Header Ads



ரணிலின் அழைப்பு . நிராகரித்தார் அநுரகுமார

மக்களின் பூரண ஆதரவை பெறும்வரை மக்கள் விடுதலை முன்னணி எந்தவொரு  சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படாது.  மக்களுடன் இணைந்து செயற்படும் நாம் எந்தவொரு அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் அந்த அரசாங்கத்தின் தவறுகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்துவதோடு  அரசாங்கத்தினால் நாட்டிற்கும், மக்களுக்கும் முன்னெடுக்க வேண்டிய நலத்திட்டங்களை வலியுறுத்துவோம் எனவும் குறிப்பிட்டது.

எமது கட்சியானது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமானால் அரசாங்க பிரதிநிதிகளினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து விதமான ஊழல் செயற்பாடுகளும் மக்களுக்கு தெரியாமல் போவதோடு இதனை சுட்டிகாட்ட எந்தவொறு தரப்பினரும் முன்வர மாட்டார்கள். எவ்வாறாயினும் நாட்டை முன்னோக்கி நகர்த்தும் அனைத்துவிதமான செயற்பாடுகளுக்கு அரசாங்கத்திற்கு ஆதரவை செலுத்துவோம் எனவும் குறிப்பிட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்கள் சந்திப்பு ஒன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட மக்கள் விடுதலை முன்னணியிடன் ஒன்றிணைந்து நாட்டை முன்னோக்கி நகர்த்த தயாராக இருக்கின்றோம் என தெரிவித்திருந்தமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய அனுர குமார திஸாநாயக்கவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1 comment:

Powered by Blogger.