Header Ads



இலங்கை இளைஞர், சவூதியில் கொலை - நண்பரான யெமன் பிரஜை கைது

- பீ.எம்.அன்வர் -

இலங்கை வாலி­ப­ரொ­ருவர் சவூதி அரே­பி­யாவின் “யன்பு” பிர­தே­சத்தில் வைத்து யெமன் பிரஜை ஒரு­வரின் கத்திக் குத்­துக்கு இலக்­காகி உயி­ரி­ழந்­துள்ளார். கொலை செய்­யப்­பட்­டவர் கெக்­கி­ராவ –ஹோறாப்பொலையைச் சேர்ந்த சியாம் சிஹாப்தீன் (34வயது) என்ற வாலி­ப­ரென இனங்­கா­ணப்­பட்­டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சவூதி அரே­பியா – யன்பு பிர­தே­சத்­தி­லுள்ள கண்­ணாடித் தொழிற்­சா­லை­யொன்றில் பணி­பு­ரிந்து வந்த நிலையில் சியாம் சிஹாப்தீன் சனிக்­கி­ழமை நடு­நிசி 12 மணி­ய­ளவில் அவ­ரது உற்ற நண்­ப­னெனக் கூறப்­படும் யெமன் நாட்டு வாலி­ப­ரொ­ரு­வரின் கத்திக் குத்­திற்கு இலக்­காகி உயி­ரி­ழந்­துள்ளார்.

சம்­பவ தினம் இரவு தனது அறையில் ஏதோ ஓர் அலு­வலில் சியாம் சிஹாப்தீன் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த வேளையில் அந்த அறையில் அவ­ருடன் ஒன்­றாகத் தங்­கி­யி­ருக்கும் யெமன் பிரஜை சியா­முக்குப் பின்­பு­ற­மாக நின்று அவ­ரது கழுத்துப் பாகத்தில் கூரிய கத்­தி­யினால் குத்­தி­யி­ருப்­பது தெரிய வந்­தி­ருப்­ப­தா­கவும் அவலக் குரல் கேட்டு அவ்­வி­டத்­திற்கு விரைந்த பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் அங்கு சூழ்ந்துள்ளனர்.

இதே சமயம் யெமன் பிரஜை தான் ஒரு­வரைக் குத்திக் கொலை செய்­து­விட்­ட­தாக தனது கைத்­தொ­லை­பேசி மூலம் அவ­னா­கவே பொலி­ஸா­ருக்கு தகவல் கொடுத்­துள்ளான்.

சம்­பவ இடத்­திற்கு விரைந்த பொலிஸார் குற்­று­யிராய் கிடந்த சியாம் சிஹாப்­தீனை வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­துடன் குறித்த யெமன் பிர­ஜையைக் கைது செய்து அழைத்துச் சென்­றனர்.

வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட சியாம் சிஹாப்தீன் பின்னர் சிகிச்­சைகள் பல­னின்றி அங்கு உயி­ரி­ழந்­த­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யான காலஞ் சென்ற சியாம் சிஹாப்தீன் கடந்த பத்து வரு­டங்­க­ளா­க சவூ­தியில் தொழில் புரிந்து வரு­ப­வ­ரெ­னவும் அவ்­வப்­போது விடு­மு­றையில் இலங்­கைக்கு வந்து செல்­ப­வ­ரெ­னவும் கூறப்­ப­டு­கின்­றது.

தனது சவூதி தொழில்­களை கைவிட்டு கடந்த 6,7 மாதங்­க­ளுக்கு முன்னர் ஊருக்குத் திரும்­பி­யி­ருந்த இவரை ஆறு மாதங்­க­ளுக்கு முன்னர் “விஸா” அனுப்பி மீண்டும் சியாமை சவூ­திக்கு அழைத்துக் கொண்­டவர் அவரைக் கத்­தியால் குத்திக் கொன்­ற­தாகக் கூறப்­படும் இதே யெமன் நாட்டு வாலிபன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கொலை தொடர்பான விசாரணைகள் சவூதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால் சியாமின் ஜனாஸாவை இலங்கைக்கு எடுத்து வருவதில் சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரியவந்துள்ளது.s

No comments

Powered by Blogger.