July 27, 2016

மாடறுப்பு (குர்பான்) தொடர்பில் ராவன பலய கூறுவதை, முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும்..!

-முஹமத் தௌபீக்-

கடந்த சில வருடங்களாக முஸ்லிம்கள் மீதும் அவர்களுடைய இஸ்லாமிய அனுஸ்டானங்கள் மீதும் காழ்ப்புணர்ச்சிகொண்ட பௌத்த துறவிகள் முஸ்லிம்களை எப்படியாவது வம்புக்கு இழுத்து பிரச்சினைப்பட்டு முஸ்லிம்களையும் அவர்களுடைய இருப்பையும் இல்லாதொழிக்க முற்படும் ஒரு பொறிமுறையை மேற்கொள்வது நாம் அனைவரும் அறிந்ததே. இதிலே முன்னின்று செயலாற்றுபவர்கள்தான் பொது பல சேனாவும் ராவணா பலயவும்.

இருந்தாலும் ஜூலை 27, 2016 அன்று ஜப்னா முஸ்லிமிலே வெளியான “ பள்ளிவாசல்களில் + வீடுகளில் மாடறுப்புக்கு தடைவிதிக்க கோரிக்கை” http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_906.html எனும் கட்டுரையில் ராவணா பலய சில விடயங்களை சுட்டிக்காட்டி இருந்தது. இது முற்றிலும் வரவேற்கத்தக்க விடயம். அதாவது பின்வரும் விடயங்களை ராவணா பலய சுட்டிக்காட்டுகிறது;

1. சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ள மாடுகள் அறுக்கும் மடுவங்களில் மாத்திரம் மாடுகள் அறுக்கப்படவேண்டும்.

2. அறுக்கப்படும் மாடுகளுக்கான அனுமதி உள்ளூராட்சி மன்றங்களிடம் பெற்றுக்கொள்ளவேண்டும்.

3. மாடுகளை போக்குவரத்து செய்வதற்கான அனுமதி பொலிஸ் நிலையங்களில் பெற்றுக்கொள்ளவேண்டும்.

4. மாடுகள் கர்ப்பம் தரித்திருக்ககூடாது மற்றும் மாடுகள் சித்திரவதைக்கு உள்ளாகக்கூடாது.

இவை அனைத்துமே சட்டம் சொல்கின்ற விடயங்கள். இதனை ஒவ்வொரு குடிமகனும் குறிப்பாக முஸ்லிம்கள் பின்பற்றவேண்டும். இதிலே சொல்லப்பட்ட முதலாவது விடயம் அதிகமான முஸ்லிம்களால் பின்பற்றப்படுவதில்லை. ஏன் மற்றைய மேற்சொன்ன விடயங்களும்கூட மீறப்படுவதை நாம் காண்கிறோம். இதனால் சட்டப்பிரச்சினைகளையும் முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள்.

இவ்வாறான சட்டங்களை முஸ்லிம்களாகிய நாம் பின்பற்றாத போது அண்ணிய மதத்தை சார்ந்தவர்கள் முஸ்லிம்கள் நாட்டின் சட்டத்தை பின்பற்றாதவர்கள் என்ற ஒரு எண்ணம் எப்பொழுதும் அவர்களிடம் இருந்துகொண்டேதான் இருக்கும். இது நிதர்சனமும்கூட ஏனென்றால் ஜும்மாவுடைய தினங்களிலே குறிப்பாக கிழக்குமாகாண முஸ்லிம்கள் ஹெல்மெட் அணியாமல் பள்ளிக்கு செல்வதனால் முஸ்லிம்கள் நாட்டினுடைய சட்டத்தை பின்பற்றுவதில்லை என்ற ஒரு எண்ணம் இப்பொழுதும் இருக்கிறது.

உண்மையிலேயே மாடுகள் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ள மாடுகள் அறுக்கும் மடுவங்களில் மாத்திரம்தான் அறுக்கப்படவேண்டும். இதனால் பல பிரச்சினைகளை முஸ்லிம்கள் தடுக்க வாய்ப்பிருக்கிறது அதேநேரம் மற்றைய சமூகமும் நம்மளை புரிந்துகொள்ளும் வாய்ப்பும் அதிகரிக்கும். முஸ்லிம் நாடுகளாக இருக்கக்கூடிய மத்திய கிழக்கு (கத்தார், சவுதி போன்ற) நாடுகளிளும்கூட மாடுகள் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ள மாடுகள் அறுக்கும் மடுவங்களில்தான் அறுக்கப்படுகிறது. அது குர்பானியாக இருந்தாலும் சரியே. இது மத்திய கிழக்கிலே பணிபுரிகின்ற அனைத்து இலங்கை முஸ்லிம்களுக்கும் தெரிந்த ஒருவிடயம். அதனை நம் முஸ்லிம்களும் அந்தந்த நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பின்பற்றுகிறார்கள். ஆனால் அதையே இலங்கையில் பின்பற்ற தயக்கம் காட்டுகிறார்கள். 

ஆக, முஸ்லிம்கள் நாட்டின் சட்டத்தை மதித்து அதனைப்பின்பற்றி தன்னுடைய மத அனுஸ்டானங்களை நிறைவேற்றவேண்டும். அந்தந்த பகுதியிலே உள்ள பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் இதர அமைப்புகள் ஒன்றினைந்தோ அல்லது தனித்தோ  மாடுகள் அறுக்க அனுமதிக்கப்பட்ட இடங்களிலே அறுத்து அதனை விநியோகிக்க ஏற்பாடுகளை செய்யவேண்டும். எம் அணுகுமுறை சட்டரீதியாக இருக்கும்போது யாரும் அதற்க்கு எதிராக செயல்படமாட்டார்கள். அவ்வாறு செயற்பட்டால் அதனை சட்டரீதியாக எம்மால் முறியடிக்கமுடியும். 

ஆகவே மேற்சொன்ன நான்கு விடயங்களையும் எதிகாலத்தில் பின்பற்றி நமது கடமைகளை செவ்வனே செய்வதோடு மாற்றுமத சகோதரர்களுக்கு மத்தியிலே முன்மாதிரி முஸ்லிம்களாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக. ஆமீன். 

9 கருத்துரைகள்:

Good suggestion. abiding by the law is a responsibility of every citizen, as Muslims we should practice the religious obligations without conflicting the the law of the land, especially when there is a formal way to do it.

اللهم بارك
Mr.Thowfeek

Should agree and follow it..

If there is a law the Muslims should abide by it. If the law places obstacles on the practice of religious rites it must be taken up in the Parliament so that changes can be made.

நல்லதொரு எடுத்துக்காட்டு இதைபின்பற்றினால் எந்த பிர்ச்சினைகளுக்கும் முகம் கொடுக்கலாம்,

Kuthba prasangam nadaatthavum Ravana Balaya and BBS
aatkalai azhaththalum nanraagahthaan irukkum !!!
Avargal solvazai nammavargal migavum elizaga purinthu
kolgiraargaley . Sabaash !

Muhammad thowfeek aththanai maduwam ullazu ungal ooril

Post a Comment