Header Ads



பொது பலசேனாவுடன் பேச்சுவார்த்தை

-விடிவெள்ளி ARA.Fareel-

முஸ்­லிம்­க­ளுக்கும் அல்­லாஹ்­வுக்கும் எதி­ரான கருத்­து­களைத் தொடர்ந்து பரப்­பி­வரும் பொது­ப­ல­சேனா அமைப் பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருடன் பேச்­சு­வார்த்தை நடாத்தி அதற்­கான விளக்­கங்­களைக் கோரு­வ­தற்கு தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது.

ஞான­சார தேரரை பேச்­சு­வார்த்­தைக்கு அழைக்கும் கடி­தத்தை விரைவில் அனுப்பி வைக்­க­வுள்­ள­தாக தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரி­வித்தார்.பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் தொடர்ந்து பல­வ­ரு­டங்­க­ளாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கிறார்.

அளுத்­க­மையில் நடை­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்கள் அங்கு அவர் ஆற்றி உரை­யினை அடுத்தே இடம்­பெற்­றன. முஸ்­லிம்­களை அவர் ஏன் எதிர்க்­கிறார். முஸ்­லிம்கள் மீது ஏன் வைராக்­கியம் கொண்­டுள்ளார் என்­பதை அறிந்து கொள்­வது அவ­சி­ய­மாகும். அறிந்து கொண்­டாலே அடுத்த கட்ட நகர்வு பற்றி யோசிக்­கலாம் என்றும் இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி கூறினார்.

இது தொடர்­பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ஞான­சார தேரரின் பேச்­சுக்­களைப் பற்­றியும் அவர் முஸ்­லிம்­க­ளுக்கும் அல்­லாஹ்­விற்கும் நபிகள் நாய­கத்­திற்கும் சவால்­வி­டு­கின்­ற­மை­யையும் உரிய இடங்­களில் முறைப்­பாடு செய்­வ­தி­னாலும்; வழக்கு தாக்கல் செய்­வ­தி­னாலும் மாத்­திரம் தடுத்து விட முடி­யாது.

பல வரு­டங்­க­ளாக அவர் இத­னையே செய்­து­வ­ரு­கிறார். அதனால் அவரை நேரில் அழைத்துப் பேச்­சு­வார்த்தை நடாத்­த­வேண்டும். அவர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­களை அறி­ய­வேண்­டி­யுள்­ளது. இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டுகள் ஏற்­படும் போது அவை பேச்­சு­வார்த்­தைகள் மூலமாகவே தீர்த்­துக்­கொள்­ள­மு­டியும்.

தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மென தனி­யான ஒரு அமைச்சு நிறு­வப்­பட்­டுள்­ளமை நாட்டு மக்­க­ளி­டையே சக­வாழ்­வினை பலப்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வாகும்.இத­ன­டிப்­ப­டையில் ஞான­சார தேரரை வெகு­வி­ரைவில் அழைத்து பேச்­சு­வார்த்தை நடாத்­த­வுள்ளோம். பேச்­சு­வார்த்­தையின் போது அவர் முஸ்­லிம்கள் மீது கொண்­டுள்ள சந்­தே­கங்­களை களை­வ­தற்குத் தயா­ரா­கவே உள்ளோம் என்றார்.

மஹி­யங்­க­னையில் கடந்த வெசாக் நோன்­மதி தினத்­தன்று இடம்­பெற்ற சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் மஹி­யங்­க­னையில் வெளி­யிட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­துகள் முஸ்­லிம்கள் மத்­தியில் அச்­ச­நி­லையை உரு­வாக்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த வெசாக் நோன்­மதி தினத்­தன்று மஹி­யங்­கனை விகா­ரையில் மார்க்கப் பிர­சங்கம் செய்த மத­குரு ஒருவர் முஸ்­லிம்­களைப் பற்றி தவ­றான கருத்­துகள் வெளி­யிட்­டதால் ஆத்­தி­ர­ம­டைந்த பங்­க­ர­கம்­மன கிரா­மத்தின் முஸ்லிம் இளை­ஞர்கள் பௌத்த கொடி­யினை எரித்­தனர். இத­னை­ய­டுத்து எட்டு முஸ்லிம் இளை­ஞர்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர்.

