Header Ads



"இப்படி உணவுகளை, போட்டோக்களில்தான் பார்த்துள்ளோம்"

-Firthous Naleemi-
பெருநாள் தினத்தில் -06- பெண்தலைமைதாங்கும் குடும்பங்களினை சந்தோசப்படுத்தும் நோக்கிலும் தந்தையை இழந்து துயருறும் சின்னஞ்சிறுசுகளின் உள்ளங்களிற்கு ஆறுதலளித்து அரவணைக்கும் நோக்கிலும் நோன்பு உணர்த்திய பசியின் கொடுமையிலிருந்து இன்றய பகல் பொழுதிலும் இனிவரும் பொழுதுகளிலும் இச்சகோதரிகளையும் அவர்தம் அன்புக்குழந்தைகளையும் மீட்டெடுக்கும் மகத்தான பணியின் முதல்நாள் காட்சிகளே இவை அடையாங்காணப்பட்ட 47 குடும்பங்களுக்கு  பகலுணவு முகநூல் சொந்தங்களின் அன்பளிப்பினால் வழங்கிவைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

சாப்பாட்டுச் சஹன் ஒன்றினை வழங்கிவிட்டு ஆட்டோவில் ஏறும்போது வந்த அழைப்பின் மறுமுனையில் நான்கு குழந்தைகளின் தாய்

"ஜஸாகல்லாஹு கைரா இப்படி உணவுகளை போட்டோக்களில்தான் பார்த்துள்ளோம் அதனை ருசிபார்க்க சந்தர்ப்பமளித்த உங்களுக்கு " என்று கூறினால் எனது கண்கள் பனித்தன உள்ளம் அல்ஹம்துலில்லாஹ் என்றது.

 ஏழை வீட்டிலும் இன்று பெருநாள் என்ற சந்தோசம் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது மற்றுமொரு அழைப்பு எனது வீட்டிலிருந்து 2.30 மணிக்கு மறுமுனையில் சின்ன மகள் "அபீ சாப்பிடவாங்களேன்" இதோ வருகின்றேன் என்றபடி இந்நந்நாளில் வாப்பா சாப்பிட வாங்களேன் என்று கூப்பிட முடியாமலும் நமது வாப்பா இருந்திருந்தால் .......? என்ற ஏக்கங்களோடும் வாழும் குழந்தைகளை என்னி மனது அழுதவனாக வீடுசென்றேன்.

அல்ஹம்துலில்லாஹ் முகநூல்வழியாக எமது வேண்டுகோளை ஏற்று பண உதவிபுரிந்த, இப்பணியை வெற்றிபெறச்செய்ய கள உழைப்புச்செய்த அனைவருக்கும் நன்றிகள் அல்லாஹ்வே கூலிதரப்போதுமானவன்.

இன்றோடு முடிக்கவொன்னா இப்பணி என்றுமே தொடர எனக்கும் என் தோழமைகளுக்கும் அருள்புரிவாயாக ஆமீன்.

3 comments:

  1. என் கண்கள் பனித்தன. எல்லாவற்றுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் போதுமானவன். மிக்க நன்றி சகோதரரே. இதில் பங்களிப்பு செய்த அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொள்வானாக. ஆமீன்.

    ReplyDelete
  2. மிகச் சிறந்த பணியை செய்து விட்டீர்கள் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக ஆமீன்

    ReplyDelete
  3. Alhamdulillah. It is excellent event

    ReplyDelete

Powered by Blogger.