Header Ads



பெருநாள் வாழ்த்துச் சொல்வது, மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்டதா..?

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி-

சஹாபாக்கள் பெருநாள் வாழ்த்துக்களை தங்களுக்கு மத்தியில் பரிமாறியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக ( தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்) என்ற பதத்தை தங்களுக்கு மத்தியில் பரிமாறிக் கொண்டதாக பல செய்திகள் இடம்பெறுகின்றன.

ذكر ابن التركماني في الجوهر النقي حاشية.   البيهقي ( 3/ 320 – 321 ) ، قال : قلت : وفي هذا الباب – أي التهنئة بالعيد – حديث جيد أغفله البيهقي ، وهو حديث محمد بن زياد ، قال : كنت مع أبي أمامة الباهلي وغيره من أصحاب النبي صلى الله عليه وآله وسلم ، فكانوا إذا رجعوا يقول بعضهم لبعض : ( تقبل الله منا ومنكم ) ، قال : أحمد بن حنبل : إسناده جيد . اهـ .

இப்னுத்துர்க் மானி ரஹ் அவர்கள் அல்ஜௌஹருந் நகிஹாஷியதுல் பைஹகியில்
( 3/320-321) பெருநாள் தினத்தில் வாழ்த்துத் தெரிவித்தல் சம்பந்தமான செய்தி (இஸ்னாத் ஜெய்யித்) அறிவிப்பாளர் வரிசை நல்ல தரத்தில் உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

 மேலும் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ் அவர்களும் அதே கருத்தையே கூறியுள்ளார்கள்.

அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்கள் ஸஹீஹுல் புஹாரிக்கான தனது விளக்கவுரை பத்ஹுல் பாரியில் ஜுபைர் பின்நுபைர் ரஹ் வாயிலாக (இஸ்னாத் ஜெய்யித்) அறிவிப்பாளர் வரிசை தரமான ஒரு செய்தியையும் பதிவு செய்துள்ளார்கள்.

அதாவது சஹாபாக்களும் பெருநாள் வாழ்த்துக்களை  (தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்) என்ற பதத்தினூடாக தங்களுக்கு மத்தியில் பரிமாறிக் கொண்டதாக பதிவு செய்துள்ளார்கள்.

இமாம் அல்பானி ரஹ் அவர்களும் தமாமுல் மின்னாவில் 365 பக்கத்தில் இமாம் சுயூதி ரஹ் அவர்கள் ஹசன் என்ற தரத்தில் இது பற்றிய செய்தியை அறிவித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்கள்.

ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹ் அவர்கள் தனது மஜ்மூஉல் பதாவாவில் பெருநாள் வாழ்த்துக்கள் எப்படி எந்த வகையில் சொல்லப்பட்டாலும் அது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒரு காரியமல்ல என்ற கருத்தை கூறியுள்ளார்கள்.

அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.