இத­னை­ய­டுத்து மஹி­யங்­க­னையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சுவ­ரொட்­டிகள் ஒட்­டிய குற்­றச்­சாட்டின் கீழ் சந்­தே­கத்தின் பேரில் இரு பெரும்­பான்மை இனத்­த­வர்­களும் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்து மஹி­யங்­க­னையில் நடந்த ஆர்ப்­பாட்­டத்தில் ஞான­சா­ர­தேரர் உரை­யாற்­றினார்.

பொலிஸார் உரிய நட­வ­டிக்கை எடுக்­காது விடின் மஹி­யங்­க­னை­யிலும் அளுத்­கம போன்று வன்­செ­யல்கள் இடம்­பெ­றலாம் என எச்­ச­ரித்தார். அவ­ரது உரைக்கு எதி­ராக முஸ்லிம் அமைப்­புகள் பொலிஸ்மா அதி­ப­ரிடம் முறை­யிட்­ட­த­னை­ய­டுத்து ஞானசார தேரர் அல்லாஹ்வுக்கும் நபிகள் நாயகத்திற்கும் சவால் விட்டார்.முறைப்பாட்டின் பிரதிகளை நபிகள் நாயகத்தின் ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்பி வைக்குமாறு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இந்நிலையிலேயே தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஞானசார தேரரை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

14 comments:

  1. It seems you guys would surrender to these racist bikkus.

    ReplyDelete
  2. இந்தப் பேச்சுவார்த்தை எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பது தெரியாது.ஆனால் மதநல்லினக்க சட்டத்தை கொண்டு வந்தால் ஞானசார போன்ற இனவாதிகளின் வாய்களுக்கு நிரந்தர பூட்டு போடலாம் அல்லவா. இந்த சட்டத்தை அமுல்படுத்துவதில் இருக்கின்ற தடையை எவ்வாறு வெல்ல முடியும் என்பதை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஓரணியில் நின்று முடிவுகளை எடுத்து ஒர் ஆக்கபூர்வமான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் போது நிச்சயமாக ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.

    ReplyDelete
  3. இந்தப் பேச்சுவார்த்தை எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பது தெரியாது.ஆனால் மதநல்லினக்க சட்டத்தை கொண்டு வந்தால் ஞானசார போன்ற இனவாதிகளின் வாய்களுக்கு நிரந்தர பூட்டு போடலாம் அல்லவா. இந்த சட்டத்தை அமுல்படுத்துவதில் இருக்கின்ற தடையை எவ்வாறு வெல்ல முடியும் என்பதை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஓரணியில் நின்று முடிவுகளை எடுத்து ஒர் ஆக்கபூர்வமான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் போது நிச்சயமாக ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.

    ReplyDelete
  4. விரைவாகவும் அவசியமாகவும் செய்ய வேண்டிய நிகழ்வாகும். இப்பேச்சு வார்த்தைக்கு BBS சம்மதித்து இப்பேச்சு வார்த்தை வெற்றி பெற அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். இதில் விளக்கமுள்ள, சகிப்புத்தன்மையுள்ள உலமாக்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  5. இவனுடன் பேசுவதில் எந்த பயனும் இல்லை, இவன் ஒரு அடிமாடு. மற்றும் இவனுடன் பேசும் பொது இவனது குதர்கமாகவும் நேரடியான எந்த பதிலும் இவனிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது கடைசியில் மூக்கு உடைபடுவதுதான் உண்டு.

    ReplyDelete
  6. He is not doing anything unkownly...he is getting paid by the western weapon markets.

    ReplyDelete
  7. Why double standard ? BBS have carried out many violences and destruction to the citizen of srilanka who stick to ISLAM, HINDUISM and CHRISTIANIT"Y in this country. Even after enough evidences of his crimes espeically at Aluthgama.. How come still Government and Justice authority not taking him for punishment ? Why they wanted to have talk with BBS?

    First they should be punished for their crimes in the past and in the present time. Then let them turn to peace human behaviour and learn how to respect the rights of other human. If they turn back to human behaviour it is enough.

