July 12, 2016

இணைந்த வடக்கு-கிழக்கில் முஸ்லிம், முதலமைச்சரை ஏற்றுக்கொள்ள தயார் - சம்பந்தன்

(விடிவெள்ளி)

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஒரு பக்­கு­வமான படித்த முஸ்லிம் நபரை எமது முத­ல­மைச்­ச­ராக ஏற்­றுக்­கொள்­வ­தற்கு நாம் தயா­ரா­க­வி­ருக்­கின்றோம் என தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான ஆர்.சம்­பந்தன் தெரி­வித்தார். 

தமிழ் பேசும் மக்­களின் பெரும்­பான்மை பாது­காக்­கப்­ப­ட­ வேண்டும் என்­ப­தா­லேயே வடக்கு கிழக்கு இணைந்­தி­ருக்க வேண்­டு­மென திட­மாக வலி­யு­றுத்தி வரு­கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதனை முஸ்லிம் தலை­வர்­களும் மக்­களும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் கொழும்பு தமிழ்ச் சங்­கத்தில் இடம்­பெற்­ற நிகழ்வொன்றில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

எமக்கு எதி­ராக எமது போராட்­டங்­க­ளுக்கு எதி­ரான பல அநீ­திகள் இழைக்­கப்­பட்­டுள்­ளன. பிர­ஜா­வு­ரிமைச் சட்டம் பாரா­ளு­மன்றில் சமர்­ப்பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­ட­தை­ய­டுத்து தமிழ் மக்­களின் அர­சியல் பலம் குறைக்­கப்­பட்­டது. 

நாடு சுதந்­தி­ர­ம­டைந்த போது தமி­ழுக்கும் சிங்­க­ளத்­திற்கும் சம உரிமை கொடுக்­கப்­ப­டு­மென ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. ஆனால் பின்னர் தனிச்­சிங்­களம் சட்டம் 1956ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது. 

பெரும்­பான்மை இனம் தமிழ் பேசும் இனங்­களின் பிர­தே­சங்­களில் குடி­யேற்­றப்­பட்­டார்கள். விசே­ட­மாக கிழக்கு மாகா­ணத்தில் குடி­யேற்­றங்கள் மிகவும் தீவி­ர­மாக இடம்­பெற்­றி­ருந்­தன. 

எமது நாட்டில் 1947 ஆம் ஆண்­டுக்கும் 1981ஆம் ஆண்­டுக்­கு­மி­டை­யி­லான காலப்­ப­கு­தியில் சிங்­கள மக்­களின் இயற்கை ரீதி­யான அதி­க­ரிப்பு 2.5 வீத­மாகும். இக்­கா­லத்தில் கிழக்கு மாகா­ணத்தில் சிங்கள மக்­களின் இயற்கை ரீதி­யான அதி­க­ரிப்பு 9 வீத­மாகும். தற்­போது வட­மா­கா­ணத்­திலும் அவ்­வி­த­மான நிகழ்­வு­களை நிறை­வேற்­று­வ­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. 

இக்­கா­ர­ணத்தின் நிமித்தம் தான் வடக்கு கிழக்கு இணைந்­தி­ருக்க வேண்டும்.

தமிழ் பேசும் மக்­களின் பெரும்­பான்மை பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை திட­மாக வலி­யு­றுத்தி வரு­கின்றோம். இதனை முஸ்லிம் மக்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். முஸ்லிம் தலை­வர்கள் புரிந்­து­கொள்ள வேண்டும்.

ஒரு தமிழர் தான் முத­ல­மைச்­ச­ராக இருக்க வேண்­டு­மென்ற கார­ணத்­திற்­காக நாம் அவ்­வாறு செய்­யவில்லை. 

ஒரு பக்­கு­வமான படித்த முஸ்லிம் நபரை எமது முத­ல­மைச்­ச­ராக ஏற்­றுக்­கொள்­வ­தற்கு நாம் எப்போம் தயா­ரா­க­வி­ருக்­கின்றோம். எமது பெரும்­பான்மை பாது­காக்­கப்­ப­டு­வது சந்­தே­கத்­துக்கு இட­மின்றி உறு­திப்­ப­டுத்­து­வ­தாக இருந்தால் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­ட­வேண்டும்.

 அதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்­டு­மென்­பதை அன்­பா­கவும் தாழ்­மை­யா­கவும் கேட்­டுக்­கொள்ள விரும்­பு­கின்றோம்.

தற்­போது பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. வழி­ந­டத்தும் குழு நிர்­ண­யிக்­கப்­பட்டு ஒழுங்­காக கூடி செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

புதிய அர­சியல் சாசனம் இந்த நாட்­டிற்கு அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

புதிய அர­சியல் சாச­ன­மா­னது தமிழ் மக்­க­ளுக்கு மட்­டு­மா­ன­தல்ல. அனைத்து மக்­களுக்கும் முக்­கி­ய­மா­னது.

