July 24, 2016

"ஊரான் வீட்டுக் கோழியை அறுத்து, உம்மா பேரில் கத்தம் ஓதுவது" மக்களிடம் இனிமேல் எடுபடாது

-மூத்த ஊடகவியலாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

சாய்ந்தமருதுக்கான தனியார் உள்ளுராட்சி மன்றம் என்ற விவகாரம் ஒன்றும் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று விண்ணப்பம் செய்து பெறும் ஒரு விடயமல்ல.. இது ஒரு சின்ன விடயம். ஆனால், சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு காரணமாகவே இந்த விடயம் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு இன்று பூதாகரமாக மாற்றப்பட்டுள்ளது.

மக்களின் அபிலாஷைகளோடு விளையாடும் சில அரசியல்வாதிகளின் ஓடிப்பிடித்து ஒளிந்து விளையாடும் போக்கினால்தான் இந்த விடயம் இன்று இவ்வாறானதொரு இழுபறிக்குச் சென்றுள்ளது.

இறுதியில் இன்று ஒரு தரப்பு அரசியல்வாதிகளை நம்பாத சாய்ந்தமருது மக்கள், இறைவனே தங்களுக்கு போதுமானவன். தங்களது தேவைகளை அவனே நிவர்த்தி செய்வான் எனற அடிப்படையில் பிரார்த்தனையிலும் வழிபாட்டிலும் தங்களை ஆத்மாத்தமாக இணைந்து கொண்டுள்ளார்கள். நிச்சயம் இதில் அவர்கள் வெற்றி பெறுவர் என்பது நிச்சயம்.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்ற விடயத்தை ஆரம்பத்திலிருந்து ஆழமாக இங்கு அலசுவதனை விட இடையிலிருந்து சற்று பார்த்தாலே போதும். 

நானும் சாயந்தமருதைச் சேர்ந்தவன் என்பதால் சாய்ந்தமருதுக்கான தனியார் உள்ளுராட்சி மன்ற விவகாரம் எழும் போதெல்லாம் இந்த விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தனிப்பட்ட முறையில் பேசுவேன். அவர்களது இதற்கு தரும் பதில் எனக்கு ஏமாற்றமாகவே இருக்கும். 

அந்தளவுக்கு சில முஸ்லிம் அரசியல் தரப்புகள் இந்த விடயத்தை தங்களுக்கான பிரசாரப் பொருளாக்கினார்களே தவிர பெரிதாக அவர்கள் ஈடுபாட்டு காட்டவில்லை. மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதனை  அவர்கள் எனக்கு தெரிவித்த பல விடயங்கள் மூலம் புரிந்து கொண்டேன்.

ஏ.எல்.எம்.அதாஉல்லா இந்த விடயத்துக்கான அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவர் உண்மையில் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி தனது அளப்பரிய பங்கினை ஆற்றினார் என்ற உண்மையை மறுக்க முடியாது. வர்த்தமானி அறிவித்தல் கூட இது தொடர்பில் வெளியாக இருந்த நிலையில் அதற்கு தடையேற்படுத்ததப்பட்டது.

இவ்வாறு, சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் அன்றைய நிலையில் வழங்கப்பட்டால் மக்கள் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கி மைத்திரியை தோற்கடித்து விடுவார்கள் என்று கூறி, வேறொன்றை மனதில்  வைத்து இந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதில் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் வெற்றி கண்டனர்.

ஆனால் இது அல்ல உண்மை... சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் கிடைத்து விட்டால் சாய்ந்தமருது மக்களால் தாங்கள் நிராகரிக்கப்பட்டு, அதாஉல்லாவின் செல்வாக்கு அதிகரித்து விடலாம் என்ற பீதியினாலேயே சில முஸ்லிம் அரசியல்வாதிகள் மஹிந்தவின் தலையில் விடயத்தை போட்டு இந்த வர்த்தமானி அறிவித்தலை சுய நலத்துக்காக தடை செய்வதில் இரவு பகலாக ஈடுபட்டிருந்தார்.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் கிடைக்கப் போகிறது.. இன்றிரவு எமக்கு விடிவு என்று அந்த ஊர் மக்கள் ஆவலுடன் காணப்பட்ட போது, கொழும்பிலிருந்து சில முஸ்லிம் அரசியல்வாதிகளால் இது கிடைத்தால் தாங்கள் தோற்கப் போகிறோமென்ற ஆதங்கங்கத்தில் அநியாயம் செய்வதில் ஈடுபட்டிருந்தனர் என்பதே உண்மை.

