Header Ads



"பொதுபல சேனாக்கு முக்கியத்துவம் அளிப்பதை, நிறுத்திக் கொள்வோம்"

-Mohamed Naushad-

பொது பல சேனாவின் மிக அண்மைக்கால நடவடிக்கைகளை நோக்கும் போது முஸ்லிம்களை சீண்டிவிட்டு வம்புக்கு இழுக்கும் ஒரு பாரிய முயற்சியில் அவர்கள் தீவீரம் காட்டி வருவதை நன்கு உணர முடிகின்றது. 

ஒருவேளை மியன்மாரில் ஞானசூனியம் கற்று வந்துள்ள புதிய பாடத்தின் பிரதிபலிப்பாகவோ அல்லது அங்கு அவர் அசின் விராத்துவுடன் செய்துள்ள இரகசிய உடன்படிக்கையின் ஒரு அம்சமாகவோ கூட இருக்கலாம். இந்த சூழ்ச்சியை புரிந்து கொள்ள முடியாத நமது சகோதரர்கள் பலர் அவர்களின் கருத்துக்களுக்கு தேவையற்ற விதத்தில் தங்களது FB பக்கங்களிலும் தங்களால் நடத்தப்படும் சமூக வலை தளங்களிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். 

இதை உடனடியாக நிறுத்திக் கொள்வதே நல்லது. அவர்களின் கருத்துக்களுக்கு நாம் ஏன் எமது வலை தளங்களில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? அவர்கள் பற்றி எம்மவர்கள் கூறும் கருத்துக்கள் ஏனைய ஊடகங்களில் எந்தளவு அரங்கேறுகின்றன என்பதை சற்று யோசித்துப் பார்த்தால் இது புரியும். 

ஒரு சில அரசியல் வாதிகளின் அர்த்தமற்ற உளறல்கள் மூலம் இனங்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தான் பெரும்பான்மை ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. அங்கும் கூட யார் எதற்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பது தெரியாமல் கண்டபடி வாயை கொடுத்து மாட்டிக் கொள்பவர்களும் நம்மவர்கள் தான். 

தமது அசிங்கங்களை மூடி மறைக்க சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்த முந்திரிக் கொட்டைகள் முதிர்ச்சி அற்ற கருத்துக்களை வெளியிட்டதால் இப்போது ஒட்டு மொத்த சமூகமும் ஆபத்தை எதிர் நோக்கி உள்ளது. 

தெருவில் உள்ள நாய் நம்மை பார்த்து குறைத்தால் எவ்வாறு நாம் அதை சட்டை செய்யாமல் புறக்கணித்து செல்வோமோ அதே போல் பொது பல சேனாவின் கருத்துக்களையும் எடுத்துக் கொள்வோம். 

அப்போது காலப்போக்கில் அவர்களாகவே சளைத்து தணிந்து போக வாய்ப்பு உண்டு. மாறாக அவர்களின் கருத்துக்களுக்கு நாம் முக்கியத்துவம் அளித்து பகிர்து கொள்வது அவர்கள் தமது நோக்கத்தில் வெற்றி பெற நாம் அவர்களுக்கு வழங்கும் வாய்ப்பாக அமைந்து விடும். எனவே சற்று விவேகமாக இன்றைய நிலைமைகளை அனுகி அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை நிறுத்திக் கொள்வோம்.

4 comments:

  1. Excellent piece of advice with fair reasoning and true facts.

    why should we do marketing for BBS?

    Any reasonably educated person what the writer has mentioned.

    I admire you sir Mohamed Naushad. I hope our muslim umma can think like you, especially the LOUD MOUTH, who seek petty gains.

    ReplyDelete
  2. Yes, Probably BBS is working according to the agenda of their political pay masters. Now FCID is investigating former Minister Wimal Weerawansa for allocating 7 ministry vehicles to Ravana balaya, another racist entity.

    ReplyDelete
  3. MUZALAWAZU JAFFNA MUSLIM IL BBS SAMBANADAMANA VISAYANGALAI
    PUBLICITY PANNUWAZAI MUTRAHA NEEKKIKOLLAUM

    ReplyDelete
  4. உண்மைதான்

    அவர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு நம்மவர்களால் பதில் சொல்ல முடியுமா?

    வெறும் பெயர்தாங்கி சமூகமல்லோ நாம்

    ReplyDelete

Powered by Blogger.