Header Ads



எர்துகானுக்கு ஆதரவாக, மக்கள் வீதிக்கு விரைவு - துருக்கி முழுவதும் பதற்றம் (படங்கள்)


சதி புரட்சியாளர்களால் கைது செய்து வைத்திருந்த துருக்கி இராணுவத் தலைமை தளபதி, விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் உளவுத் துறை அறிவித்துள்ளது.

சதிப் புரட்சியில் ஈடுபட்ட இராணுவத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இஸ்தான்பூலின் பாதிஹ் பகுதியில் சதி புரட்சியில் ஈடுபட்ட இராணுவ தரப்புக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் நடைபெறுவதாகவும், புரட்சி தோல்வியை நோக்கி செல்வதாகவும் துருக்கி முழுவதும் அர்தூகானுக்கு ஆதரவாக மக்கள் வீதிக்கு வந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சதி புரட்சியை திட்டமிட்டவர் இராணுவ தளபதி ஆலோசகர் கேர்ணல் முஹர்ரம் கோஷா என்று தகவல் வெளியாகியுள்ளது.

சதி புரட்சி தோல்வியடைந்ததை TRT தொலைக்காட்சி ஊழியர்கள் கொண்டாடுவதாகவும் அதன் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பியதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.



No comments

Powered by Blogger.