Header Ads



மட்டக்களப்பு விகாராதிபதியின், மன ஆதங்கத்தை மதிக்கிறோம் - மௌலவி முபாறக்

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பு பௌத்த விகாரைக்கு வருகை தராதது சம்பந்தமாக மேற்படி விகாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேராரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
  
இந்த நாட்டின் ஜனாதிபதி எல்லோருக்கும் பொதுவானவர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனைத்து நிகழ்வகளின் போது நான்கு சமயத்தலைவர்கக்கும் அழைப்பு விடுக்கும் மரபை கடைப்பிடித்தார். அது இந்த ஆட்சியில் இல்லாமல் போனது என்பது கவலை தரும் விடயமாகும். அதே வேளை மட்டக்களப்பை பொறுத்தவரை பௌத்தர் மிகவும் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். அந்த வகையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பௌத்த விகாரைக்கும் விஜயம் செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபான்மையாக வாழும் பௌத்த மக்களை கௌரவித்திருக்க வேண்டும் என்பதை நாட்டின் சிறுபாண்மையினர் என்ற நிலையில் நாம் பார்க்கும் போது நியாயமானதாகவே தெரிகிறது.

மாவட்டங்களுக்கான இப்படியான ஜனாதிபதி மற்றும் பிரதமரின் விஜயங்களின் போது சகல மதங்களினதும் பிரதான மத ஸ்தானங்களுக்கும்;; விஜயம் செய்யக்கூடிய வகையில் மரபொன்றை நல்லாட்சிக்கான ஜனாதிபதி ஏற்படுத்துவது பொருத்தமானதாகும்.

 அதே வேளை ஜனாதிபதியின் பெயர் தாங்கிய பெயர்ப்பலகையை விகாராதிபதி பகிரங்கமாக உடைத்தமையை சரியென எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அது சமயத்தலைவர்களுக்கு அழகான செயல் அல்ல. ஆனாலும் மட்டக்களப்பு விகாராதிபதியின் மன ஆதங்கத்தை நாம் மதிக்கிறோம் என கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்தார். 

5 comments:

  1. அது எல்லோருக்கும்தெரியும் நீங்கள் சுட்டிக் காட்டி நல்லவராக மஹிந்தீக்கு இன்னும் வால் பிடிக்க வேண்டாம்

    ReplyDelete
  2. வேலிக்கு ஓணான் சாட்சி,

    ReplyDelete
  3. சால்வையை விட்டு இறங்க மாட்டாா் போலும்....

    ReplyDelete
  4. Mooku podeppa iruntha ipdithan yosike thoanum...

    ReplyDelete
  5. This fellow wants to keep ice for the thera. But the thero will give him nothing for his support. Poor fellow

    ReplyDelete

Powered by Blogger.