Header Ads



இலங்கையில் துருக்கிக்கு எதிராக சதி..? பின்புலத்தில் அமெரிக்கா..??

- Nuskiya Nawaz-

துருக்கி இராணுவ புரட்சி அது முறியடிக்கப்பட்டது தொடர்பிலேயே அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. எனினும், துருக்கி அரசுக்கு எதிராக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகள் தொடர்பில் யாருக்கும் எதுவும் தெரியாது.

துருக்கியில் தடைசெய்யப்பட்டுள்ள தீவிரவாத அமைப்பொன்று இலங்கையில் சுதந்திரமான செயற்பட்டு வருகின்றது. இந்த உண்மை ஒரு வருடத்துக்கு முன்னரே தெரிந்திருந்தும் போதியளவு ஆதாரம் இல்லாமையினாலும், இலங்கை முஸ்லிம்களுக்கு இதனால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படும் என்பதாலும் இதனை நான் வெளிப்படுத்தவில்லை.

இருப்பினும் இது தொடர்பில் முஸ்லிம்கள் விளிப்படைய வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவினை இடுகின்றேன்.

துருக்கியில் இராணுவ புரட்சிக்கு தூண்டுகோளாக செயற்பட்டவர் என துருக்கி ஜனாதிபதி அர்த்துகானினால் குற்றம்சாட்டப்பட்டவர் அமெரிக்காவில் வாழும் பத்துல்லாஹ் குலான். பல்வேறு குற்றச்சாட்டுக்களின் காரணமாக இவர் துருக்கியில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி. 

குலான் இயக்கம் (Gülen movement) என்ற ஒரு அமைப்பை வழிநடத்தும் பத்துல்லாஹ் குலான், துருக்கி அரசுக்கும் - அர்த்துக்கானுக்கும் எதிராக பல்வேறு சதிகளை மேற்கொண்டு வருகின்றனர். உலகலாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் குலான்கள் கல்வி கற்ற சமூகத்தை தம்பக்கம் ஈர்த்துக் கொண்டு அவர்களது மூளையை சலவைச் செய்ந்து இஸ்லாமிய பேரரசை மீள் எழுச்சி பெராத வகையில் அர்த்துகான் அரசுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். 

குலான் அங்கத்தவர்கள் இஸ்மத் (Hizmet movement) என்றும் அழைக்கப்படுகின்றார்கள். குலானுக்கு ஆதரவாக செயற்படும் இஸ்மத் இயக்கமானது துருக்கியில் தீவிராவாத அமைப்பாக பிரகடனம் செய்யப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பாகும். ஆனால், இந்த இஸ்மத் இயக்கத்தவர்கள் பல்வேறு நாடுகளில் வேறு புனைப்பெயர்களில் இயங்கி வருகின்றனர்.

அந்தவகையில் இலங்கையில் ஐ.டி.எவ். (IDF-Intercultural Dialog Foundation )என்ற சமூக சேவை அமைப்பாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு இயங்கி வருகின்றத. இந்த அமைப்பு இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்களை ஈர்க்கும் வகையில் தமது வேலைத்திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளதுடன்,  ஒரு சர்வதேச பாடசாலையை கொழும்பின் இருவேறு பகுதிகளில் (ராஜகிரிய, வார்ட் பிலேஸ்) நிறுவி அதனூடாக தமது கொள்கை சார்ந்தவர்களை உருவாக்கி வருகின்றனர். 

(நான் கூறுவதில் சிலருக்கு சந்தேகங்கள் ஏற்படலாம். அவ்வாறானவர்கள் தயவு செய்து உடனடியாக லேனியம் சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் சகோதரர்கள் அல்லது கொழும்பு பல்கலைக்கழகத்தில் படிப்பவர்களை தொடர்பு கொண்டு கேட்டுப் பாருங்கள்.)

அது மட்டுமல்லாது, எந்தவொரு பிரச்சினையும் வராத வகையில் ஊடகவியலாளர்களை கவரும் விதத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பஞ்சம் பிழைக்கும் ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் அறிந்திருப்பார்களா என்பது எனக்குத் தெரியாது. 

பத்துல்லாஹ் குலான் சார்ந்த குலான் மற்றும் இஸ்மத் இயக்கம் சார்ந்தவர்கள் துருக்கியில் இராணுவ புரட்சி நடக்கவுள்ளதை முன்னரே அறிந்து வைத்துள்ளனர். இந்த தகவலை நான் பொறுப்புடனேயே பதிவு செய்கின்றேன். 

இலங்கையில் வசிக்கும் அவ்வியக்கம் சார்ந்தவர்கள் குறித்த தினத்தன்று கொழும்பு 07 இல் அமைந்துள்ள முக்கிய இடமொன்றில் ஒன்று கூடி துருக்கியில் நடக்கவுள்ள இராணுவ புரட்சியை ஆர்வத்துடன் அவதானித்துள்ளதுடன், விசேட துஆ பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

குலானுக்கு அடைக்களம் வழங்கியுள்ள அமெரிக்கா, இந்த சதிகளின் பின்புலத்தில் உள்ளனர். குலானும் இலுமுனாடிகளின் சேர்க்கை என்பது தொடர்பில் பல்வேறு ஆதார பூர்வ தகவல்கள் என்னிடம் உள்ளன அவை விரைவில் பிரசுரிக்கப்படும். போப் இரண்டாம் ஜோன் பவுலுடன் குலானுக்கு இருந்த நெருக்கிய தொடர்பு, அமெரிக்க உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அவர் தொடர்பில் கொண்டுள்ள கரிசனை என்பன அதனை மேலும் உரிதிப்படுத்தும் வகையில் உள்ளது.

2 comments:

  1. IDF நிறுவனம் இலங்கையில் சுமார் ஆறுவருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது.நிவாரன சேவைகள்,
    இப்தார் நிகழ்வுகள்,உழ்கிய்யா போன்றவற்றுடன் இன்னும் பல சமூக சேவைகளை செய்து வருவதுடன் இலங்கையில் உள்ள கல்விச் சமூகத்துக்கு மத்தியில் இன நல்லுறவைப் பேனுவது தொடர்பாக பல்கலைக்கழக ரீதியில் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

    ReplyDelete
  2. I totally agree with this sister as a person who had worked with them both in Turkey and Srilanka before

    ReplyDelete

Powered by Blogger.