Header Ads



காஷ்மீரில் நடப்பதென்ன..? தமிழ் மறவன்

70 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இல்லை. ஆனால் 1000ஆண்டுகளாக காஷ்மீரிகள் இருக்கிறார்கள். அவர்களின் காஷ்மீரம் இருக்கிறது
அப்போதும் அவர்கள் தனிநாடுதான்.

பிரிட்டிஷ் இந்தியாவில் கூட காஷ்மீர் இருந்ததில்லை .அப்போதும் அது தனிநாடுதான்.

1947-க்கு பிறகும் அது தனிநாடுதான்.

பிரிட்டிசார் 'இந்துக்கள்'அதிகமுள்ள நாடு இந்தியா என்றும், ,முஸ்லீம்கள் அதிகமுள்ள பகுதி மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்றும் நாடுகளை பிரித்து கொடுத்தனர்.

அப்போதும் காஷ்மீர் தனிநாடுதான்.

அப்போது காஷ்மீரை இந்து மன்னர் ஆண்டு வந்தார். காஷ்மீரில் முஸ்லீம்கள் அதிகமுள்ளதால் அது பாகிஸ்தானோடு இணைப்பதுதான் சரியானது என காஷ்மீர் மீது படையெடுத்தது பாகிஸ்தான்.

இந்து மன்னர் நேருவிடம் அடைக்கலம் கேட்டு தஞ்சமடைந்தார். நேரு தான் பிறந்த மாநிலமென்பதாலும்,பட்டேல் மற்றும் காங்கிரஸ் RSS இந்துத்துவா கும்பலின் அகண்ட பாரதம்,முஸ்லீம் வெறுப்பு,பண்டிட் பார்ப்பனர்கள் மீதான வர்க்கப்பாசம் காரணமாக காஷ்மீரை இவர்களும் கைப்பற்ற திட்டமிட்டனர்.

அப்போது அந்த மன்னரிடம் சில ஒப்பந்தங்கள் போடப் பட்டன.

காஷ்மீருக்கு தனிக்கொடி,தனிச்சட்டம், காஷ்மீரில் காஷ்மீரி அல்லாதவர்கள் நிலம் வாங்கக் கூடாது. ராணுவப் பாதுகாப்பு மற்றும் உதவிமட்டுமே இந்தியா செய்துதரவேண்டியது அதுவும் தற்காலிகமாக.

இந்தியாவும் பாகிஸ்தானை விரட்டுவதென்ற பெயரில் போரை தொடங்கியது.
ஐ.நா தலையிட்டு அவரவர் கைப்பற்றிய காஷ்மீர் அப்படியே இருக்கட்டும் என
ஒரு எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டை வகுத்தது.

அதாவது காஷ்மீர் என்ற தனிநாட்டை பாகிஸ்தான்,இந்தியா என்ற பயங்கரவாத நாடுகள் ஆக்ரமித்துக் கொண்டன. பாகிஸ்தான் செய்தது அயோக்கியத் தனமென்றால், இந்தியா செய்தது பச்சைத் துரோகமில்லையா?
இது பார்ப்பனீய மோசடியில்லையா?

370-வதாவது பிரிவில் எதையுமே அமல்படுத்தவில்லை. தனிச்சட்டம்,தனிக்கொடி பெயரளவுக்கு மட்டுமே. காஷ்மீரிகளல்லாதவர்கள் நிலம் வாங்கமுடியாது என்பதையும் மீறி 30%பேரை கள்ளதனமாக, கபடத்தனமாக குடியமர்த்தியுள்ளது பயங்கரவாத நாடான இந்தியா. ராணுவம்,காஷ்மீரிகளை ஒடுக்கவும்,கொல்லவும் மட்டுமே.

‪#‎காஷ்மீரிகள்_முடிவென்ன‬?

