Header Ads



பாதயாத்திரையினை மாற்றினார் மஹிந்த

பிரபல அமைச்சர்கள் இருவருக்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையானது நீதிமன்றம் சுயாதீனமாக இயங்குவதை உறுதிப்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனவே நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து தமது பாதயாத்திரையினை கண்டியில்ஆரம்பிக்காது கண்டி நகர எல்லைக்கு வெளியே கெட்டம்பே பிரதேசத்தில்ஆரம்பிக்கவுள்ளதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இன்று கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் நீதிமன்றம் விடுத்துள்ள பாதயாத்திரை தொடர்பான தடையுத்தரவானது இரவு 7மணிவரை தனக்கு கிடைக்கவில்லை என்றும், ஏனையவர்கள் மூலம் தனக்கு தெரிந்த வரைகண்டி நகரின் எல்லைக்கு அப்பால் தமக்கு பாதயாத்திரையை முன்னெடுப்பதற்கானஅனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நீதிமன்றத்தின் தீர்ப்பை தவறாகப் புரிந்து கொண்ட பொலிஸார்பாதயாத்திரையை நீதிமன்றம் தடுத்துள்ளதாக கூறி போலி பிரச்சாரங்களைமுன்னெடுத்துள்ளதாகவும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.