Header Ads



இந்த அரசை பாதுகாக்க, பொதுமக்கள் பாதைக்கு இறங்க வேண்டும் - ரணில் அழைப்பு

-HAFEEZ-

ஊழல் பேர்வழிகளை அரசிலுள் உள்வாங்குவற்கே ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஒரு திருட்டுக் குழு குரல் எழுப்புவதாகவும் அதற்கு எந்த வகையிலும் தான் இடமளிக்கப் போவதில்லை என்றும் அதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க வேண்டும் என்றும் பிரதமர் ரனில் விக்கரமசிங்க கண்டியில் வைத்துத் தெரிவித்தார்.

கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் இன்று -23- இடம்பெற்ற ஐ.தே.க. அங்கத்தவர்களுக்கு இலத்திரனியல் அங்கத்துவ அட்டை வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார், அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஆட்சியில் எதனை எடுத்துக் கொண்டாலும் திருட்டும் ஊழலும் மளிந்து காணப்பட்டது. ஊழல் இல்லாத எந்த ஒரு நிறுவனமும் இருக்க வில்லை.

பில்லியன் கணக்கில் எமக்கு உதவிகள் வந்து சேர்ந்துள்ளன. அப்படியான உதவிகளை திருடாமல் பார்த்துக்கொண்டிருக்க சிலரால் முடியாது. இதனாலே அவர் ஆட்சி மாற்றம் ஒன்று தேவை எனக்கூக்குரலிடுகின்றனர்.

இதனை ஏற்க முடியாது.அப்படியான திருடர்களை சேர்த்துக்கொண்டு எமக்கும் திருடச் சொல்கின்றனர். அதனைச் செய்யமுடியாது.

கள்வர்களையும் ஊழல் பேர்வழிகளையும் உள்வாங்குவதற்காக அரசைப் புறட்டவேண்டும் எனக்கூறுபவர்களுக்கான நாம் எதனையும் அடிபணிந்து செய்ய மாட்டோம்.

எனவே ஊழல் பேர்வழிகளுக்கு இடம் கொடுக்காது நல்ல பல பணிகளைச் செய்ய முன்வந்துள்ள அரசை பாதுகாக்க பொதுமக்களாகிய நீங்கள் பாதைக்கு இறங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

3 comments:

  1. People power can shake any mighty power. Turkey am example. Ranil should be mindful of this. It is evident now yaha palanaya is deviating of his promise. Same people can over throw this govt as well. Only consolation is President and Prime Minister is
    clean.

    ReplyDelete
  2. People should fight against this government's arbitrary decisions,large scale corruptions and the Finance Minister who is riding on people's shoulder.

    ReplyDelete
  3. Ok hon.prime minister. We will come to forward.
    But your government should execute the All promises including Motorcycle for FIELD OFFICERS

    ReplyDelete

Powered by Blogger.