    MARA protected and supported BBS for the sake of international influenes.. MY3 and RANIL have no difference to MARA in dealing when it comes to BBS issue.

    Current government spend more time in finding political criminals BUT when it come to BBS crimes against other religion they have different standard. What type of Justice system they follow to protect this crystal clear criminal group?

    ReplyDelete
  8. You are great Minister Fowzy. These type of approach will help us to solve many problems. The way the matter in question handled by muslim politicians and muslim interested organizations is unacceptable and against the teachings of Islam. Take the icident of garbage throwing to Prophet Mohammad (PBUH) and this teach us the tolerance. Finally what happened; the garbage thrower revert back to Islam.
    It is not that far to get the BBS and others to the correct path of Islam.

    ReplyDelete
  9. Fawsi pechchu waarthaikku pohumpothu kattaayam Quran hadhees patri thelivulla, naattil iyangum islaamiya amaippukkal patri poorana arivulla, saralamaha singala moli pechchuththiranulla oruvarai alaiththuchchellal Miha avasiyamanathu...

    ReplyDelete
  10. இவனிடம் பேசினால் தற்போது இவனுக்கு எதிராக நீதி மன்றத்தில் இருக்கும் வழக்குகளை வாபஸ் பெற சொல்வான் அப்போது என்ன செய்வது இந்த முயற்சியும் ஆட்சியாளர்களின் போலி வேசம் தான் இவான் என்ன சொல்லுவான் இஸ்லாமிய அடிப்படைவாதம் இருக்கு அதை நிறுத்த வேண்டும் எணீறு முன்வைப்பான் அது நம்மில் உள்ள சில சபைகளுக்கு ஆறுதல் தரும் வரவேற்பார்கள் இவானுடன் யாரும் எந்தப் பேச்சுக்கும் போக கூடாது நீதி மன்றத்தின் சட்டத்தின் மூலம்மட்டுமே இவனை அடக்க வேண்டும்

    ReplyDelete
  11. இவனிடம் பேசினால் தற்போது இவனுக்கு எதிராக நீதி மன்றத்தில் இருக்கும் வழக்குகளை வாபஸ் பெற சொல்வான் அப்போது என்ன செய்வது இந்த முயற்சியும் ஆட்சியாளர்களின் போலி வேசம் தான் இவான் என்ன சொல்லுவான் இஸ்லாமிய அடிப்படைவாதம் இருக்கு அதை நிறுத்த வேண்டும் எணீறு முன்வைப்பான் அது நம்மில் உள்ள சில சபைகளுக்கு ஆறுதல் தரும் வரவேற்பார்கள் இவானுடன் யாரும் எந்தப் பேச்சுக்கும் போக கூடாது நீதி மன்றத்தின் சட்டத்தின் மூலம்மட்டுமே இவனை அடக்க வேண்டும்

    ReplyDelete
  12. இந்தப் பேச்சுவார்த்தை எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பது தெரியாது.ஆனால் மதநல்லினக்க சட்டத்தை கொண்டு வந்தால் ஞானசார போன்ற இனவாதிகளின் வாய்களுக்கு நிரந்தர பூட்டு போடலாம் அல்லவா. இந்த சட்டத்தை அமுல்படுத்துவதில் இருக்கின்ற தடையை எவ்வாறு வெல்ல முடியும் என்பதை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஓரணியில் நின்று முடிவுகளை எடுத்து ஒர் ஆக்கபூர்வமான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் போது நிச்சயமாக ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.

    ReplyDelete
  13. There is no point to talk with them. It's not that they don't know about Islam or anything. They have a clear goal they have been guided and funded by some influential groups.
    It's time to talk with Muslims and untie. We are a divide society. It will be easy for the enemy dismantle us. Their first goal is to dismantle our economy.
    We Muslims has to be wise , we shouldn't let our emotions to over come our strength. Dot get too excited, don't let our mouth loose. Don't give unwanted statements , specially these parasite muslm politicians a hypocrites shouldn't betray our Muslims for their political gain.

    ReplyDelete

Powered by Blogger.