Header Ads



லண்டனில் ஜனாதிபதி, மைத்திரியின் எளிமை - அரசியல் பிரமுகர்கள் பெருமிதம்


இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் பிரிட்டன் விஜயம் செய்திருந்த போது வாடகை டாக்ஸியில் பயணங்களை மேற்கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

தனிப்பட்ட தேவை ஒன்றுக்காக அண்மையில் ஜனாதிபதி பிரிட்டனுக்கு பயணம் செய்திருந்தார். அதாவது மகளின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக இவ்வாறு லண்டன் சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பயணத்தின் போது அரசாங்கப் பணத்தையோ ஜனாதிபதி வரப்பிரசாதங்களையோ பயன்படுத்தவில்லை.

இந்தப் பயணத்திற்கு அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வாடகைக்கு அமர்த்திய டாக்ஸி ஒன்றில் ஜனாதிபதி லண்டனில் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

இங்கிலாந்தின் முக்கிய வர்த்தக நிலையங்களுக்குச் சென்ற ஜனாதிபதி, தாம் கொள்வனவு செய்த பொருட்களை எடுத்துக் கொண்டு வரிசையில் நின்று அதற்கான கொடுப்பனவுகளை செய்துள்ளார்.

டாக்ஸியில் செல்வதற்காக நடந்து சென்ற போது இலங்கையர்களை சந்தித்துள்ளார் என லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயங்களை கேள்விபட்ட ஆளும் கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் நாட்டின் சிரேஸ்ட தலைவர்கள் இருவருமே சொந்த தேவைகளுக்கு அரச சொத்துக்களைப் பயன்படுத்தாமை மிகப் பெரிய வரப்பிரசாதமாகவே கருதப்பட வேண்டுமென கூறியதாக வார இறுதி பத்திரிகையொன்றின் அரசியல் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. பெருமைக்காகவன்றி, உண்மையாகவே எளிமையானவரான நமது ஜனாதிபதி எப்பொழுதுமே சிறந்த முன்மாதிரியானவர்.

    ReplyDelete
  2. Late Sri Bandaranayake did more than this ... When she invited Chinese delegation ... After official program' ended ... Chinises delegation wanted to go on picnic ... She did not used public expenses but she paid her own cheques to all expenses of Chinese delegation as their official time was over..
    She paid her own money ... Do you expect any thing like this from today's political leaders /: this is a good example
    MR looted public money but MS sets good example.

    ReplyDelete
  3. இது நமது நாட்டின் தலைவரின் முன் மாதிரி. ஆனால், ஒரு முஸ்லிமாக இதைவிட பல மடங்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நமது தலைவர்களின் நடத்தையை பார்க்கும்போது இந்த நாட்டில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் தலை குனிய வேண்டிய நிலையில் இருக்கின்றோம் என்ற உண்மையை கசப்பாக இருந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
    இன்று (24.07.2016) நடந்த ஒரு சம்பவத்தை இதற்கு ஒரு உதாரணமாக சொல்கிறேன். இன்று கண்டியில் முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக்கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்திதிற்கு அக்கரைப்பற்றிலிருந்து தனது கட்சியின் அடியாட்கள் கண்டிக்கு வருவதற்காக கல்முனை நீர்வழங்கல் சபையின் HQ -9522 என்ற இலக்கமுடைய பிக்கப் வாகனத்தை றஊப் ஹக்கீம் அவர்கள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி எடுத்திருக்கிறார்.அரச சொத்துக்களை இவ்வாறு முறையில்லாமல் பயன்படுத்த ஹக்கீமுக்கு யார் இந்த அதிகாரத்தை வழங்கியது? இது நாட்டின் சட்டத்திதிற்கும், இஸ்லாமிய சட்டத்திதிற்கும் எதிரானது இல்லையா. இதுதானா இந்த நல்லாட்சிக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு? தூ....வெட்கமாயில்ல?? நீர் வழங்கல் சபையிலுள்ள மாற்று மத சகோதரர்கள் கூட இந்த செயலை ஏளனம் செய்ய்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.