Header Ads



யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள - தமிழ் மாணவர்கள் மோதல்

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானப்பீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதலையடுத்து விஞ்ஞானப்பீடம் காலவரையறையற்றவகையில் மூடப்பட்டுள்ளது.

இத்தகவலை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் திருமதி வசந்தி அரசரட்ணம் கூறியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

குறித்த மோதல் நிலையை அடுத்து விஞ்ஞான பீடம் காலவரையறை இல்லாமல் மூடப்பட்டுள்ளது.

மேலும் விடுதிகளில் உள்ள விஞ்ஞான பீட சிங்கள மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து பொலிஸ் புலனாய்வுப்பிரிவினரின் துணையுடன் சிங்கள , தமிழ் மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்வதாக தமிழ் மாணவர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மருத்துவ பீடத்தின் புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் பல்கலைக்கழக மருத்துவ பீட புகுமுக மாணவர்களுக்கான வரவேற்புநிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ் கலாச்சாரப்படி வரவேற்பு நடனம் நடத்த வேண்டும் என தமிழ் மாணவர்களும் கண்டிய நடனம் நடத்த வேண்டும் என சிங்களமாணவர்கள் கேட்ட நிலையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையிலும் மோதல்இடம்பெற்றுள்ளது.

புதிய இணைப்பு

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ்-சிங்கள மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்தை பொலிஸார் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இன்றைய தினம் புகுமுக மாணவ ர்கள் வரவேற்பு நிகழ்வில் கண்டி ய நடனம் இடம்பெற வேண்டும் என சிங்கள மாணவர்கள் கேட்ட நிலையில் இந்த கைகலப்பு உருவான நிலையில் பெரும் மோதலாக அது மாறியது.

இந்நிலையில் மா ணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் இம் மோதலில் தலையிட்டு ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுடனும் மாணவர்கள் கடுமையாக முரண்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர்களை தூசண வார்த்தைகளால் சிங்கள மாணவர்கள் பேசியுள்ளனர்.

1 comment:

  1. In Jaffna, the ceremony should be held according to the local culture. Peace will prevail only when the communities treat each other with mutual respect and not with arrogance and oppressive attitude!

    ReplyDelete

Powered by Blogger.