Header Ads



சுவிசில் முகத்திரைக்கு தடை - சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு


சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிந்து பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்துள்ளதால் வணிக ரீதியான பாதிப்பு அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள டிசினோ மாகாணம் ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிந்து பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்தது.

இத்தாலிய மொழி பேசும் மக்கள் அதிகம் கொண்ட டிசினோ மாகாணத்தில் பெரும்பாலும் அரேபிய சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் சுற்றுலாத்துறை பெருமளவு வளர்ச்சி கண்டு வந்துள்ளது.

ஆனால் தற்போது அமுலுக்கு வந்திருக்கும் இந்த தடை சட்டத்தால் அரேபிய சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட இஸ்லாமியர்களின் வருகை பாதிக்கப்படும் என வணிக பெருமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக டிசினோ மாகாணத்தில் ஜேர்மன் சுற்றுலாப்பயணிகளின் வரவு பெருமளவு சரிவை கண்டிருக்கும் நிலையில் அரேபிய சுற்றுலாப்பயணிகளின் வரவு இந்த தடையால் சரிவுக்கு உள்ளாகலாம் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சவுதி மற்றும் ஐக்கிய அமீரக அரசுகள் தங்கள் குடிமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், ஐரோப்பா மற்றும் வெளிநாடுகளில் சுற்றுலா செல்லுவோர் அந்த நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்றுள்ளது.

No comments

Powered by Blogger.