July 25, 2016

இலங்கையில் மீண்டும், மகிந்தவின் ஆட்சி..?

-சட்டத்தரணி பஸ்லின் வாஹிட்-

பத்து வருடங்கள்   இலங்கையை ஆட்சி செய்த மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு 2015 ஜனவரியில் நடந்த  தேர்தலில் தோல்வியடைந்தது.2017 வரை ஆட்சி செய்ய அதிகாரம் இருந்தும் முன்கூட்டியே தேர்தலை நடத்த்தினார் மகிந்த.தன்னுடைய சோதிடரின் ஊகத்தை மட்டும் நம்பி களத்தில் குதித்து யாருமே எதிர்பாராத வகையில் தோலவி கண்டார்.சிறுபான்மையினரின் வாக்குகளை துச்சமென மதித்து முழுக்க முழுக்க பெரும்பான்மை சமூகத்தை நம்பி இருந்ததால் வந்த வினை என்று கூட கூறலாம்.

2015 ஜனாதிபதித் தேர்தலிலும் சரி அதற்கு பின்னரான பொதுத் தேர்தலிலும் இன்றைய ஆட்சிக்கு வழி வகுத்தவர்கள் சிறுபான்மையினரே.நல்லாட்சி என்ற பெயருடன் இன்று இலங்கையில் நடைபெறும் ஆட்சி மக்களுக்கு எதிர்பார்த்த விடிவை கொடுக்கவில்லை என்றுதான்  தோன்றுகிறது. தமிழ் மக்கள் சிறிது திருப்தியுடன் இன்றைய ஆட்சிக்கு ஆதரவாக செயற்பட்டாலும் முஸ்லிம் மக்களிடத்தில் எந்தளவு ஆதரவை ஆட்சி பெற்றுள்ளது என்பது சற்று சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாக உள்ளது.ஆட்சி மாற்றத்தின் போது 95% மேலான மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தது மகிந்த வின் ஆட்சியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக எழுந்த சக்திகளை கட்டுப்படுத்த எந்த வித நடவடிக்கைகளையும் அவரது ஆட்சி செய்யாததே பிரதானமாகும்.அன்று பொது பல சேனாவின் அராஜகங்களை கண்டும் காணாதது போல் மகிந்த இருந்தார்.BBS இற்கு  எதிராக நடவடிக்கை எடுத்தால் அது தனது பெரும்பான்மை சிங்கள வாக்காளர்களின் ஆதரவை இழக்க வழி சமைத்து விடும் என்று அவர் சிந்தனை செய்து இருக்கலாம் .ஆனால் அதுவே  அவருக்கு சாவு  மணியாகியது.

சிறிசேனவின் ஆட்சி முஸ்லிம் மக்களுக்கு எதிரான சிங்கள சக்திகளின் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து  விடும் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தனர்.ஆட்சியின் ஆரமபம் அவ்வாறு தான் இருந்தது .BBS ஞானசார தேரர் விளக்க மறியலில் கூட வைக்கப்பட்டார்.எனினும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் கதையாகி விட்டது இன்றைய ஆட்சியும்.மகிந்தவின் ஆட்சியில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு நடந்த அநீதிகளை  போல்  இன்றைய அரசும் முஸ்லீம் மக்களுக்கு  எதிராக நடக்கும் செயல்களுக்கு எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்  கொள்ளாது மௌனமாக இருப்பது புரியாத புதிரே.

ஞானசார தேரர் கடந்த ஆட்சியைவிட பலமான முறையில் இன்றும் முஸ்லீம் மக்களுக்கு எதிராக கோஷமிடுகிறார்.அண்மையில் நபிகள் நாயகத்துக்கு இழுக்கு வரும் வகையில் ஞான சார தேரர் பகிரங்கமாக பேசினார்.அது மகிந்த ஆட்சியில் பேசியதை விட கடுமையான தொனி.ஆனால் இன்றைய  ஆட்சியும் அன்று போல்  இப்படி நடந்து கொள்ளவது சிங்கள  இனவாதம் இன்னும் தொடருவதையே நிரூபிக்கின்றது.

