Header Ads



பல்டி அடித்த ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதியை மீறி இரு அமைச்சர்களுக்கு அதிசொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 118 கோடி ரூபாவை செலவிட்டு அமைச்சர்களுக்காக கொள்வனவு செய்யப்படவிருந்த சொகுசு வாகனங்களை மூன்று மாதங்களுக்கு இடை நிறுத்தியுள்ளதாக பிதமர் அறிவித்திருந்தார்.

தற்போது வரையில் பிரதி அமைச்சர் நிமல் லன்சா மற்றும் தலதா அத்துகோரலவுக்கான இரண்டு வானங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜுன் மாதம் 07ஆம் திகதி கிட்டத்தட்ட 118 கோடி ரூபாவுக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட குறை நிரப்பு மதிப்பீடு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

எனினும் குறித்த சந்தர்ப்பத்தில் நாட்டில் ஏற்பட்டிருந்த மண்சரிவு, வெள்ளம் மற்றும் சலாவ வெடிப்பு போன்ற அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாமல், வாகனத் கொள்வனவு செய்வதற்கு கோடி கணக்கில் பணம் செலவிடுவது தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

அதன் பின்னர் ஜுன் 10ஆம் திகதி அந்த வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் மக்களின் வாழ்ககை நிலை சீர்செய்யவதற்காகவும், வாகன கொள்வனவை மூன்று மாதங்களுக்கு தாமதிப்பதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க திரைச்சேரிக்கு உத்தரவிட்டதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டிருந்தன.

பிரதமர் உத்தரவிட்டு இன்று வரையில் ஒரு மாதமேனும் நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.