அதற்­காக அனை­வரும் முயற்­சிக்­கின்­றார்கள். புதிய அர­சியல் சாச­னத்தின் ஊடா­கவே தற்­போ­துள்ள நிலை­யி­லி­ருந்து நாட்டை மீட்க முடியும் என்றார். 

11 கருத்துரைகள்:

You are thinking about tamils majority via north east joined.

Can you say how we can maintain the Muslim majority in the joined north and east?

I think he has forgoten the previous days between 1985 to 2009.They have treated very well of muslim community in north and east.They tamil terorist groups killed the muslims by one person a day

வட மாகாண சபையில் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் உறுப்பினரை இவர்களும் தமிழ் ஊடகங்களும் நடத்தும் அழகே இவர்கள் எந்த அளவுக்கு துவேஷிகள் என்பதற்கு போதுமான சான்று.இந்த இலட்சணத்தில் இணைந்த வடக்கு கிழக்காவது மண்ணங்கட்டியாவது.

நீங்கள் ஒரு நல்ல மனிதர் நல்லண்ணத்தில் இதனை முன், வைக்கிறிர்கள் அதர்கான மரியாதையை நாங்கள் உங்களுக்கு தருகிறோம் ஆனால் உங்களைப்போன்று மற்றவர்களுக்கும் திறந்த மனது இரண்டு பக்கமும் இல்லை என்பதுதான் மனவேதனை ,நீங்கள் கூறுவது போன்று வடகிழக்கு ஒன்றிணைந்து முதல் அமைச்சர் முஸ்லிமை நியமித்தாலும் ஆறு மாதத்துகு மேல் அவரால் அந்தக் கதிரையில் இருக்க முடியாமல் போய் விடும்

வட கிழக்கில் தமிழ் சமூகத்தினால் அபகரிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் காணிகள் அனைத்தும் மீண்டும் முஸ்லிம் சமூகத்திடம் கௌரவமான முறையில் ஒப்படைக்கப்பட வேண்டும் .அவ்வாறு காணிகளை மீளவும் ஒப்படைக்காதவரை முஸ்லிம் சமூகம் இவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து விட வேண்டாம் .

Pls dont blame mr sbandhan.this is his personal opinion.every one have rights to say our opinion.they are for muslims should patient and give us our opinion by ahlaq

This comment has been removed by the author.

oh oh oh ,, ho is it possible ? ithu yappadi iya ?

You guys seem trouble makers where-ever you live/go.
Wonderful Policy!, keep it up.
Pls don't get me wrong, but it's my observation.

Muslims should never go in for an amalgamation of the North and East as one district/Province. The Muslims in the North-East have suffered very much and lost a lot under the administrative power of Tamil Government Servants/government officials and the dominating Tamil political parties since independence. The Muslims in the North and East were treated as second class citizens. With the advent of the LTTE, it became much worst, till May 2009. The Colombo Muslims or Muslims who live outside the North and East did not feel the oppressions, because they were administered by the Sinhalese administrators/government officials who were communal too, but considerate.
On 2 and 8 September 1988 President Jayewardene issued proclamations enabling the Northern and Eastern provinces to be one administrative unit administered by one elected Council. The North Eastern Province was born. The proclamations were only meant to be a temporary measure until a referendum was held in the Eastern Province on a permanent merger between the two provinces. However, the referendum was never held and successive Sri Lankan presidents have issued proclamations annually extending the life of the "temporary" entity.
The merger was bitterly opposed by Sri Lankan nationalists. The combined North Eastern Province occupied one fourth of Sri Lanka. On 14 July 2006, the JVP filed three separate petitions with the Supreme Court of Sri Lanka requesting a separate Provincial Council for the East. On 16 October 2006 the Supreme Court ruled that the proclamations issued by President Jayewardene were null and void and had no legal effect. The Eastern Province was formally born on 1 January 2007. SINCE THEN, the Muslims in the Eastern Province have some form of FREEDOM and enjoy FUNDAMENTAL and POLITICAL RIGHTS. Muslims of the Eastern Province should OPPOSE a demerger of the North and Eastern Provinces at any cost, Insha Allah. Muslims should NOT at any stage consider the political “CROCODILE TEARS” of R. Sambandan and the TNA, Insha Allah. This comment column is not enough to list the administrative and political atrocities the Tamil politicians and the TNA/ITAK had done to the Muslims in the Eastern Province since Independence. The above content is NOT communal or racists but the TRUTH and nothing but the TRUTH, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and former SLFP District Organizer – Trincomalee District and Convener – The Muslim Voice.

இதெல்லாம் ஒரு பூச்சாண்டி. நிச்சயமாக ஐயாவுக்கு தெரியும் முஸ்லிம்களில் இருந்து முதலமைச்சர் வர முடியாது என்று. எந்த சந்தர்ப்பத்திலும் வடகிழக்கு இணையவே கூடாது.

Post a Comment