Header Ads



இஸ்லாம் காட்டும் பாதையே, இன்றைய உலகுக்கு அவசியமானது - ஜனாதிபதி மைத்திரி


சமாதானம், நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை, தாராளத்தன்மை என்பவற்றினூடாக மனிதகுலம் மேம்பாடடைய இஸ்லாம் காட்டும் பாதையே இன்றைய உலகுக்கு மிக அவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருக்கும் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் எடுத்துக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

ஒரு உன்னத சமயக் கோட்பாட்டைப் பின்பற்றும் இஸ்லாமியர்களினால் மனித சமூகத்திற்கு கிடைத்துள்ள சிறந்த வாழ்க்கைப் பெறுமானங்கள் குறித்த ஆழ்ந்த புரிதலுடன், ரமழான் நோன்பை நிறைவு செய்து ஈதுல் பித்ர் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இலங்கையிலும், உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இயற்கையின் அருளான இளம் பிறையைக் கண்டு ஆரம்பிக்கும் ரமழான் நோன்பு ஷவ்வால் புதிய பிறையின் தோற்றத்துடன் நிறைவுபெறுகிறது. நோன்பு காலப்பகுதியில் இஸ்லாமிய பக்தர்கள் சொகுசு வாழ்விலிருந்து விடுபட்டு ஆன்மீக வாழ்வை நோக்கி வருவதன் மூலம் ஒரு முன்னுதாரணமான சமய அனுஷ்டானத்தில் ஈடுபடுகின்றனர். பகல் முழுதும் நோன்பிருப்பதன் மூலம் ஏழைகளின் பசியின் வலியை தாமும் உணர்ந்துகொள்ளும் உயர்ந்த மானிடப் பண்பை வெளிப்படுத்துகின்றனர்.

உண்மையில் இது சமத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு சர்வதேசப் பிரகடனமாகும். உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய சமூகத்தினர் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரே நோக்குடன் பேராசைகளை தள்ளிவைத்து மானிடத்திற்கு வளத்தையும் தெளிவான பன்மைத்துவத்தையும் சேர்க்கும் வகையில் பரஸ்பர மரியாதை, சமாதானம், நல்லிணக்கம், தாராளத்தன்மை மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் என்பவற்றின் ஊடாக மனித குலத்தின் மீதான அன்பையும் கருணையையும் வெளிப்படுத்துகின்றனர்.

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான நெருங்கிய உறவை குறிக்கும் வகையில் உடலினாலும் உள்ளத்தினாலும் அமைந்த ஆன்மீக தூய்மையை அடையாளப்படுத்தும் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு அவர்களது பிரார்த்தனைகள் வெற்றியளிக்க எனது நல்வாழ்த்துக்கள். 

6 comments:

  1. மனித குலம் மேம்பாடடைய ஜனாதிபதி அடையாளப்படுத்தும் இஸ்லாமியப் பண்புகளுக்கு அவரைச் சுற்றி உள்ள முஸ்லிம்கள் முன்னுதாரணமாக இருந்தால், அதுவே அவர் இஸ்லாத்தில் நுழைவதற்கான உந்து சக்தியாக இருக்கும்.

    அவரது வாழ்த்துக்கள் முழு உலக முஸ்லிம்களுக்குமானது என்பது பாராட்டப்பட வேண்டியதாகும்.

    ReplyDelete
  2. -He needs more votes-
    அவர் மட்டுமா அப்படி, கனடா பிரதமர் தொடக்கம் ஜெயலலிதா வரை அதற்காக தான்.

    ReplyDelete
  3. வாக்குக்காகப்
    பேசியிருந்தாலும்கூட
    வாக்கு நாணயமாகத்தான்
    பேசியிருக்கிறார்கள்!

    ReplyDelete

Powered by Blogger.