Header Ads



பாசிக்குடாவுக்கு செல்வோருக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரையில் ஜெலிபிஸ்கள் அசாதாரணமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீன்வகை மனித உடலில் ஒட்டும் தன்மையுடையதாகக் காணப்படுகின்ற இதேவேளை இது உடலில் ஒட்டும் சந்தரப்பத்தில் உடலில் பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த கடற்கரைக்கு செல்வோர் மிகுந்த அவதானத்துடன் குறித்த மீனினத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஜெலிபிஸ் இன மீன்களானது மிகவும் பழமையான மீனினம் என்பதோடு,சுமார் 70 கோடி வருடங்களுக்கு முதலே குறித்த மீனினம் கடலில் உருவாகியிருப்பதாக கடற்வள விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Science is a speculation. Only the almighty Allah know the truth.

    ReplyDelete

Powered by Blogger.