Header Ads



"பள்ளிவாசல்களை விட்டு, ஓட்டம்பிடிக்கும் இமாம்கள்"

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி -

ஆலிம்கள் உலமாக்களுக்கு ஏதாவது சொல்லிவிட்டால் கொதித்தெழும் நமது சமூகம் உண்மையில் உலமாக்களை நேசிக்கிரார்களா? என்றால்  இல்லை என்பது தான் பதிலாகவும் ட்டம்பிடிக்கும்.

பள்ளிவாசல்களில் இமாமாக கடமை புரியும் உலமாக்களுக்கு பிச்சைக்கார சம்பளத்தை கொடுத்து விட்டு நிர்வாகிகளும் ஊர்மக்களும் உலமாக்கள் உலமாக்கள் என்ற வாய் கிழிய கத்துவதில்  எந்த அர்த்தமும் கிடையாது.

அவர்களது ஊரில் ஹோட்டலில் ரொட்டி அடிப்பவர், மேசன் பாஸ், சாதரண கூலித்தொழிலாளர் இவர்களுக்கு மாதாமாதம் குறைந்தது முப்பதாயிரம் ரூபாய்கள் வருமானம் கிடைக்கிறது. ஆனால் பள்ளி இமாமுக்கு மட்டும் பத்தாயிரம் பதினைந்தாயிரம் ரூபாய்கள் கொடுத்து விட்டு அவர் பள்ளிக்குள்ளே முடங்கிக் கிடக்கவேண்டும் என்று நிபந்தனை வேறு.

அரை குறையாக படித்த, மூளைகெட்ட நிர்வாகிகள்தான் இன்றைய உலமாக்களை பிச்சைக்கார சமூகமாகவும், செல்வந்தர்களுக்கு முன் கைகட்டி நிற்கவும் வைத்துள்ளார்கள். தமது மனைவிக்கு பத்தாயிரம் ரூபாய்கள் பெறுமதியான ஒரு சாரி வாங்கிக்கொடுக்கின்ற நிர்வாகிகள் தமது பிள்ளைக்கு சிறு தலைவலி வந்தால் கூட ஸ்கேன் பண்ணி எக்ஸ்ரே எடுக்கும் பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி இமாமின் சொந்த குழந்தை வபாத்தானாலும் கடிதத்தில் கையொப்பம் வாங்கி காலையில் சென்று இரவுக்குள் வந்து விடுங்கள் என்று சொல்வதானது அவர்களை  மனித உருவம் கொண்ட மிருகங்கள் என்றே சொல்லவைக்கிறது.

பள்ளி இமாம்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பிச்சைக்கார சம்பளத்தை விட ஒரு சதம் கூட கூடுதலாக சென்றுவிடக்கூடாது என்று நினைக்கும் நிர்வாகிகள் ஆடம்பர அநாவசியமான தேவையற்ற செலவுக்காக வாரி வாரி இறைகிறார்கள்.

பள்ளி இமாமுக்கோ முஅத்தினுக்கோ சம்பளம் கொடுக்கும் போது தனது உம்மா வாப்பாவின் சொத்திலிருந்து கொடுப்பது போன்ற ஒரு கஞ்சத்தனம் இந்த நிர்வாகிகளுக்கு.

இந்த மோசமான நிலை மாற்றப்பட வேண்டும் எமது சமூகம் இது பற்றி சற்று சிந்திக்கவேண்டும். 

இந்த காலத்தை பொறுத்தவரை நடுத்தர குடும்பம் ஒன்றின் நாளாந்த செலவு குறைந்த பட்சம் ஒருநாளைக்கு  ஆயிரம் ரூபா  என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே.

