Header Ads



"நிதி குற்றப்புலனாய்வு பிரிவில், ரணில் விக்ரமசிங்கவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்"

நிதி குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தே இவ்வாறு விசாணைக்கு உட்படுத்து வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் காலத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளமை உண்மை என்பது குறித்து தெரியவந்துள்ளது.

அத்துடன், முன்னாள் ஆளுநர் விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்து என்பதே உண்மை.

இதனிடையே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கிவின் ஆணைக்கு இணங்கவே, ஆளுநர் செயற்பட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகின்றது.

இதேவேளை, முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் காலத்தில் பிணை முறி வழங்களில் ஏற்பட்ட ஊழல் மோசடிகளினால், மத்திய வங்கிக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது.

இது எமது நாட்டின் அரச சொத்துக்களில் செய்யப்பட்ட பாரிய மோசடியாகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்கு பொறுப்புக் கூற வேண்டிய முதல் பிரஜையாவார்.

இதன் காரணமாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.