Header Ads



ராஜபக்சர்கள் தப்பிக்க, இப்படியும் ஒரு காரணமா..?

கடந்த ஆட்சியின் போது ராஜபக்சர்கள் மற்றும் அவர்களது நண்பர்களினால் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகளை வெளிக்கொண்டு வர சமகால அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய அரசாங்கத்தினால் விசேடமாக நிறுவப்பட்டுள்ள பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவின் பிரதானி ஒருவர், குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை விடுவிப்பதற்காக இலஞ்சம் பெற்று வருவதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ராஜபக்சர்களினால் மிகவும் நுட்பமான முறையில் நிதி மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாட்டு வல்லுநர்களின் ஆதரவு மற்றும் பயற்சி இந்த விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் விசாரணை மேற்கொள்கின்ற சில அதிகாரிகள் குறித்த விசாரணை சம்பவங்கள் தொடர்பில் குற்றவாளிகளை சட்டத்தில் இருந்து விடுவிக்கும் வகையில், உரிய ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்காமல் குற்றவாளிகளை அதில் இருந்து விடுவிப்பதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் சந்தேகங்கள் எழுந்திருந்தன.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் விசாரணை பிரிவின் பிரதானி மிகவும் நுட்பமான முறையில் மில்லியன் கணக்கில் இலஞ்சம் பெற்று கொண்டுள்ளதாக பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரியை உடனடியாக பதவி நீக்க முடியும். எனினும் நிதி மோசடி விசாரணை தொடர்பில் இலங்கை பொலிஸ் பிரிவில் உள்ள திறமையான அதிகாரி என்பதனால் இந்த நிலைமையினை கட்டுபடுத்துவதில் சிக்கலான நிலைமைக்கு அரசாங்கம் முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணைகள் நிறைவு செய்து ஏனைய நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு நிதி மோசடி விசாரணை பிரிவினால் பாரிய அளவில் ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அதில் உள்ள குறைப்பாடுகளே அதனை நீதிமன்றில் சமர்ப்பிதற்கு தாமதம் ஏற்படுதவதாக அந்த திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அதற்கமையவே ராஜபக்சர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் சட்டத்திற்கு முன் இருந்து தப்பிக் கொள்வதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.