அது ஒருபுறம் இருக்க பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறிசேனவுக்கு  வாக்களித்தது முக்கியமாக மகிந்த ஆட்சியின் தலை விரித்தாடிய  ஊழலை  ஒழித்துக்கட்டுவதற்காகவாகும். .மகிந்தவும்,  குடும்பமும்,அமைச்சர்களும்   அன்று  அரச சொத்துக்களை சூறையாடினார்கள் என்றும் குடும்ப ஆட்சியை நடத்தினார்கள் என்றும் பரவலாக குற்றம் சுமத்தப்பட்டது.அதற்கு  எதிராகத்தான் மக்களும் கிளர்ந்து எழுந்து மகிந்தவை வீழ்த்தினர்.ஆனால் மக்களின் எதிர்ப்பார்ப்பு தவிடு பொடியாகி ஏமாற்றம் அடைந்ததாகவே இன்றைய இலங்கையர் மனநிலை.அன்று போல் ஊழல், மோசடி தொடரத்தான் செய்கின்றது. இதனை உறுதிப்படுத்துவதற்கு அமைச்சர் கிரியெல்ல அவர்கள் அண்மையில் ஜேவிபி உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்வியிற்கு பாராளுமன்றத்தில் அளித்த பதில் போதுமானது.தனது அமைச்சு மூலமாக 48 பேருக்கு ஆலோசகர் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அத்தனை பேரும் கடந்த காலங்களில் தனது கட்சியின் வெற்றிக்காக உழைத்தவர்கள் என்றும் கூறியது இவ்அரசும் ஊழல் ஆட்சியை கொண்டு செல்வதை  உறுதிப்படுத்தியது..கேலிக்குரிய விடயம் என்னவென்றால் இந்த ஆலோசகர்களில் 90% க.பொ.த.சாதாரண தரமும் சித்தி அடையாதவர்களாம்.ஆனால் நியமனம் பெற்றவர்கள் 55 இற்கும் மேல் என்பதே உண்மை.

மகிந்த தனது ஆட்சியில் 250 இற்கும் மேட்பட்டவர்களை ஆலோசகர்களாக நியமித்து இருந்தாராம்.தாங்கள் அதற்கு குறைவானவர்களையே நியமனம் செய்துள்ளாராம். இதுதான் அவர்கள் இதற்கு  கூறும் நியாயம்.அன்று  ஜனாதிபதியின் நியமனத்துக்கு  போட்டியாக இன்று ஒரு அமைச்சரின் ஆலோசகர்களாக  மட்டும் 50 ற்கு   மேல்.இன்னும் வெளிவராத ஆலோசகர்களும் இணைப்பாளர்களும் பல  அமைச்சர்களின்  கீழும் உள்ளனர். அவை படிப்படியாக வெளிவரலாம்.மொத்தத்தில் அன்றைய மகிந்த ஆட்சியின் அடாவடித்தனங்களும் ஊழல்களும்  இன்றும் தொடரத்தான் செய்கின்றது.

அரசின் நிலைமை  அவ்வாறு இருக்க மறுபுறம் மக்களுக்கு சுமக்க முடியாத வரிச்சுமை.வாழ்க்கைச் செலவு அதிகம், .ஊழல் நிறைந்த ஆட்சி,அமெரிக்க ஆதிக்கம் இவையெல்லாவற்றையும் மையமாகக் கொண்டு கூட்டு எதிரணி ஏற்பாடு  செய்யும் பாத யாத்திரை அரசுக்கு மற்றுமொரு தலையிடி.அரசை வீழ்த்த எதிரணியின் அத்திவாரமாக  இது இருந்தாலும் அதுவே  இந்த அரசுக்கு சாவு  மணியாகினாலும் புதினப்பட ஒன்றுமில்லை.சிங்கள மக்களின் பெரும்பானவர்கள் மகிந்தவின் ஆதரவாளர்களே.அந்த ஆதரவு முன்னரை விட இன்று இன்னும் அதிகரித்து உள்ளது.அதனால்தான் அரசு உள்ளுராட்சித் தேர்தல்களை பின் போட்டு வருகின்றது.தேர்தலை நடத்தினால் கணிசமான சபைகளை மகிந்த தலைமையிலான கூட்டணி வெல்லக் கூடும் .

அரச முக்கியஸ்தர்களின் பேச்சுக்கள் அரசை எந்த வகையிலும் 2020 வரை வீழ்த்த  முடியாது என்று எவ்வளவு  தான் கூறினாலும் அவர்கள்  அரசு வீழ்ந்து விடுமோ  என்ற பயத்தில் பேசுவது உன்னிப்பாக கவனித்தால் புரியும்.கூட்டு எதிரணி கொழும்பில் இலட்சக் கணக்கானவர்களை  ஒன்று சேர்த்து தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினால் அரபு வசந்தம் போல் அரசாட்சி ஆட்டம் காணும் என்பதில் ஐயமில்லை.

இன்றைய அரசு அமெரிக்க சார்பானது. அதனால் முஸ்லிம் மக்களுக்கு சார்பாக எந்தளவு தூரத்துக்கு செயற்படப் போகின்றது என்பது சந்தேகத்துக்கு உரியதே. அதனால் முஸ்லீம் மக்களின் ஆதரவையும் அரசு படிப்படியாக இழக்க நேரிடும்.எனவே கூட்டு  அரசாங்கம் வீழ்ச்சியை நோக்கி செல்கின்றதா ?பொறுத்திருந்து பார்ப்போம்.