வெளிப்படையாகச் சொன்னால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் விவகாரத்தில் திரிகரணசுக்தியுடனான செயற்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சாய்ந்தமருது தனியாக பிரிவதனையும் விரும்பவில்லை.

அவ்வாறு பிரிந்தால்  தங்கள் அரசியல் இருப்பு இறுதி செய்யப்பட்டு அரசியல் வாழ்க்கையே கபனிடப்படும் என்ற எண்ணம் அந்தக் அந்தக் கட்சியைச் சேர்ந்த இருவருக்கு இன்றுவரை இருந்து வருகிறது. இதன் காரணமாகவே கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்றுவரை இந்த விடயத்தில் இரு தலைக்கொள்ளி எறும்பாக துடித்துக் கொண்டிருக்கிறார்.

கட்சியின் பல முக்கியஸ்தர்கள், வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் போது, குறித்த இரு நபர்களையும் இழப்பதால் ஏற்படக் கூடிய பாதக நிலைமை தொடர்பில் ஹக்கீம் அதிகம் சிந்திப்பதால்தான் இன்று கூட சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் தொடர்பில் அந்தக் கட்சி வெளியில் சொல்வது போன்று ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்பதனை நான் தெளிந்து கொண்டுள்ளேன்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமை நினைத்திருந்தால் இந்த விடயம் என்றோ தீர்க்கப்பட்டு இன்று சாய்ந்தமருவில் ”சாய்ந்தமரு நகர சபை உங்களை வரவேற்கிறது” என்ற பதாகை காணப்பட்டிருக்கும்.

மேலும், இன்றைய நிலையிலும் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் வேண்டுமென்றும் நாங்கள் பெற்றுத் தருவோம் என்றும் மீண்டும் முருங்கையில் ஏறும் வேதாளமாக முஸ்லிம் காங்கிரஸ் காணப்படுகிறது.பல வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. அமைச்சர் பைஸர் முஸ்தபாவையும் சந்தித்து பேசியுள்ளார்கள்.  

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றத்துக்கு கட்சிக்குள் இருவர் காட்டும் அதீத எதிர்ப்புக்கும் மத்தியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தை முன்னெடுத்துள்ளார். ஆனால், இதிலும் போட்டி அரசியலே காணப்படுகிறது. மக்களின் அபிலாஷைகளுக்காக இந்த விடயத்தை அவர்கள் இன்று கையில் எடுக்கவில்லை என்பது மட்டும் உண்மை.

சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை என்ற விடயத்தில் அமைச்சர் ரிஷாத் இன்று காட்டி வரும் அக்கறை காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் இவ்வளவு தீவிரம் காட்டி வருகிறது.

அமைச்சர் ஹக்கீமை விட பல விடயங்களை  அமைச்சர் ரிஷாதினால் இந்த அரசாங்கத்தின் ஊடாகச் செய்ய முடிகிறது. சமூகத்துக்காக யாரின் கை, கால்களையாவது பிடித்து காரியம் செய்தவதில் ரிஷாத் பலே மனிதர் என பல அரசியல்வாதிகள் அமைச்சர்கள் என்னிடம் கூறுவர்.

இந்த அடிப்படையிலேயே இப்போது இந்தக் காரியத்தில் அவர் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் வெற்றி பெறும் வாய்ப்பு அவருக்கு உள்ளது. சாய்ந்தமருது மக்களும் மகிழ்ச்சியடையும் நிலை ஏற்படும் என நம்புகிறேன். ஆனால், வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் தாழி உடைந்து போகுமா அச்சமும் கவலையும் என்னுள் உள்ளன. 

அமைச்சர் ரிஷாதினால் இந்த விடயம் கைகூடுமாக இருந்தால்  அதனை முஸ்லிம் காங்கிரஸ் விரும்புமா என்பதும் இங்கு கேள்விக்குறிதான். ஏனெனில், அரசாங்கமோ அமைச்சர் பைஸர் முஸ்தபாவோ இந்த விடயத்தில் நல்ல முடிவைத் தந்தாலும் ஹக்கீம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால். நிச்சயம் அமைச்சர் ரிஷாத் தோல்வியடைவார். அத்துடன் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் கிடைக்கவும் மாட்டாது என்பதும் எனது ஆரூடம்.

