Header Ads



துருக்கி ராணுவ சதியில், பங்கேற்றவர்களின் உடல்கள் எங்கு புதைக்கப்படும்..?

துருக்கி ஆட்சியை கவிழ்க்க அந்நாட்டு ராணுவம் முயன்று தோல்வியுற்றதை தொடர்ந்து, இதில் பலியான சதிகாரர்களின் உடல்களை புதைக்க விஷேட கல்லறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்தான்பூல் நகருக்கு வெளிப்புறத்தில் ஒரு புதிய கல்லறை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதன் முகப்பு பகுதியில் ‘Hainler Mezarligi’(ராஜதுரோகம் செய்தவர்களின் கல்லறை) என எழுதப்பட்ட அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லறையில் இதுவரை 34 வயதான தளபதி ஒருவரின் ஒரு உடல் மட்டுமே புதைக்கப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களில் ராணுவ புரட்சியில் ஈடுப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக கொண்டு வரப்பட்டு இந்த கல்லறையில் புதைக்கப்படும்.

இது குறித்து இஸ்தான்பூல் மேயராக Kadir Topbas பேசுகையில், ‘ராஜதுரோகம் செய்தவர்களுக்கு இது தான் சிறந்த தண்டனை. இந்த கல்லறையின் வெளிப்பகுதியில் அறிவிப்பு பலகையை அமைத்துள்ளோம்.

இதனை பார்த்து இவ்வழியாக செல்லும் மக்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ள சதிகாரர்களை சபித்துவிட்டு செல்வார்கள்’ என தெரிவித்துள்ளார்.

இந்த கல்லறைக்கு அருகில் தெரு நாய்களின் உடல்களை அடக்கம் செய்யும் இடம் ஒன்றும் அமைந்துள்ளது.

இப்பகுதியை பராமரிக்கும் Serhan Baturay என்பவர் பேசியபோது, ‘நாய்களை புதைக்கும் இடத்திற்கு அருகில் சதிகாரர்களின் உடல்களை புதைப்பதை நான் எதிர்கிறேன். ஏனெனில், அந்த சதிகாரர்களின் எழும்புகள் கூட உயிரிழந்த நாய்களின் உடல்களை தொடக்கூடாது.

ராணுவ சதி செய்தவர்களை இங்கு புதைப்பதற்கு பதிலாக அவர்களின் உடல்களை தீயிட்டு எரித்து கடலில் வீசியிருக்க வேண்டும்’ என கருத்து தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.