July 15, 2016

இஸ்லாத்தில் ஈர்ப்புகொண்ட சுவாதி, நோன்பும் இருந்தார்


மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கு, திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரின் கைதின் மூலம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டது. ராம்குமார் கைதில் காவல்துறை சொன்ன தகவல்களில் உள்ள ஓட்டைகள் குறித்து சாமானியனுக்கும் ஏக சந்தேகம் வந்தது. ஊடகங்கள் கேட்க மறுத்த கேள்விகளை சமூக ஊடகங்கள் முன்வைத்தன.

ஒருபுறம் இந்தக் கொலைக்கு பிலால் என்பவர்தான் காரணம் என இந்துத்துவ ஆதரவு பிரபலங்கள் சமூக ஊடகங்களில் பரப்பினர். இன்னொரு புறம் இந்துத்துவ ஆதரவு வழக்கறிஞர் தாமாக முன்வந்து ராம்குமாருக்கு வாதாடப் போவதாக அறிவித்தார். பிறகு, பின்வாங்கினார்.

ராம்குமார் இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டதாக பலரும் எழுதிவந்த நிலையில், ராமராஜை வழக்கறிஞராக ராம்குமார் குடும்பம்  நிறுத்தியது.

ராம்குமார்தான் குற்றவாளியா என கண்டறிவதற்காக அண்மையில் புழல் சிறையில் அடையாள அணிவகுப்பும் நடந்தது. தற்போது ராம்குமாரை காவல் எடுத்து விசாரித்து வருகிறது காவல்துறை.

ஆரம்பம் முதலே ஸ்வாதியின் குடும்பம் இவ்வழக்கில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டது. அவர்கள் குடும்பத்திலிருந்து வழக்கை திசைதிருப்பும் வேலைகளும் நடப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் திசை சரியான திசையில் செல்லவில்லை என சமூக செயற்பாட்டாளர் திலீபன் மகேந்திரன் தெரிவித்து வருகிறார். ராம்குமாரின் வழக்கறிஞருடன் தற்சமயம் இந்த வழக்குக்காக உதவிவருகிறார். இவர் தெரிவித்துக்கும் கருத்துகள் இந்த வழக்கின் திசையை மாற்றக்கூடும் என தெரிகிறது.

“ஸ்வாதிக்கு ஏற்கனவே திருமணம் ஆனவர், பதிவுத் திருமணம் அது.  இவர் ரம்ஜான் நோன்பிருந்ததும் தெரிய வந்துள்ளது.  இன்னொரு பக்கத்தில் ஸ்வாதியின் தந்தை சந்தான கோபலகிருஷ்ணன். ஆர். எஸ். எஸ். இயக்கத்தில் ஈடுபாடு உடையவர். ஸ்வாதியின் சித்தப்பா கோவிந்தராஜன் விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர். ஸ்வாதியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிவப்பாக, உயரமாக இருந்த நபர் அறைந்திருக்கிறார். இவர் யார்? ஸ்வாதி கொலையான நிலையைப் பார்த்த அவருடைய அப்பாவின் மேனரிசம் சந்தேகத்தைக் கிளப்பக்கூடியது. பதற்றமில்லாமல் மிகவும் கேஷுவலாக இருந்தார் அவர். ஸ்வாதியின் சித்தப்பா ஸ்வாதியின் உடலை படம் எடுத்துக்கொண்டே இருந்தார். இவர்களுடைய முகத்தில் தங்கள் அன்புக்குரியவரை இழந்துவிட்டோம் என்று எவ்வித வருத்தமும் வெளிப்படவில்லை. சந்தேகமும் சந்தேகத்துக்கான காரணமும் கூடிக்கொண்டே போகிறது” என்கிற திலீபன், விரைவில் ஆதாரங்களை வெளியிடுவோம் என்கிறார்.


5 கருத்துரைகள்:

Msr jaffna m news tamil nadu police atha paathu kolluvanga neenga sri lanka news poodunga aan poi vaththanthija parapuringa

இந்தியாவை விடவா. இந்தியா மீடியாவே போயின் பிறப்பிடமேச்சே. எங்களுக்கு தெரியும் இந்தியன் மீடியா எவ்வாறு செயல் படுகிறது என்று. முதலில் சென்னையை பார்த்துவிட்டு , கொழுபை கொஞ்சம் வந்து பாரும் , இலங்கை எவ்வளவு சுத்தம் என்று புரியும்.

Hmmm! I think its hurting you too much, isn't it? Do you know who spread rumours first about this girl's murder? And do you know why?

சுவாதியின் மரணம் அல்லது கொலை நமக்கு தேவையா?

இந்தச் செய்தி எப்படி இருக்கிறது என்றால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் .... ஆர்.எஸ்.எஸ். தொடர்பில் உள்ள சுவாதியின் தந்தையே சுவாதி மதம் மாறும் அளவுக்குத் துணிந்ததால் அவரது தந்தையே கௌரவக் கொலை செய்து விட்டார் என்று செய்தி பரப்பி பிலால் மாலிக் மீதான சந்தேகத்தின் நிழலை (லவ் ஜிஹாத்) அகற்றுவது ..... ராம்குமார் தவறு செய்யவில்லை .... ஹிந்து வெறியர்கள் செய்துள்ளார்கள் என்று பொய்த் தகவலைப் பரப்பி தலித்துகளை அரவணைத்து அவர்களையும் மதம் மாற்ற முயற்சிப்பது ....

Post a Comment