Header Ads



பிரான்ஸ் தாக்குதல் - கொலையாளியின் கொடூத் திட்டம் - துனிஷீய நாட்டுக்காரன் என தகவல்


பிரான்ஸின் கடற்கரை நகரமான நீஸ் நகரில், நேற்று (வியாழக்கிழமை) இரவு 10.30 மணியளவில்  ஆயுதங்கள் நிரப்பிய வாகனம் மூலம் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். 100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அதில் 18 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

யூரோ கால்பந்து தொடர் எந்தவிதமான இடர்பாடும் இல்லாமல் முடிந்த நிலையில், நிகழ்த்தப்பட்ட இந்த மிகப் பெரியத் தாக்குதல் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு முன், தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டத் தாக்குதலுக்கு 130 பேர் பலியாயினர்.

இந்நிலையில், இன்று நடத்தப்பட்ட தாக்குதலை நடத்தியவர், நீஸ் நகரை  பிரெஞ்சு துனிஷீய இனத்தை சேர்ந்தவர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  கூட்டத்திற்குள் சுமார்   1.3 மைல் துரம்  ட்ரக் சென்றது.  போலீசார்  பின்னாடியே விரட்டி சென்று அதனை ஓட்டியவரை  சுட்டுக் கொன்றுள்ளனர்.

கூட்டத்திற்குள் வாகனம் புகுந்த நிலையில், அதை ஓட்டியவர்  கூட்டதை நோக்கி  தாறுமாறாகச்  சுட்டதாகவும் கூறப்படுகிறது.  ட்ரக் நிறைய ஆயுதங்களும் இருந்துள்ளன. தன்னால் முடிந்தவரை அதிகம் பேரைக் கொல்ல வேண்டுமென்பதே டிரக் ஓட்டியவரின் நோக்கமாக இருந்துள்ளது. அதனால் 50 கி.மீ வேகத்தில் வளைத்து, நெளித்து வாகனத்தை அவர் ஓட்டி உள்ளார்.

பிரான்ஸ் தேசிய தினத்தை குடும்ப சகிதமாக கொண்டாடுவது,  பிரான்ஸ் மக்களின் வழக்கம்.அதனால், ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் இந்த தாக்குதலில் இறந்துள்ளதாகத் தெரிகிறது. ஏராளமான குழந்தைகளும் பலியாகி உள்ளனர். டிரக் கூட்டத்திற்குள் புகுந்த வேகத்தில், மக்கள் அதன் டயரிலும், அடியிலும் சிக்கி கண் இமைக்கும் நேரத்தில் சிதைந்துள்ளனர். பலர் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம்  சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதில் 17 பேருக்கு மேல் இறந்தனர். கடந்த நவம்பர் 13ம் தேதியில் இருந்து பிரான்சில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

யூரோ கால்பந்து தொடர் முடிந்ததையடுத்து வரும் ஜுலை 26-ம் தேதியுடன்  அவசர நிலையை  வாபஸ் பெற  பிரான்ஸ் அரசு திட்டமிடப்பட்டிருந்தது.டிரக் தாக்குதலையடுத்து அது மேலும் 3 மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை ''கொடூரத்தின் உச்சக்கட்டம் ''என ஃபிரான்ஸ் பிரதமர் ஹாலாண்டே கண்டனம் தெரிவித்துள்ளார். ''பிரான்ஸ் பாதிக்கப்பட்டுள்ளது ஆனால் முன்பைவிட பலமாகியுள்ளது'' எனவும் ஹாலாண்டே கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி ஆகியோரும் இந்த சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்கள்.

https://www.youtube.com/watch?v=tWVBFcchK_Y 

7 comments:

  1. Wich country next target? sriya or other Muslim country?

    ReplyDelete
  2. Arampchchi.(start)panniththanukal.manisana.kolluraththukku.evanukalukku.manisana.kollurathan.velai.room.pottu.josippanukal.kolai.seiya .europ.karann.kenayan .ennaththukku.evanukalukku.adaikkalam.kodukkiranukal

    ReplyDelete
  3. இதில் சொல்வதற்க்கு ஒன்றும்மில்லை மேற்குலகின் இஸ்லாம் சம்மந்தமான வெளியுரவுக்கொளகையில் மாற்றம் வேண்டும் என்பதை உணர்த்தும் தாக்குதல்களே தவிர சொல்வதற்க்கு ஒன்றுமில்லை

    ReplyDelete
    Replies
    1. neengal solwadhupoal mulu ulahamum sollum warey indha yoodharhalin thittam ooyadhu sahoodhara

      Delete
    2. neengal solwadhupoal mulu ulahamum sollum warey indha yoodharhalin thittam ooyadhu sahoodhara

      Delete
  4. U.s.a.and.europ.ellam.ontru.sernthu.oru.mudivukku.varavendum.muslim.akathikalai.ulle.nulatavidakkudathu.akathikal.entru.muslim.payankaravathikal.ulle.vanthu.enthamathiri.manithanai.kollu.kintrarkal

    ReplyDelete
    Replies
    1. புலிகள் இலங்கையில் பொதுமக்களை கொன்று குவித்த போது நீங்கள் சொல்வது போன்று அன்று சிங்களவர்கள் தமிழர்களை விரட்ட வேண்டும் என்று சொல்லி இருந்தால் உங்களின் நிலை என்னவாகி இருக்கும் சகோதரா???

      Delete

Powered by Blogger.