Header Ads



பஷில் ராஜபக்ஷவிடம் நாய் வரி, அறவிடுமாறு கோரிக்கை

நாய் வரி பஷில் ராஜபக்ஷவிடமே அறவிடப்பட வேண்டும் எனத் தெரிவித்த பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தி  தனிக் கட்சியை ஆரம்பிக்க  பஷில் முயற்சியென்றும்   குற்றம் சாட்டினார். 

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே, தகவல் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்தின பரணவிதான இதனைத் தெரிவித்தார்.  பிரதியமைச்சர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாய்களுக்கான வரியோ அல்லது மக்களுக்கான உடல்வரியோ அறவிடுவதற்கான எந்தவிதமான தீர்மானத்தையும் அரசு எடுக்கவில்லை. 

அதற்கான அவசியமும் எழுவில்லை. ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் 6 நாய்களை வளர்த்த பஷில் ராஜபக் ஷ அந்நாய்களை பராமரிப்பதற்காக இலங்கை கடற்படையினரை பயன்படுத்தினார். எனவே பஷில் ராஜபக் ஷவிடம் தான் நாய் வரி அறவிடப்பட வேண்டும். 

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தி தனிக் கட்சியை ஆரம்பிப்பதற்கு பஷில் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.  

மத்திய வங்கி ஆளுநர் நியமனத்தையும் சிலர் இனவாதத்திற்கு பயன்படுத்த முயற்சிக்கின்றனர். தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன போன்ற சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் மத்திய வங்கி ஆளுநர் நியமனத்தை வரவேற்றுள்ளனர்.

அரசியல் முகவரி இல்லாதவர்கள் இதனையும் இனவாதமாக்குகின்றார்கள்என்றார்.  

No comments

Powered by Blogger.