேலும் இஸ்லாமிய கோட்பாட்டின்படி வழங்கப்படும் நோன்பு கஞ்சியையும் அருந்தினார் மதுரை ஆதினம்.

இதுதான் இப்போது இந்து மத அமைப்புகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மடத்தின் ஆதினமாக இருக்கும் அவர், மற்றொரு மதம் தொடர்பான சடங்கில் பங்கேற்று கஞ்சி அருந்திய செயல், இந்து மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது என இந்து மத அமைப்புகள்  போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இதன் வெளிப்பாடாக இந்து மக்கள் கட்சியினர், மதுரை ஆதினத்தை இந்து மதத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இவங்க ஒன்னும் ஹிந்து மதத்தின் அத்தாரட்டி இல்லை, ஹிந்துக்களே செருப்படி கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் இந்த காமெடியர்களுக்கு.

ஒரு முறை இந்து முன்னணி நிர்வாகி ஒருவருக்கு ஒரு இஸ்லாமியன் ரத்த தானம் செய்தான்.

அதையும் அறுத்து ஓட விடுவாங்களா இல்லை ரத்தம் மட்டும் பொதுவானது என்பார்களா?



3 comments:

  1. இஸ்லாமியக் கோட்பாட்டுக்கும், நோன்புக் கஞ்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை இந்த இந்து மதவெறியர்கள் அறிவார்களா? நோன்புக் கஞ்சி என்பது தென்னிந்தியா, இலங்கையில் காணப்படும் ஒரு நடைமுறை.

    இந்து மதவெறி அமைப்பினர்களின் மதவெறியை விமர்சனம் செய்யும் அதே நேரத்தில், முக்கியமான முஸ்லிம் உலமா (உதாரணம் : கஹ்பாவின் இமாம்) அந்நிய மத நிகழ்வில் கலந்து கொண்டிருந்தால் முஸ்லிம்கள் மட்டும் சும்மாவா இருந்துவிடப் போகின்றார்கள் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. Auto driver naga yaraum islathil irunthu wilaga madom ithu allah udaya marham for a excample u

    ReplyDelete
  3. Rishvin Ismath,
    முக்கியமான முஸ்லிம் உலமா அந்நிய மத நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுமா? உதாரணத்திற்கு அவ்வாறான நிகழ்வொன்றைக் கூற முடியுமா?

    ReplyDelete

Powered by Blogger.