Header Ads



"இலங்கை முஸ்லிம் இளைஞர்கள், எர்துகான் பாணியில் அரசியலுக்கு வர வேண்டும்"

-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்கள் இளம் தலைமைகளுக்கான மிகச்சிறந்த களமாகும்.

ஆர்வமுள்ளவர்கள் தயாராகுங்கள்... அர்துகான் பாணியில் அடிமட்டத்திலிருந்து மனிதநேய அரசியலுக்கு வாருங்கள்..

ஜனநயாக அரசியல் கட்டமைப்பில் மக்களது அன்றாட வாழ்வுடன் நேரடியாக பெரிதும் தொடர்புபடும் அதிகார அலகுகளாக உள்ளூராட்சி கட்டமைப்புக்களான, பிரதேச சபைகள், நகர சபைகள், மாநாகர சபைகளை கருதலாம்.

தற்பொழுது நாமெல்லோரும் அதிருப்தி வெளியிடும் கையாளாகாத வங்குரோத்து அரசியல் தலைமைகளை மாற்றீடு செய்வதற்கான அல்லது நமது அரசியல் கட்சிகளை, சரியான திசைகளில் நகர்த்துவதற்கான முனைவுகளின் தொடக்கப் புள்ளிகளாக மேற்படி உள்ளூராட்சி கட்டமைப்புக்களை பயன்படுத்துதல் காலத்தின் கட்டாயமாகும்.

முற்போக்கான அரசியல் சமூக பொருளாதார சிந்தனைகளை கடந்த பல தசாப்தங்களாக இஸ்லாமிய சமூக வாழ்வியலின் பிரதான அமசங்களாக பிரச்சாரம் செய்து வருகின்ற சிந்தனைப் பள்ளிகள், சரவதேச அரங்கில் அவை குறித்து வெளியிடப்படுகின்ற நவீன சிந்தனைகளை தமதாக்கிக் கொண்டுள்ள செயற்பட்டு முகாம்கள் அவற்றை சிவில் சமூக மயப்படுத்த தவறியுள்ளமையின் இயல்பான விளைவுகளையே எமது தேசிய பிராந்திய மற்றும் உள்ளூராட்சி அரசியலில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
மக்களின் அன்றாட வாழ்வியலுடன் தொடர்புபடாத சமூக பொருளாதார அரசியல் சீர்திருத்த சிந்தனைகளை பாமர மக்கள் மாத்திரமன்றி படித்தவர்களும் கூட சீரணித்துக் கொள்ள மறுக்கின்றார்கள், எனவே மக்கள் மத்தியில் செல்வதற்காக சிந்தனைப் பள்ளிகளும், செயர்ப்[ஆட்டு முகாம்களும் அரசசார்பற்ற தொண்டர் பணிகளில் அதிகூடிய கவனம் செலுத்த தலைப்பட்டிருக்கின்றமை மிகச் சரியான இயங்குதள உளவியலாக கருதப் பட முடியாது.

எல்லாம் வல்ல அல்லாஹ் வகுத்துள்ள பிரபஞ்ச இயற்கை நியதிகளின் படி ஆட்சி அதிகாரம் சத்திய வழியில் அமையாவிடத்து அநீதியும், அராஜகமும், அக்கிரமமும், ஊழல் , மோசடிகளும், குழப்பம்ம் , குளறுபடிகளும் மனித வாழ்வின் அன்றாட அம்சங்களாகி விடுகின்றன, பிரபஞ்சத்தின் இயல்பான ஓட்டத்துடன் மனித வர்க்கம் முட்டி மோதிக் கொள்ள ஆரம்பிக்கின்றது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை அரசியல், ஆட்சி அதிகாரம் என்பவை இடம், காலம், இனம், மதம், மொழி எல்லைகளுக்கு அப்பால் பட்ட மனித நேயப்பணியாகும், நாம் அதிகம் விமர்சிக்கின்ற வங்குரோத்து சாக்கடை அரசியல் ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் மகஜனங்களான பொதுமக்களையும் வாங்குரோத்து அரசியல் கலாச்சாரத்திற்குள் கட்டிப் போட்டிருக்கின்றமை பெரும்பாலும் பேசப்படுவதில்லை.

அத்தகைய மட்டரகமான அரசியல் கலாசாரத்தின் முகவர்களாக இருக்கும் தலைமைகளையும், தொண்டர்படையணிகளையும் சரியான அரசியல் திசையில் நகர்த்துவதென்பது மிகக் கடினமான பணியாகும், சரியான தரப்புக்கள் காலாகாலமாக விட்டுவந்த இடைவெளிகளே இன்று பிழையான தரப்புக்களால் நிரப்பப் பட்டுள்ளன.