இதனை கருத்தில் கொண்டு ஊர்மக்கள் பள்ளி நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் பள்ளி இமாம்கள் முஅத்தின்மார்கள் விடயத்தில் கரிசனை எடுப்பது சன்மார்க்கக் கடமைகளில் ஒன்றாகும் அது போன்று மரக்கறி இறைச்சி அரிசி குடு கஞ்சா விற்பவர்களும்  (மார்க்கத் தெளிவற்றவர்கள்) வட்டி விபச்சாரம் மது சூது களவு பித்தலாட்டம் இவைகளோடு உருண்டு புரள்பவர்கள் வஹியை சுமந்த உலமாக்களை நிர்வகிக்கின்ற நிலையை மாற்றி படித்தவர்கள் உலமாக்கள் உலமாக்களை ஊரை நிர்வகிகிக்பின்ற நிலை உருவாக வேண்டும். அதற்காக உழைக்க புத்தி ஜீவிகள் முன்வரவேண்டும். என்பதை எனது தாழ்ந்த அபிப்பிராயமாக முன்வைக்கிறேன் 

ஒரு சமூகம் தமது உலமாக்களை அறிஞர்களை அறிவு ஆன்மீக பொருளாதார அடிப்படையில் முன்னேற்றாதவரை தாம்  முன்னேறுவதென்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும்...!

9 comments:

  1. உலமாக்கள் பணத்துக்கு சோரம் போவதை நிறுத்தும் காலம் வரும் போது அல்லாஹ் அவர்களை சிறப்பாக்குவான் உலமாக்கள் அல்லாஹ்விற்கு மாத்திரம் பயந்து இஸ்லாத்தை சொல்வார்களேயானால் அல்லாஹ் அவர்களை சிறப்பாக்குவான்

    ReplyDelete
  2. அனைத்து இமாம்கள் ,முஅத்தின்களுக்கான நலன்கள் பேணும் காரியாலயம் அமைக்கப்பட வேண்டும் .அவர்களுக்கான சம்பளம் அங்கேயே வழங்கப்பட வேண்டும் .பள்ளிவாயல்கள் மாதாந்த சந்தா அட்டைகளை பயன்படுத்தி சேகரிக்கப்படும் நிதிகள் அனைத்தும் மேட்குறிப்பிட்ட நிறுவனத்தினடம் வழங்கப்பட வேண்டும் .சம்பள அதிகரிப்பு வேலைகளை இந்த நிறுவனமே கையாள வேண்டும் .இதன் மூலம் இமாம்கள் ,முஅத்தின்களின் கடமைகளை வரையறை செய்ய முடியும் .மேலும் தங்களுக்கான கொடுப்பனவுகளை கௌரவமான முறையில் பெற்றுக்கொவார்கள் .மேலும் இமாம்கள் முஅத்தின்களை நேர்முக பரீட்சை மூலம் தெரிவு செய்யலாம் .இன்னும் பல்வேறு பட்ட நன்மைகள் இதன்மூலம் ஏட்படலாம்

    ReplyDelete
  3. ماشاءالله ممتازة ،من مستعد؟

    ReplyDelete
  4. marakkari.arisi.iraichi vikkiravarhal palliyai nirvaahikka kudadha

    ReplyDelete
  5. உலமாக்கள் நிருவாகிகளுக்கும் ஊரில் உள்ள ஹாஜிகளுக்கும் பயந்து மார்க்கத்தில் உள்ளதை செய்லாமல்மறைத்தும் வளைந்தும் போனால் எவ்வாறு அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி வரும் சில உலமாக்கள் கண்ணை மூடிக்கொண்டு இஸ்லாத்தில் இல்லாததை செய்வாதும் உள்ளதை செய்யாமல் விடுவதும் பார்க்க மன வேதனையாக உள்ளது

    ReplyDelete
  6. உலமா என்றால் ஆலிமின் பன்மை,
    ஒரு ஆலிம் இஸ்லாத்தை நன்கு கற்றறிந்திருக்க வேண்டும்,ஆனால் பள்ளிகளில் கடைமைபுரியும் "மத்ரசா மந்தைகளின்" அறிவாற்றலை ஒவ்வொரு ஜும்மாவிலும் காணக்கூடியதாகத்தீனிருக்கிறதே!
    தவிர யார் எதிர்த்தபோதும் ஹக்கை ஹக் என்றும் பாbதிலை bathil என்றும் சொல்லக்கூடியவர்கள் எந்தப்பள்ளிகளிலும் கடைமைபுரிய முடியவாறான கேவளமான நிலையில்தான் இன்றைக்கு 99% ஊர்கள் இருக்கின்றன! குர்ஆன் மற்றும் ஸஹீகான ஹதீஸ்களை மட்டுமே சன்மார்க்க ஆதாரங்களாக பின்பற்ற எந்த இமாமும் சொல்வதில்லை! இவ்வாறு சொல்லப்போனால் ஹத்தம் பாத்திகா மூலம் கிடைக்கும் எக்ஸ்ட்றா வருமானத்திற்கு பாதிப்பேற்படுமே

