July 17, 2016

எர்துகான் அவர்களே, இப்படி செய்வீர்களாயின் நீங்கள்தான் முஸ்லிம் உலகின் கலீஃபா..!


-மூத்த ஊடகவியலாளர் Thaha Muzammil-

அர்துகான் அவர்களே...!

ஒரே தினத்தில் நீங்கள் உலக முஸ்லிம்களின் நாயகனாக ஆகிவிட்டீர்கள்; உங்களது ஒரேயொரு WhatsUp செய்தியினூடாக, அந்த நடுசாமத்திலும், தம் உயிரையே துச்சமென மதித்து, தியாகம் செய்யத் துணிந்துவிட்டார்கள் துருக்கிய மக்கள்.

உங்களது மற்றுமொரு செய்திக்காக அவர்கள் காத்தியிருக்கிறார்கள்: நடைமுறையிலிருக்கும் மேற்கத்தேய கலாசாரத்தை இஸ்லாமிய கலாசாரத்தைக் கொண்டு பிரதியீடு செய்ய, அரச அங்கீகாரத்துடன் இயங்கும் மதுபானசாலைகளை மூடிவிட; சூது, மாது என்று நிறைந்து, அங்காரா வீதிகளில் அலங்காரமாகக் காட்சியளிக்கும் இரவு களியாட்ட விடுதிகளை கலைத்துவிட துருக்கிய மக்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை உங்களது ஒரே ஒரு செய்தி மட்டுமே.

"அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் எமது முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது" என்று நீங்கள் சொன்னதை பாராட்டுகிறோம்.

அமெரிக்காவும் வேண்டாம், இஸ்ரேலும் வேண்டாம், இஸ்லாம் ஒன்றே எமக்கு போதும்; இஸ்லாமே இனி எம்மை ஆட்சி செய்யும் சக்தி என்று கூறி, நேட்டோ ராணுவ முகாமில் இருந்தும் வெளியேறுங்கள்; அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணாக இவர்களுடன் செய்துக்கொண்டுள்ள ராணுவ ஒப்பந்தங்களைக் கிழித்தெறியுங்கள். முதலாளித்துவ பொருளாதாரத்தை இஸ்லாமிய பொருளாதாரத்தால் மாற்றீடு செய்யுங்கள்.

அப்படி செய்வீர்களாயின், நீங்கள்தான் முஸ்லிம் உலகின் கலீஃபா ...... உலக முஸ்லிம்கள் உங்களுக்கு பை'அத் செய்து, உங்கள் பின்னால் நிற்க தயாராய் இருக்கின்றனர்.

நடந்த சதிபுரட்சியை, உங்களது பதவியை ஸ்திரப்படுத்திக்கொள்ள நீங்கள் அரங்கேற்றிய நாடகமாக சிலர் கருதுகின்றனர். அதை பொய் என்று உலகுக்கு நிரூபிக்க வேண்டிய தார்மீகக் கடமை உங்களுக்குள்ளது...!!

10 கருத்துரைகள்:

Brother...you are dreaming...
These leaders never will west and their masters... they happy to be the puppets of their masonic masters than being a slave to Allah...
above what you have said NEVER will happen... not only from Erdogan... from any so called Muslim leaders around the globe.

அரசியல் சாணக்கியம் இல்லாத வார்த்தைகள்.
நபியவர்களின் சீறாவைப் படியுங்கள்.
இந்த புத்திமதி சிறு பிள்ளைத் தனமானது என புரியும்.
இன்னொரு ஆப்கானை உருவாக்கப் பார்க்கிரீர்களா?
காலம் கனியும் வரை பொருத்திருக்க வேண்டும்.
காய்களை மெல்லத் தான் நகர்த்த வேண்டும்

Recep Tayyib Ardukhan had done a lot to convert Turkey from a secular (with kuffar ideology) country to a more Islamic country in just 14 years of his leadership. This coup was the plan of Israel and their allies to topple the leaership of Ardukhan. They want to topple him and his government because he is rising with his countrymen in the right path to once again establish the lost Khilapha. May Almighty Allah guide him and the Muslim Ummah to the right path.

Islamic law peopke should follow by them own.not by order.example 23years of nabi(sal)guideline.each and every muslims should follow the islam by our practical life first.then allah will GIVE US QILAF.PLS DONT MIS GUIDE.PLS WE LEARN IMAN AND INCREASE OUR IMAAN IN OUR HEART DEEPLY.

Bro you are absolutely right.

மேலே கூறிய விடயங்களை அவசரமாக நடைமுறை படுத்த எடுத்த முடிவின் காரணமாகத்தான் எகிப்திய ஜனாதிபதி தற்போது சிறையில் இருக்கின்றார் .தற்போதைய காலகட்டத்தில் மேற்கத்தைய நாடுகளை வெற்றி கொள்வதட்கு துருக்கிய ஜனாதிபதி மற்றும் ஜாகிர் நாயிக் போன்றவர்களின் அணுகுமுறைகள் தான் மிகவும் முன்மாதிரியானது .

துருக்கி பற்றி தெரியாத ஷியாயிஸத்தின் பதிவு இது....MUZAMMIL BE CAREFUL

துருக்கி இராணுவ சதிமுயற்சி வெற்றிகரமாக அர்துகான் அரசினால் முறியடிக்கப்பட்டமை, யாருடைய வயிற்றெறிச்சலைக் கிளறாவிட்டாலும் ஈரான் விசிலடிச்சான் குஞ்சுகளின் வயிற்றெறிச்சலை நிச்சயம் கிளறியிருக்கும்.

கேற்பதற்கு சந்தோஷமாக இருந்தது இரானுவப்புரட்சி முறியடிக்கப்பட்ட நிகழ்வு.20000 ற்கும் மேற்பட்ட isis தீவிரவாதிகள் துருக்கியின் எல்லையினுடாக சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்குள் பிரவேசிக்கும் வரை இந்த தலைவருக்கு தெரியாமல் போனது ஏனோ என்று தெரியவில்லை.

And ஆராரத்தை கொண்டு வாருங்கள்

Post a Comment