ஏனெனில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதான தளம் கிழக்கு என்பது அரசுக்கும் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் அங்கு முன்னெடுக்கப்பட வேண்டியவை தொடர்பில் யார் எந்தத் திட்டங்களை முன்வைத்தாலும் ஒரு தடவை முஸ்லிம் காங்கிரஸிடம் கேட்டுப் பார்ப்போம் என்ற நிலைப்பாடு அரசாங்கத்துக்கும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கும்  இருக்கும்.  இதுவே யதார்த்தம். இந்த நிலையில், ரிஷாதின் கோரிக்கையை நிறைவேற்ற ஹக்கீம் தரப்பு விரும்பாது.

மேலும், அமைச்சர் ரிஷாத் பதியுதீனால்  சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி  சபை கிடைத்தால் அந்தப் பிரதேச மக்கள் ரிஷாத் பதியுதீனுக்கே கால காலமாக தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருப்பர். அவரது கட்சி அங்கு காலூன்றி விடும். மேலும் ஊரான் வீட்டு கோழியை அறுத்து உம்மா பேரில் கத்தம் ஓதக் கூடியவர்கள் யார் என்பதனையும் சாய்ந்தமருது மக்கள் அரசியல் அடிப்படையில் கடந்த காலத்தில் ஒரு பாடமாக கற்றுக் கொண்டனர்.இது முகாவினருக்கு பாதக அமையும்.

அத்துடன் முஸ்லிம் காங்கிரஸுக்கான சாய்ந்தமருது என்ற தளம் அகில இலங்கை மகக்ள் காங்கிரஸுக்கு உரித்தாகி விடுவதனை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். 

சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகம் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டுப்பாட்டுக்குள்  சென்று முஸ்லிம் காங்கிரஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள நிலையில், இன்னொரு பேரிடியை முஸ்லிம் காங்கிரஸ் தாங்குவதற்கான நதிமூலத்தை ஒரு போதும் அது ஏற்படுத்தாது.

இறுதியாக, முஸ்லிம் காங்கிரஸிடம் நான் கேட்பது  இதுதான்.. அண்மையில் அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரை முஸ்லிம் காங்கிரஸ் தலைவருர் அமைசச்ர் ஹக்கீமும் அகில இலங்னை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனும் சந்தித்து பேனீர்கள்தானே?

அது போன்று சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் இணைத்துச் சென்று மனம் திறந்து இன்னொரு தடவை பேசுங்களேன் பார்ப்போம். அவ்வாறு ஒன்று நடந்தால் உங்கள் மீது பழியும் வராது... பம்மாத்துகாரர்கள் என்ற இழி நாமம் வராது அல்லவா?

7 கருத்துரைகள்:

சித்தீக் காரியப்பர் அவர்களே, பிரதேச வாசம் கூறி மக்களை ஏமாற்றி தங்களின் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முனையும் கூறு கெட்ட அரசியல் வாதி போல் நீங்களும் இந்த விடயத்தை கையில் எடுத்துள்ளீர்கள். முடிந்தால் சாய்ந்தமருது, கல்முனை மாநகர சபையில் இருந்து பிரிந்து சென்றால், கல்முனை மாநகர சபையின் அரசியல் அதிகாரத்துக்கு என்ன நடக்கும், அது எத்தனை கூறுகளாக பிரிக்கப்படுவதட்கு எதுவாக இருக்கும், சாய்ந்தமருது பிரிந்த பின் மிச்சமுள்ள பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் அவர்களது அரசியல் அதிகாரத்தத்துக்கும், பொருளாதாரத்துக்கு என்ன நடக்கும்??? போன்ற விடயங்களை அக்கு வேறு ஆணிவேராக பகுப்பாய்வு செய்து, அதன் பின்பும் நீங்கள் சாய்ந்தமருது தனியாக பிரிந்து செல்வது எல்லா பிரதேச முஸ்லிம் மக்களுக்கும் நன்மையே ( அரசியல், பொருளாதாரம், வியாபாரம்... போன்றவை ) என்ற உத்தரவாதத்துடன் உங்களால் இந்த கருத்தை முவைக்க முடியுமா???