எவ்வாறெனினும் சுருக்கமாகக் கூறின் இலங்கையில் இன்றைய ஆட்சியும் முன்னைய ஆட்சியும் பாரிய வேற்றுமையை கொண்டதல்ல. தலைமை மட்டுமே மாறியுள்ளது.ஆகவே இன்று இருப்பதும் மகிந்த ஆட்சி தான் என்றால் அது மிகையாகாது.

10 கருத்துரைகள்:

Siru.panmai.makkal.oru kalamum ondum seiya mudiyathu.muslim.akiya.ninkal tamil molikkavathu munnurumai valankai tamilarodu sernthu poradunkal ninkal sinkalavarai ethirththum tamilarai ethurththum srilankavil valamudiyathu athe mathiriththan tamilarkal akiya nankalum sinkalavarai ethirthu valamudiyathu sinkalavarkalukkum tamilarkalukkum moli pirachchanai thavira matham onduthan buddust and hindus same caltre enkalukku matha pirachchanai varathu anal unkalukku srilankavil entha arasankam vanthalum unkalukku enipirachchanai

you be come very good news writer, do not stop continue candidate are should know what is going on now with this government

there are no change between former Government and current one

Mutal la ungada 40 varusa pirachinaya mudiungo. After that u can talk about others.

ஆட்சி இல்லாமலே தமிழர் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயத்தை நாம் இலகுவில் மறக்க மாட்டோம், அதற்கு சிங்கள பெரும்பான்மை எவ்வளவோ பரவாயில்லை. தமிழ் மக்களும் சரி அரசியல்வாதிகளும் சரி முஸ்லிம் களுக்கு நண்பனாக இருந்ததைவிட சிங்களவர்கள் இருந்திருக்கிறார்கள். BBS வரும் முன் எல்லாம் நலமாகத்தான் இருந்தது

சொல்லாமல் இருக்க முடியவில்லை. இன்றய ஆட்சி ரணில் சார்ந்தது, அது அமெரிக்கா சார்ந்தது. எஞ்சி இருப்பது, தற்போது மஹிந்த சார்ந்தது, அது சீனா, இந்தியா, ஈரான் சார்ந்தது. சீனா, இந்தியா, ஈரான் போன்ற நாடுகள் முஸ்லிம்களோடு கடும் போக்கு கொண்டுள்ளனர். உதாரணமாக சீனா முஸ்லிம்கள் நோன்பு வைப்பதையே தடுத்துள்ளனர். இந்தியா காஷ்மீர் முஸ்லிம்களை கொன்று புதைக்கின்றனர். அமெரிக்கா தன் நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்வது ஒப்பீட்டு அளவில் குறைவு. சிந்திக்கவும். பப்பாளிப்பழமா, பலாப்பழமா. எது வேண்டும். இரண்டில் ஒன்றை விழுங்கித்தான் ஆக வேண்டும்.

Unkalukku.eppo.ellai.appothe.erunthichchi.athu.vilankuthillai.antha.kalaththil.ltte.erunthathala.arasankaththukku.onnume.seiyamudiyathu.karanam.ennventral.antha.unkalukkadu.pirachchanai.pottal.tamilarkalum.muslimkaum.ondu.sernthal.sinkalavarkalukku.pirachchanai.thaikam.athanalthan.arasankam.unkalai.sellapillaimathiri.parththathu tamilarkal.pirachchanai.anupaviththarkal.ltte.pirachchanai.mudinthathu.oru.vakail.naallathu.tamilarkalukku.enna.pirachchani.oru.20.varusaththukku.munnadi.mudinthu.erunthal.evvaluvu.tamilan.seththurukka.mattan tamilarkalin.mukkiya.soththu kalvi. Alinthu erukka mattathu tamilarkalin porulatharam alinthurukka mattathu konjam late athanal ellathathaium elanthu vittom tamilan ulakaththin murththa kudimakan avanukku endu oru varalaru erukku eppo ellattium. Orukalaththil nankal ninaththai adaivom

Mr srithran

Search and see which society is having strong and nameful history in the world, who is ruled and show the right path to world. History express strongly and proudly that is Muslims.

You are telling joking serious stories like vijakanth speak in Tamil cinemas, and we found you u r a good punch dialoguer qualified for Tamil cinemas story making.

One think you must understan “ kulakkira nai kadikkathu”.

மகிந்த வரக்கூடாது, வரவே கூடாது!

Who said Muslim strong in world rimmy? Most of them terrorists.U have history in Ur ass and pussy. U must find a own language. Why u talk in Tamil? It's ours. Fucking terrorist.

Post a Comment