Header Ads



"நீஷா இலங்கைக்கு வந்தது, மாப்பிள்ளை தேடி அல்ல" கங்காணி வேலை பார்க்கும் மைத்திரி..!


நீஷா பிஷ்வால் இலங்கைக்கு 6 தடவைகள் வந்தது உள்ளுரில் மாப்பிள்ளை தேடுவதற்கு அல்ல என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இலங்கையில் அவர் கண்ட பொருளாதார அபிவிருத்தியை நான் காண வேண்டுமாயின் நீஷா பிஷ்வாலின் மூக்கு கண்ணாடியை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

ராஜகிரியிவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று -18- நடைப்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் உதவி செயலாளர் நீஷா பிஷ்வால் அண்மையில் இலங்கைக்கு வந்து சென்றார். 20 மாதங்களில் 6 தடவைகள் அவர் இலங்கைக்கு வந்து சென்றதாக குறிப்பிட்டார். அவர் ஏன் இங்கு வந்தார? தனது திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கவா? இல்லை. சிலாபம் பக்கம் தென்னம் தோப்பை வாங்கி, பின்னர் அந்த பக்கம் போகும் போது அதனை பார்த்துக் கொள்ளும் கங்கானி ஒழுங்காக செயற்படுகின்றாரா? என்பதை கண்காணிக்கும் வழக்கம் எமது செல்வந்தர்கள் மத்தியில் உள்ளது.

இதே போன்று நிலைமையில் தான் இன்று இலங்கை உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கங்காணியின் வேலையை தான் செய்கின்றார். அமெரிக்காவின் தோட்டமாக இலங்கை உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கை இந்தியாவிற்கும் நாட்டின் ஏனைய பகுதிகளை அமெரிக்காவும் தனதாக்கிக்கொள்ளும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. நாடு பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் இலங்கை பாரிய முன்னேற்றம் கண்டுள்ளதாக நீஷா பிஷ்வால் கூறுகின்றமை ஆச்சரியம் அளிக்கின்றது.

அடுத்த தடவை அவர் இலங்கை வந்தால் நிச்சயம் நீஷா பிஷ்வாலின் மூக்கு கண்ணாடியை வாங்கி நான் போட்டு பார்க்க வேண்டும் என குறிப்பிட்டார்.

1 comment:

  1. நிஷா இங்கு இடக்கிட வருவதால் தான் வட-கிழக்கு மாகாணசபை நன்றாக இயங்குகின்றன, அரசியல்வாதிகளினதும் (பின்கதவு மினிஸ்டர்கள்) இராணுவத்தினரும் தலையீடுகள் இல்லாமல்.

    கொழும்பில் வெள்ளை வான் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.