இந்த பதிவின் மூலம் ரிசாத்துக்கும் அவரது அடிவருடிகளுக்கும் ஆதரவாக மூத்த பத்திரிகையாளர் சித்தீக் காரியப்பரும் களம் இறங்கி உள்ளார் என்றே தெரிகிறது. JM இதை பதிவிடும் என நம்புகிறோம். அப்படி இல்லாவிட்டால் இந்த பதிவு அகற்றப்பட்டுள்ளது என்றாவது குறிப்பிடவும்.

சித்தீக் காரியப்பர் அவர்களே, பிரதேச வாசம் கூறி மக்களை ஏமாற்றி தங்களின் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முனையும் கூறு கெட்ட அரசியல் வாதி போல் நீங்களும் இந்த விடயத்தை கையில் எடுத்துள்ளீர்கள். முடிந்தால் சாய்ந்தமருது, கல்முனை மாநகர சபையில் இருந்து பிரிந்து சென்றால், கல்முனை மாநகர சபையின் அரசியல் அதிகாரத்துக்கு என்ன நடக்கும், அது எத்தனை கூறுகளாக பிரிக்கப்படுவதட்கு எதுவாக இருக்கும், சாய்ந்தமருது பிரிந்த பின் மிச்சமுள்ள பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் அவர்களது அரசியல் அதிகாரத்தத்துக்கும், பொருளாதாரத்துக்கு என்ன நடக்கும்??? போன்ற விடயங்களை அக்கு வேறு ஆணிவேராக பகுப்பாய்வு செய்து, அதன் பின்பும் நீங்கள் சாய்ந்தமருது தனியாக பிரிந்து செல்வது எல்லா பிரதேச முஸ்லிம் மக்களுக்கும் நன்மையே ( அரசியல், பொருளாதாரம், வியாபாரம்... போன்றவை ) என்ற உத்தரவாதத்துடன் உங்களால் இந்த கருத்தை முவைக்க முடியுமா???

இந்த பதிவின் மூலம் ரிசாத்துக்கும் அவரது அடிவருடிகளுக்கும் ஆதரவாக மூத்த பத்திரிகையாளர் சித்தீக் காரியப்பரும் களம் இறங்கி உள்ளார் என்றே தெரிகிறது. JM இதை பதிவிடும் என நம்புகிறோம். அப்படி இல்லாவிட்டால் இந்த பதிவு அகற்றப்பட்டுள்ளது என்றாவது குறிப்பிடவும்.


Another rare and concrete exposer of the HYPOCRITIC AND DECEPTIVE political manupilations of the so-called Muslim political leaders has been exposed, Alhamdulillah, no other than by Senior Tamil Journalist (Brother) A.S. Siddique Karriapper of Sainthamaruthu (Tamil: சாய்ந்தமருது, Sinhala: සායින්දමරුදු) one of a dense city in Sri Lanka with a population of 25,412 and is located on the east coast of Ampara District of Eastern Province, Sri Lanka. The Muslim community has to realize what the community is loosing due to the “petty selfish Muslim party politics” and the struggle for power by these unscrupulous dishonest political characters who are dominating the political platform of our community, because they think that they can for ever “GONAATA ANDANDA PULUWAGN” the humble “PAMARAMMAKKAL” and the “PORAALIGAL.” The Muslim Community has to thank sincere and concerned Muslim Journalists like Senior Tamil Journalist (Brother) A.S. Siddique Karriapper of Sainthamaruthu for exposing the TRUTH, behind the political games that are played by our Muslim politicians at the cost of the LEGITIMATE claims of our community at large. “The Muslim Voice” is NOT attempting to “fish in troubled waters” in the Eastern Province, but “The Muslim Voice” wishes to “kindle” the political aspirations and inspirations of our community for the betterment of the Muslims of Sri Lanka at large, Insha Allah. “The Muslim Voice” fully supports the kind request made by Senior Tamil Journalist (Brother) A.S. Siddique Karriapper of Sainthamaruthu that Minister Rauf Hakeem and Minister Rishad Bathiudeen to jointly try and make another appeal to the government to declare Sainthmaruthu as a separate LOCAL AUTHORITY/LOCAL BODY under the new “DELIMITATION” programme that is in progress to hold local government elections in the near future, and Sainthamaruthu to be FREE from the administration of the Kalmunai Municipal Council, Insha Allah. Sainthamaruthu is a developing city with strengths in the education, business, agriculture, fisheries, sports, arts, culture and religion and this is the only city of Sri Lanka with hundred percentage of Muslims, Alhamdulillah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, EVEN WITHIN THE SLMC and the ACMC and or the National Congress, especially from among the YOUTH and the “poraalikkal and pamaramakkal”, has to emerge to face the political challenges through RIGHTFUL legislations and constitutional changes adopted in our favour in the coming future, and face the local government elections that are expected soon, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்கு இன்னமும் ஹக்கீமை நம்பி அந்த மக்களின் அறியாமையை காட்டுகின்றது .ஏனெனில் ஹக்கீம் அவர்கள் அபிவிருத்தியில் ஆர்வம் இல்லாதவர் .அம்பாறை மக்கள் பற்றி அவர் புரிந்து வைத்துள்ள விடயம் என்னவென்றால் அவர்களிடம் அபிவிருத்தியை காட்டி வாக்குகள் சேகரிப்பதை விடவும் தலைவர் அஷ்ரப் அவர்களை ஞாபக மூட்டினால் இலகுவாக வாக்குகள் சேகரித்து விடலாம் என்ற நம்பிக்கையாகும்

