Header Ads



புரோக்கர் மிலிந்தவின் ஏற்பாட்டில் மைத்திரி - கோத்தா இரகசிய சந்திப்பா..?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் மிகவும் முக்கியமான இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட செயற்பட்டு வருவதாக தெரியவருகிறது.

மிக் விமானக் கொள்வனவு தொடர்பான மூல ஆவணம் காணாமல் போனது சம்பந்தமாக 25ம் அதாவது இன்று விபரமான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன கடந்த 18ம் திகதி இலங்கை விமானப்படையின் சட்டப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

மிக் விமான கொள்வனவு தொடர்பான விசாரணைகள் மீண்டும் முன்னோக்கி வந்துள்ளதால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அச்சமடைந்துள்ளதுடன் தனது அச்சம் குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, ஜனாதிபதியின் இணக்கத்தை பெற்ற பின்னர், கோத்தபாயவுடனான சந்திப்புக்கு ஏற்பாடுகளை செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற தேவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இருப்பதால், அவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பார் என கூறப்படுகிறப்படுகிறது.

ஏதோ ஒரு விதத்தில் கோத்தபாய ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைக்க முடிந்தால், அது மகிந்த தரப்பினரை வலுவிழக்க செய்து விடும் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.