Header Ads



மகிந்தவின் நண்பன், உகண்டா ஜனாதிபதி வீதியில் செய்த காரியம் (படங்கள்)


உகாண்டா ஜனாதிபதியான Yoweri Museven சாலையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு போன் பேசுவது போன்ற புகைப்படம் டிரெண்டாகியுள்ளது.

உகாண்டா நாட்டு ஜனாதிபதி Yoweri Museven, இவர் Kyeirumba கிராமத்தில் உள்ள சாலை ஓரத்தில் இருந்து முக்கிய தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலான புகைப்படங்களை உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில், உலக மக்கள் தொகை தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துக் கொண்டு Isingiro மாவட்டத்தில் இருந்து தான் பயணித்துக் கொண்டிருந்த போது அவசர அழைப்பு ஒன்று வந்ததாகவும், எனவே Kyeirumba கிராமத்தில் வாகனத்தை நிறுத்தி தொலைபேசியில் உரையாடினேன் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை பலரும் லைக் செய்ததுடன் இதுவரையில் 2.1k பேர் ரியாக்ட் செய்துள்ளனர், டுவிட்டரில் #M7challenge என்ற ஹேஷ்டேக்கிலும் பிரபல்யபடுத்தியுள்ளனர்.

பேஸ்புக்கில் இந்த மாதத்தின் வரவேற்கத்த பதிவாகவும் டிரெண்ட் ஆகியுள்ளது.


No comments

Powered by Blogger.