Header Ads



குர்பான் பற்றி, ரிஸ்வி முப்தி


இவ்­வ­ரு­டத்­துக்­கான குர்பான் கட­மையை எது­வித தடை­க­ளு­மின்றி நிறை­வேற்­று­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பெற்றுக் கொடுக்கும் என உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

குர்பான் கால எல்­லையில் மாடுகளை எடுத்துச்செல்லும் போது பொலி­ஸா­ரினால் விதிக்­கப்­படும் தடைகள், மாடுகள் கைப்­பற்­றப்­ப­டுதல் போன்ற பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்றுக் கொள்­­வ­தற்­காக உலமா சபை அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுடன் பொலிஸ்மா அதி­பரை நேரில் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ளது. சட்­ட­ரீ­தி­யாக தேவை­யான ஆவ­ணங்­க­ளுடன் போக்­கு­வ­ரத்து செய்­யப்­படும் மாடு­க­ளுக்கு எது­வித தடை­களும் விதிக்­கப்­ப­டக்­கூ­டாது என்­பதில் உல­மா­சபை உறு­தி­யாக இருக்­கி­றது. 

பொலிஸ்மா அதிபர் புதி­தாக பத­வி­யேற்­றதும் உலமா சபையின் தலைமைக் காரி­யா­ல­யத்­துக்கு வந்து எமது ஆசீர்­வா­தங்­களைப் பெற்றுக் கொண்டார்.

அப்­போது நாம் குர்பான் கட­மையின் போது நிலவும் அசௌ­க­ரி­யங்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் அவ­ரிடம் எடுத்துக் கூறினோம்.

இவ்விடயம் கவனத்திற்கொள்ளப்படும் என்று அன்று அவர் எம்மிடம் உறுதியளித்துள்ளார் என்றார்.

No comments

Powered by Blogger.