இரண்டுநாடும் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்பதுதான் காஷ்மீரிகள் நிலைபாடு. ஐ.நா வோ பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிறது.இந்தியாவோ, 60ஆண்டுகளாக இந்தக் கருத்தை மதிப்பதேயில்லை.
காஷ்மீரில் மூன்று பிரிவு கருத்துக்கள் இருக்கிறது.

1.தனிநாடாக இருப்பது
2.பாகிஸ்தானோடு இருப்பது.
3.இந்தியாவோடு இருப்பது

இப்படிப்பட்ட கோரிக்கையுடையவர்கள் சேர்ந்து நடத்தும் ஒரு பொது அமைப்புதான் ஹூரியத் அமைப்பு. அவர்கள் போராட்டமோ,ஊர்வலமோ நடத்தினால் அதில் காஷ்மீர் கொடி, பாகிஸ்தான் கொடியை கொண்டு வருவது வழக்கம்தான்.

இந்த 3மாதத்தில் மாலிக்,கிலானி, மீர்வாக் போன்ற காஷ்மீர் கட்சித்தலைவர்கள் தனித்தனியே ஊர்வலம்,போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதில் சில பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பாக்.கொடியுடன் வந்தனர்.

இதைக் கண்டித்துத்தான் இந்திய இந்துத்துவா பார்ப்பனிய ஊடகங்கள் கொந்தளிக்கின்றன,RSS சங்கபரிவார்  கொதித்தெழுகின்றன. காஷ்மீரை ஆக்ரமித்தது குற்றமில்லையாம்,  ஒப்பந்தத்தை மீறி நம்பிக்கைத் துரோகம் செய்தது குற்றமில்லையாம். 60ஆண்டுகளாக லட்சம் பேரைக் கொன்றது குற்றமில்லையாம்.

5 லட்சம் ராணுவத்தை நிறுத்தி காஷ்மீரை ஒடுக்கும் பயங்கரவாதம் குற்றமில்லையாம் ஒரு குச்சியில் பாக். கொடியை கொண்டுசென்றது பெரிய குற்றமாம். இதைக்கண்டிக்க பயங்கரவாத நாடான இந்தியாவுக்கு என்ன யோக்யதை இருக்கிறது?

இதற்கு ஐ.நா சொல்லும் பொதுவாக்கெடுப்பை நடத்துவதுதான் தீர்வு.அதை செய்ய பயங்கரவாத நாடான இந்தியா தயாராகப் போவதில்லை. இந்தப் பிரச்சனை தீரப் போவதில்லை.

வாக்கெடுப்பு நடத்தினால் பெரும்பான்மை மக்கள் தனிநாடாக போவதற்குத்தான் வாக்களிப்பார்கள். அதேபோல் தமிழ்நாட்டில் தமிழீழக்கொடியை கொண்டுபோவதும் பிரபாகரன் படத்தை வைப்பதும், புலிக்கொடியை மேடையில் வைத்து  பொதுக்கூட்டம் நடத்துவதும் எப்படி தவறில்லையோ அதே போல்தான் காஷ்மீரில் காஷ்மீர் கொடியை வைப்பதும், பாகிஸ்தான் கொடியை பிடிப்பதும் தவறில்லை.

பைவ்ஸ்டார் ஓட்டல்முன்பு பலநாட்டுக் கொடி பறக்கலாம் தப்பில்லை. ஐபிஎல் ஆட்டத்தில் வீரர்கள் தேர்வில் தேசம் பார்ப்பதில்லை. அந்நிய முதலீட்டில் கொடியும் பார்ப்பதில்லை,நாடும் பார்ப்பதில்லை. ஒரு மயிரும் பார்ப்பதில்லை.

இந்தியா காஷ்மீரை ஆக்ரமித்தது குற்றமில்லையாம். கொடியைப் பிடித்ததுதான் கொடும் குற்றமாம். ஆக்ரமிக்காதே ஆக்ரமிக்காதே காஷ்மீரை ஆக்ரமிக்காதே.. வெளியேறு வெளியேறு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான், இந்தியாவே வெளியேறு.

நன்றி.

No comments

Powered by Blogger.