July 24, 2016

"ரவூப் ஹக்கீம் பற்றி, முஸ்லிம்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது" - நஸீர் அஹமட்

இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த குரலை நசுக்குவதற்காக இப்பொழுது பல உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒன்றிணைந்துள்ளன. அதன் வெளிப்பாடுதான் கிழக்கின் எழுச்சி என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் “ஐக்கிய இராச்சிய முஸ்லிம் தர்ம கொடை நிதி” அமைப்பினால் 500 வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாதணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர்,

தற்போது ஒற்றுமைப்பட்டுள்ள இலங்கை முஸ்லிம்களுக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்குக் காத்திருந்த வெளிநாட்டு சக்திகளுக்கு உள்நாட்டில் பணத்துக்கு அடிமையாகும் ஒரு சில புல்லுருவிகள் பலிக்கடாவாகி விட்டார்கள்.

இது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இதற்கெல்லாம் முஸ்லிம்கள் மசிய மாட்டார்கள் என்பதை எதிர்காலம் பதில் சொல்லும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இலங்கை முஸ்லிம்களின் அடையாளக் குரலை நசுக்குவதற்கு அவர்கள் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள்.

அதற்கு நம்மவர்களில் உள்ள நயவஞ்சகர்கள் ஒரு சிலர் துணைபோயிருக்கின்றார்கள். இந்த விடயத்திலே முஸ்லிம் சமூகம் முன்னரை விட இனி மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியிருக்கின்றது.

கடந்த காலத்திலே முஸ்லிம்களை ஒரு இனமாகக் கூட அங்கீகரிப்பதற்கு தீவிரப்போக்குடையவர்கள் மறுத்து வந்த நேரத்தில் இலங்கை அரசியலுக்குள் ஸ்ரீ.மு.கா உட்புகுந்ததன் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கென்று ஒரு தனித்துவக் குரலையும் அடையாளத்தையும் சர்வதேசம் எங்கிலும் பெற்றுத் தந்தது.

இதனைச் சகித்துக் கொள்ள முடியாத உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் முஸ்லிம் சமூகத்தைப் பிளவுபடுத்த இப்பொழுது தமது காய்நகர்த்தல்களை முஸ்லிம் சமூக புல்லுருவிகளைக் கொண்டே ஆரம்பித்திருக்கின்றார்கள்.

ஸ்ரீ.மு.கா தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் மீது நாம் இந்த சமூகத்தை வழிநடத்தக் கூடியவர் என்கின்ற அத்தனை நம்பிக்கைகளையும் வைத்திருக்கின்றோம்.

அவரிடம் ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய எல்லா ஆளுமையும், ஆற்றலும் அனுபவமும் உண்டு. இதனை முஸ்லிம் சமூகம் குறைத்து மதிப்பிட முடியாது.

ஆயினும், எமது சமூகத்தைக் கொச்சைப் படுத்த நினைக்கின்ற நாசகார சக்திகள் இந்த சமூகத்தைப் பற்றிக் கதைக்க எந்தவித திரனுமற்றவர்கள்.

கட்சியின் உள்ளும் கட்சிக்கு வெளியேயும் இருந்து கொண்டு இத்தகைய நயவஞ்சகத்தனமான நாசகார வேலைகளைச் செய்பவர்களை சமூகம் சரியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் என்கின்ற அசையாத நம்பிக்கை எமக்குண்டு. எமது சமூகம் ஒருபோதும் தோற்றுவிடாது.

ஸ்ரீ.மு.கா கட்சியும் அதன் தலைமையும் ஏனைய உறுப்பினர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் மிகுந்த பலத்துடன் உள்ளார்கள் எனவும் இதன் போது குறிப்பிட்டார்.

4 கருத்துரைகள்:

Nasser I totally agree with paragraph 7. Its not by you boss Rauf but by the late Ashraf.

