Header Ads



"ஆட்சிக் கவிழ்ப்பு சூத்திரதாரிகளின் தலைவிதிக்காக கவலைப்படுவோர், துருக்கியின் நண்பர்கள் அல்ல"

தன்னை அவமதித்ததாக தனிநபர்கள் பலருக்கு எதிராக தொடுக்கப்பட்ட எல்லா வழக்குகளையும் நல்லெண்ண அடிப்படையில், வாபஸ் பெற்றுகொள்ளவதாக துருக்கி அதிபர் ரசீப் தயிப் எர்துவான் அறிவித்திருக்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிபரை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் ஏறக்குறைய 2000 குற்றச்சாட்டுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டிருக்கின்றன.

தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பில் கொல்லப்பட்டதாக அவர் கூறிய 200-க்கும் மேலானோருக்கு, அங்காராவில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் பேசியபோது, அமெரிக்காவையும், ஐரோப்பிய அரசுகளையும் எர்துவான் மீண்டும் தாக்கி பேசியுள்ளார்.

துருக்கியின் ஜனநாயகத்த்தை விட ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணமாக இருந்தவர்களின் தலைவிதியை பற்றி கவலைப்படுவோர், துருக்கியின் நண்பர்களாக இருக்க முடியாது என்று அவர் கூறினார்.

முன்னதாக, அந்த பிரதேச அமெரிக்க உயர் கட்டளையதிகாரி தளபதி ஜோசப் வேட்டெல், ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணமாக இருந்தோர் சார்பாக இருந்ததாக எர்துவான் குற்றஞ்சாட்டி இருப்பது, துரதிஷ்டவசமானது, முற்றிலும் தவறான கணிப்பு என்று விவரித்திருந்தார்.

No comments

Powered by Blogger.