Header Ads



துருக்கி வரம்பு மீறக் கூடாது - அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி எச்சரிக்கை


துருக்கியில் ராணுவப் புரட்சி தோல்வியடைந்த பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் வரம்பு மீறக் கூடாது என்று அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும், ஐரோப்பிய யூனியன் வெளிவிவகாரக் கொள்கைப் பிரிவுத் தலைவர் ஃபெடரிகா மொகெரினியும் கூறுகையில், புரட்சியை அடக்குவதற்காக அளவுக்கு மீறிய பலத்தைப் பிரயோகிப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்று தெரிவித்தனர்.

புரட்சியில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதை வரவேற்றாலும், அது வரம்பு மீறிய செயலாக இருக்கக் கூடாது எனவும் ஜான் கெர்ரி எச்சரித்தார்.

புரட்சிக்கு எதிரான நடவடிக்கைகளின்போது, துருக்கியில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ஃபெடரிகா மொகெரினி கூறினார்.

கைது செய்யப்பட்ட கிளர்ச்சியாளர்கள் துன்புறுத்தப்படும் காட்சிகள் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகக் கூறிய ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல், பழி வாங்கும் நடவடிக்கையில் துருக்கி அரசு ஈடுபடக் கூடாது என்றார்.

புரட்சிக்குப் பிறகு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதை விமர்சித்துள்ள ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜொஹன்னஸ் ஹான்ஸ், கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்படும் வேகத்தைப் பார்த்தால், ராணுவப் புரட்சிக்கு முன்பே அவர்களது பட்டியலை அரசு தயாரித்து வைத்துவிட்டதைப் போல் தோன்றுகிறது என்று கூறினார்.

7,543 பேர் கைது: ராணுவப் புரட்சிக்குப் பிறகு துருக்கியில் இதுவரை 100 போலீஸார், 6,038 ராணுவத்தினர், 755 நீதிபதிகள் உள்பட 7,543 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 29 மாகாண ஆளுநர்கள், 7,899 போலீஸார் உள்பட 8,777 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கியில் ஆட்சியைக் கைப்பற்ற ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட முயற்சியை ராணுவமும், பொதுமக்களும் முறியடித்தனர்.

இந்த சம்பவத்தில் 290 பேர் உயிரிழந்தனர்.

5 comments:

  1. 'இறைவனின் வரம்பா அல்லது இவர்களின் வரம்பா? ஐரோப்பிய ஒன்றியமா அல்லது அல்லாஹ்வின் ஒன்றியமா?

    துருக்கியருக்கான ஈமானியச் சோதனை!

    ReplyDelete
  2. Turkey is not a colony of America and Germany. Spend more time in keeping EU together. EU's disintergration has started. Merkel Theressa Hollande act on your own. Dont be a mouthpiece of USA. Blair if paying for his follies for the same way u all behaving now. Pls stop the i strekch ur back ypu skretch my back policy. Dont be a bootspittle of USA. Down fall of USA has just begun with the racial killing rampage going on now

    ReplyDelete
  3. Now we know who were behind this coup. Shame on these countries.First America has to follow good ethics on prisoners issue before preaching others to do.

    ReplyDelete
  4. Foxes n wolves moaning n wailing around the world since their dream of destabilising destroying Turkey just like Iraq ,Libiya n Egypt got shattered .
    Little wonder they desperately beg Erdogan to let coup plotters go scot free so that they will regroup to stage another coup later day.

    ReplyDelete
  5. Bushit US and EU... missed the chance with TURKEY..

    Dear Turkey Brothers and Sisters ... Do not bow down to any power BUT Allah alone.

    Now you know the people behind the plot.. Stay vigillent and never give lose hand to two thinks in your life ...

    1. Your Faith
    2. Your Safety

    Allah will help you..insha Allah.
    Whole Truely practicing Muslims will make Dua for you.


    2.

    ReplyDelete

Powered by Blogger.