    ReplyDelete
  7. சஊதி சில உலமாக்களை காசு கொடுத்து வாங்கிவிட்டது. அவர்களது தாளத்திற்கேற்ப ஆட்டம் போடும் உலமாக்களும் இருக்கிறார்கள். சஊதியின் மன்னராட்சிக்கு எதிராக எப்போதாவது வாய் திறந்திருக்கிறார்களா? துருக்கியைப் போல ஜனநாயக ஆட்சியை சஊதியிலும் அல்லாஹ் விரைவில் ஏற்படுத்துவானாக.

    ReplyDelete
  8. It's a painful truth and I wish if there was a system where waqf board controls all mosques. If the board select righ quailed talented preachers and pay them directly, the problem can be eliminated. The board can also train scholars professionally to enhance their hikma. It is a shame that majority of the mosques are administered by idiots and hypocrites. May Allah unite us and respect those who respect his Word which is most high. May Allah guide or insult those who insult his religion and its advocates.

    ReplyDelete
  9. சிறந்த பதிவு,
    ஆனால் திருத்த வேண்டிய இடம் பள்ளிவாயல் நிர்வாக சபை இல்லை ,,,,,
    உலமாக்களை உருவாக்கும் மத்ரஸக்கள்தான்..
    ஏன் என்றால் அவர்கள் வெளியேரும் போது,பள்ளியே கதி என்று இருக்காமல்,
    இன்றய நாட்டில் எந்த தேவை இருக்குன்ரதோ மத்ரஸாக்கல்வியுடண் உலக கல்வி
    eg; english,compuer, driving.accounting,போன்ற துரையிருந்தால் நல்ல தொழில் வாய்ப்பு இருக்கின்ரது. அதனை ஆரம்பத்தில் இருந்து மத்ரஸாக்களல் போதிக்கப்படவேண்டும்.
    இலங்கையில் இருக்கும் அனைத்து மதரஸாக்கள் ஒரே சிலபஸ்க்கு கொண்டு வரவேண்டும். உலமாக்கலுக்கான கேள்வி கூடும் போது சிரந்த சம்பளத்துடன் வேளை பெரலாம்.
    பள்ளியை மட்டும் நம்பி வெளியில் வரத்தேவையில்லை

    நீங்கள் தெரிவிப்பது போல் நிர்வாக சபையை மட்டும் குரை கூற வேண்டாம் .ஊர் மக்களும் பதில் செல்லவேண்டும்,
    ஊரில் இன்றும் மாதந்தம் சில நூறுரூபாய்க்கள் சந்தா பெருவதில் உள்ள கஸ்டம் நிர்வாக சபையினருக்குதான் தெரியும் .
    எந்த நிர்வாக சபை உருப்பினரைகள் சம்பளம் பெருகின்ரர்கள்? அவர்கள் அல்லாஹ்விட்காக நிர்வாகிக்ரார்கள்.
    பள்ளியில் பல்ப் சுட்டால் ,ஹவுலில் தண்ணீர் குரைந்தால் ஏசப்படவது நிர்வாக சபைக்கு,,
    இவ்வலவு குரை கூருபவர்கள்
    பள்ளியின் சந்தாக்களை அதிகரிப்பதட்கான வழிகாட்டல் வேண்டும் .நீங்களும் நிர்வாக சபையில் அங்கம் வகித்தால் தெரியும்,,,
    தட்போது பள்ளியில் உலமாக்கலுக்கு பள்ளியில் சம்பளம் +மக்தப் சம்பளம் கொடுக்கப்படகின்ரது
    தகுதியானவர்கள் கூடுதலாக சம்பளம் பெருபவர்களும் உண்டு.

    ReplyDelete

Powered by Blogger.