"The Muslim Voice" has NO right to deliberate the the internal struggle for power issues of the Sri Lanka Muslim Congress – SLMC. But Minister Rauf Hakeem being a Muslim and also claiming to be a Muslim political leader, “The Muslim Voice” vehemently denounces Rauf Hakeem as a Muslim leader of the Muslim Community of Sri Lanka as claimed by EPC Chief Minister Nazeer Ahamed. The claim made by CM Nazeer Ahamed that the Muslims are united as a political force via the SLMC is FALSE. The Muslims were UNITED politically as one voice during the leadership of late M.H.M. Ashraff. With the advent of Rauf Hakeem becoming the leader of the SLMC, by conspiracy, using “ DEMOCRATIC MEANS TO KILL THE DEMOCRACY “ within the party and planting his stooges with constitutional changes, the SLMC support base (Poraaligal and Pamaramakkal) in the Eastern Province and Muslim populated area. outside the Eastern Province began to erode and finally ended up in the SLMC splitting into the ACMC, National Congress, DUA, Muslim Unit – SLFP and a group leaning with the UNP. The deceptive, dishonest and alleged corruption, including the sale of the Muslim vote bank (SLMC MP’s votes in parliament) of the SLMC to the Mahinda government for a very large amount of money and additional perks, in return to support the controversial 18th Amendment Bill on September 8, 2010, made the Muslims politically frustrated. At the same time, the Muslims did not benefit to resolve their economical, employment, development, education and fundamental rights issues by the SLMC or Rauf Hakeem and his team. The Muslims were seen as “POLITICAL ORPHANS”, since the demise of the late M.H.M. Ashraff. In the period ending 2014, the Nationalist Buddhist Monks assault on the Community made the Muslims more frustrated. This led the Muslim community with a vote bank of nearly 500,000 votes to steer clear from “POLITICS” and to ACT AS A UNITED COMMUNITY FORCE that took decisions on its own without any influence or participation of Muslim politicians. The Muslim Community in the run-up to the Presidential elections and the General elections of 20015, ACTED AUTONOMOUSLY. The scenario was that Muslim politicians and political parties were led by the VOTERS and NOT the VOTERS led by the dishonest, deceptive and unscrupulous so-called Muslim politicians including Rauf Hakeem. Rauf Hakeem thus became “PERSONA NON-GRATA” to the TRUST of the Muslims in Sri Lanka, be it the Eastern province or other Muslim populated districts in the other provinces in Sri Lanka. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, EVEN WITHIN THE SLMC, especially from among the YOUTH and the poraalikkal and pamaramakkal, has to emerge to face the political challenges through RIGHTFUL legislations and constitutional changes adopted in our favour in the coming future, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

It is time for Sri Lankan Muslims to write off SLMC and it's Alibabas

நசீர் அவர்களே, சகோதரர் ஹக்கீம் அவர்களின் திறமையை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று நீங்கள் கூறுவதன் மூலம் அவருக்கு அரசியல் திறமை குறைவாகl உள்ளது என்பதை நீங்களும் அறிந்துள்ளீர்கள். இருந்தாலும் நீங்கள் அரசிய லில் நிலைத்து நிட்பதட்கு அவரது தலைமை உங்களுக்கு தேவைப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். சில விடயத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.

சகோ. ஹக்கீம் - தலைவர் அஷ்ரப் அவர்களின் இறுதிக் காலத்தில் ரணிலுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு தனது அரசியலை முன்னெடுத்ததில் இருந்து ( தலைவர் அஷ்ரப் அவர்களின் அகால மரணம் நடை பெறாது இருந்திருந்தால் காட்ச்சியை விட்டே வெளியேற்றி இருப்பார் இதே வேலையை சந்திரிக்கா அமைச்சரவையிலும் அரங்கேற்றியதால் அவருக்கும் சந்திரிக்காவுக்கும் பிணக்கு உண்டானது ) அதன் பின் தலைமைத்துவத்தை கைப்பற்றியதில் இருந்து சில முக்கிய விடயங்கள் வருமாறு;

ராஜபக்க்ஸவுடன் மந்திரி பதவிக்கு அவரை ஆதரித்தது, 18 வது சட்டம், கசினோ சட்டம், தெவிநுகம சட்டம், BBS பிரச்சினை, ஹலால் பிரச்சினை, அளுத்காம பிரச்சினை, தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் மட்டும் ராஜபக்சவா மைத்திரியா என்று முடிவெடுப்பதில் தடுமாறியது, இன்னும் தேசியப்பட்டியல் விவகாரம் தீர்க்கப்படாமை, கடசியின் செயலாளர் பிரச்சினை ( மிகவும் சுத்து மாத்து வேலை ) அதாவுல்லா, றிசாத், ஹிஸ்புல்லா போன்றவர்களை தனது திறமையற்ற அரசியல் முடிவுகளால் வளர விட்டவர் ..இப்படி பல உண்டு.

ஹரீஸ் எம்பி : கடசியையும் தலைமைத்துவத்தையும் அதாவுல்லாவுடன் சேர்ந்து குழி தோண்டி புதைக்க முட்பட்டவர். இன்னும் பல உண்டு.

பைசால் காசிம் : தனக்கு எம்பி பதவியும் மந்திரி பதவியும் கிடைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளவர். அரசியல் என்பது சுத்த சூனியம்; நிந்தவூர் மக்கள்: !!!! ???????

ஹாபிஸ் நசீர் : இவரை தலைவர் அஷ்ரபுக்கு முன் பின் என பகுப்பாய்வு செய்தால் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும், முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைமையையும் அழித்து அரசியல் செய்ய முட்பட்டு அதில் தோல்வியடைந்து ஹக்கீமின் பின் கதவால் கடசிக்குள் வந்தவர்.

இவை தான் தற்போதை முஸ்லிம் காங்கிரசின் அரசியல் குழுவின் நிலை.


Post a Comment