Header Ads



மலேஷிய எஜமானியால், துன்புறுத்தலுக்கு இலக்கான இலங்கைப் பெண்

தொழிலுக்காக மலேஷியா சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்து மீண்டும் நாடு திரும்பியுள்ளார் புத்தளத்தைச் சேர்ந்த குப்பன் லக்ஷ்மி புஷ்பகுமாரி.

புத்தளம், தில்லையடியைச் சேர்ந்த திருமணமான 24 வயதுடைய இவர், மலேஷியாவில் பணிபுரிந்த வீட்டின் எஜமானியால் துன்புறுத்தல்களுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

கடந்த 22 மாதங்களுக்கான சம்பளமும் இவருக்கு வழங்கப்படவில்லை.

குப்பன் லக்ஷ்மி புஷ்பகுமாரி கடந்த 2014 ஆம் ஆண்டு மலேஷியாவிற்கு தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்றிருந்த போதிலும், முதல் நான்கு அல்லது ஐந்து மாதங்களே சம்பளம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், எந்தவித முன்னறிவித்தலும் இன்றி தம்மை விமானத்தில் ஏற்றி நாட்டிற்கு திருப்பி அனுப்பியதாக அவர் கண்ணீருடன் குறிப்பிட்டார்.

தனக்கு நேர்ந்த விடயங்கள் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளதுடன், 22 மாத நிலுவை சம்பளத்தைப் பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் தொடர்புகொண்டு வினவியபோது, இரண்டு வாரங்களுக்குள் யுவதியை தொழில் வாய்ப்புக்காக அனுப்பிய முகவரை அழைத்து விசாரணை நடத்துவதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் உப்புல் தேசப்பிரிய கூறினார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை முகவரிடமிருந்து பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், முகவர் அதனைப் புறக்கணிக்கும் பட்சத்தில் அவர் மீது வழக்குத் தொடர்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உப்புல் தேசப்பிரிய மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.