என்றாலும், அவர்களையும் மகாஜனங்களான பொதுமக்களையும் இத்தகைய நிராகரிக்கபப்டுகின்ற சாக்கடை அரசியல் கலாச்சாரத்திலிருந்து மீட்டெடுக்கின்ற பணி அடிமடத்திலிருந்தே ஆரம்பிக்கப்படுதல் வேண்டும், அதற்கான பரந்துபட்ட விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிதீவிரமாக மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

அவ்வாறான பாரிய அரசியல் விழிப்புணர்வு ஒன்றை களத்திற்கு வெளியிலிருந்து வெறும் பார்வையாளர்களாகவும், விமர்சகர்களாகவும் இருந்து கொண்டு செய்ய முடியாது என்பதனை எமது அண்மைகால அரசியல் நன்கு உணர்த்தியிருக்கின்றது, அந்த வகையில் மக்களின் வீட்டு வாசல் வரை அல்லது சமையல்கட்டுவரை அரசியலை எடுத்துச் செல்லுகின்ற அடிமட்ட அரசியல் கட்டமைப்புக்களான உள்ளூராட்சி தேர்தல்களில் பங்காளர்களாக நாம் கவனம் செலுத்துதல் வேண்டும்.

இன்ஷா அல்லாஹ், விரைவில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் ஒவ்வொரு வட்டாரத்தில் இருந்தும் நல்லாட்சிக் கோட்பாடுகளை மதிக்கின்ற மிகச் சிறந்த இளம் அரசியல் தலைமைகளை நாம் சமூக தளத்தில் அறிமுகம் செய்தல் வேண்டும். அது -மது தெரிவு மாத்திரமன்றி கடமையும் கூட.

4 comments:

  1. தற்போது காணப்படுகின்ற அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஆரம்ப கால கட்டங்களில் முற்போக்கான சிந்தனை கொண்டவர்களாகவே காணப்பட்டார்கள் .பின்பு மாற்றமடைந்தார்கள் .எனவே அரசியல்வாதிகளை ஒரு புத்திஜீவிகள் குழுவினரால் வழி நடாத்தப்பட வேண்டும்

    ReplyDelete
  2. Yes. come to politics in the style of Ergodan and dont try to earn in the style of Rajapakse

    ReplyDelete
  3. THE MUSLIM VOICE has been calling for this since the 2015 presidential and general elections. Why are we worried about Mahinda Rajapaksa and his clan? Let us look into ourselves (our community and its politicians). Look at what Brother M.F.M.Fazaath – Southeastern University, Oluvil has written about the present plight of the Muslim Community in Sri Lanka – Alhamdulillah in this forum. Fazaath makes the call that – “The slumber (sleeping) in which the Muslim Community has been should be over now. It is time up that we should awake now”. This is the reality, Insha Allah (http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_222.html) See what Brother Hafeez M has written about the action needed in our Community (Education/spreading the message - http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_222.html0). I condone fully all the wrongs what Mahinda did during his governance, but I am focusing on the principles of DISHONESTY and DECEPTION of our Muslim politicians who think they are FREE from the CRIMES they have done. Why are the Muslims NOT calling for action against our own Muslim Ministers, Party Leaders and unscrupulous community and civil society leaders – eg: Rauf Hakeem's "Kumai suspected homicide case and the misappropriation of millions of rupees in his ministry recently, The recent Sathosa scandal by a prominent Muslim Minister from the North, The Haj quota scandal in 2010 when he was close to Mahinda Rajapaksa by the Loud mouthed former Central Provincial council member and now an Advisor to the present President, The smuggling of gold biscuits by one of the personal staff of the Minister of Muslim Religious and Cultural Affairs suspected to have happened with the knowledge of the Muslim minister from Kandy, The award of a big road construction tender recently by a Muslim VIP of the UNP to a company owned by his relation. Is it not time that the Muslims should put pressure on the Yahapalana government to bring these unscrupulous Muslim politicians should before the “Rule of Law” and punished, without bragging about Mahinda Rajapaksa and his clan and Wimal Weerawansa? Insha Allah. The time has come that these tricksters have to be challenged and EXPOSED to Safe Guard the Rights and DIGNITY of the Sri Lanka Muslim UMMAH, Insha Allah. This is what "THE MUSLIM VOICE" is striving to do from the wilderness of the Muslim political arena, Insha Allah. Therefore "The Muslim Voice" is praying/crying through all its COMMENTS, that a New Muslim Political Culture has to be born soon and that is the Political message "The Muslim Voice" is trying to send out, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  4. பொது ஸ்தாபனமான பள்ளிவாசல்களை நிர்வகிப்பதற்குத் தகுதியாக அல்லாஹ் புனித குர்ஆனில் குறிப்பிடும் விடயங்கள் இஸ்லாமியரின் பொது அரசியலுக்கும் பொருந்தும் எனக் கருதுகிறேன்:

    'அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.
    (அல்குர்ஆன் : 9:18)

    ReplyDelete

Powered by Blogger.