You are correct but kaththam not in Islam so you can't say like that.

சாய்ந்தமருதுக்கென்று உள்ளூராட்சி சபை அமைக்கப்பட வேண்டும் என்று கோருவது ஒரு புதிய வேண்டுகோள் அல்ல. மாறாக ஏலவே இங்கிருந்து வந்த அரசியல் அதிகார உரிமையின் தொடர்ந்தேர்ச்சியான முன்வைப்பே இதுவாகும்.

ஏனெனில் 'கரைவாகு பற்றுக்கு ஆங்கிலேயர் காலத்தில் கிராம சேவகர் பிரிவுகளுக்கு இலக்கமிட்ட போது சாய்ந்தமருதுக்கு கே/பி47 தொடக்கம் கே/பி53 வரையான 7 குறிச்சிகளையும் உள்ளடக்கி 1928 இல் கரைவாகு தெற்கு கிராமசபை உருவாக்கப்பட்டு 10 வட்டாரங்களாகவும் அது வகுக்கப்பட்டும் இருந்தன.

நீண்ட காலமாக சாய்ந்தமருதுக்கென்று தனியாக கரைவாகு தெற்கு கிராமாட்சி மன்றம் இயங்கி வந்தது. இது நமது நாட்டில் 1987 இல் கொண்டுவரப்பட்ட 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பின்பே கல்முனையோடு இணைக்கப்பட்டு கல்முனை பிரதேச சபையின் எல்லைக்குள்ளானது.

இருந்தாலும் சாய்ந்தமருதுக்கென்று ஒரு தனியான உள்ளூராட்சி சபை உருவாக்கப்படவேண்டும் என்பது நியாயபூர்வமான கோரிக்கை என்பதை நிதானமாகவும் சரியாகவும் சிந்திப்பவர்கள் மறுக்க மாட்டார்கள் ஏனெனில் இருந்த உரிமையை உறுதிப்படுத்தும் கோரிக்கையே இது தவிர, புதிதாக ஒரு பகுதியை பிரித்துக்கோரும் ஒரு பிரிவினைவாதச்செயல் அல்ல.

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை கோரிக்கை மும்மூரமாக முன்வைக்கப்பட்ட காலங்களில் மிகவும் மௌனமாகவும் அதில் இருந்து விலகி இருக்கும் போக்கையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடைப்பிடித்து வந்திருக்கிறது.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காட்டும் தயக்கம்தான் அவர்களை சந்தேகிக்க வைப்பதும், சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கேள்விக்கு உட்படுத்தப்படுவதாகவும் அமைகிறது.

நன்றி : சிரேஸ்ட ஊடகவியாலாளர், நண்பர் நூறுல் ஹக் அவர்களின் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி.


Iwwaru Piradeasa waadam koori thiriya onkalukku wekkam illaya?

Post a Comment