Header Ads



பௌத்தத்திற்கு கிடைக்க வேண்டிய இடத்தை, நாங்கள் வழங்க வேண்டும் - பேராயர் மெல்கம் ரஞ்சித்

அஸ்கிரி பீடத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மகாநாயக்க தேரர் வரகாகொட ஞானரதன அவர்களை வரவேற்கும் நிகழ்வு கொழும்பு சம்போதி விகாரையில் நேற்று -25- இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்ட பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் உரையாற்றும் போது, 

"இன்று முன்னரை விட மேற்கத்திய நாடுகளின் குறிப்புகள் இந்த நாட்டிற்குள் எளிதில் தடம்பதிக்கும் காலத்தில், எமது நாட்டின் மத நாகரீகம் கனவாக மாற ஆரம்பித்திருக்கும் காலத்தில், மதத்தை அரசியல் யாப்புப்படி அகற்றுவது, ஒதுக்குவது சரியானதல்ல என்று நான் முதலில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். 

அதன்படி இந்த நாட்டில் பௌத்த மதத்திற்கு கிடைக்க வேண்டிய இடத்தை நாங்கள் வழங்க வேண்டும். 

அது இந்த நாட்டின் வரலாற்றுடன் தொடர்புடைய அனுபவம். அதேபோன்று இந்த நாட்டின் நிறைய பேருடைய வாழ்க்கையுடன் தொடர்புடைய அனுபவம். 

நாங்கள், அதன் காரணமாக மதச்சார்பற்ற அரசு ஒன்றை கட்டியெழுப்பும் கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. 

ஆகவே, இந்த சந்தரப்பத்தில் நாம் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புவது, உங்களுடன் சகோதரத்துவத்துடன் நாம் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைவரினதும் ஆன்மீக முன்னேற்றத்திற்காக செயற்பட தயார் என்று. 

அத்துடன் இந்த நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை, மேற்கத்திய நாடுகளின் மனித உரிமைகள் என்று கூறும் கருத்துக்கு அடிபனிந்து, கலாச்சார பாரம்பரியத்தை ஒதுக்கும் நடவடிக்கைக்கும் அனுமதி அளிக்க முடியாது. மனித உரிமைகள் மதமின்றி உருவாகுவதில்லை. மதத்தை சரியாக கடைபிடிப்பதால், மனித உரிமைகளை நாம் எல்லோரும் பாதுகாக்கின்றோம். 

அதன் காரணமாக மேற்கேத்திய நாடுகளின் விருப்பப்படி, மனித உரிமைகளை இங்கு கொண்டு வந்து எங்களுக்கு ஊட்டிவிடவும் இங்கு இடமில்லை. 

அதன் காரணமாக இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கு கூறிக் கொள்ள விரும்புவது, நாம் இந்தப் பிரச்சினைகளின் போது உங்களுடன் ஒன்றிணைந்து செயற்பட தயார் என்று" என்றார். 

2 comments:

  1. Buddust.mathaththukku kattayam munnurimai valankavendum buddust country

    ReplyDelete
  2. மனித உரிமை என்கிறார், மதம் என்கிறார், கலாச்சாரம் என்கிறார் ஒன்றுமே புரியவில்லை. ஏதோ சிங்களவர்களை திருப்தி பட வைக்க முயல்கிறார் என்பது மட்டும் புரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.