Header Ads



நாங்கள் அழைப்பாளர்களா..? அல்லது நீதிபதிகளா..??

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி-

அது ஹராம் இது ஹராம்
அவன் செய்ரது பித்அத்
இவன் செய்ரது ஷிர்க்
அந்த விளையாட்டு ஹராம்
இந்த உடுப்பு ஹராம்

பொம்பளைகள் என்றாலே பித்னா
பொம்பளைகள் வெளியில் செல்வது ஹராம் 
முகம் மூடுவது ஹராம்
பெண்கள் டியூஷன் செல்வது ஹராம்

தாடி இல்லாட்டி தீனில்லாதவன்
தொப்பியில்லாதவன் தௌஹீத்காரன்
அவன் பெருமைக்காறன்
இவன் பொறாமைக்காறன்

நாங்கள் அழைப்பாளர்களா ?
அல்லது நீதிபதிகளா ?

தொழுகையில்லாதவன் காபிர் என்று பத்வா கொடுப்பது லேசு அவனை அழைத்து தொழுகை பற்றி விளக்கி தொழுகைக்கு அழைத்துச் செல்வது கடினம்.

எது எமது கடமை ?

கருத்துக்கு அறிவு பூர்வமாக மாற்றுக்கருத்துச் சொல்வது  நாகரீகமா ? 

கருத்தில்லாத வங்குரோத்து நிலையில் கருத்தாளனின் மீது கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுவதா ?

எது நாகரீகம் ? 

தனக்கு பிடித்த ஒருவரை நபி போன்று உயர்த்துவது, தனக்கு பிடிக்காத ஒருவரை நாய் போன்று தாழ்த்துவதா?

எது பண்பாடு ?

தனது கொள்கைக்கு மாறாக ஒருவன் பேசி விட்டால், இவன் பிரபல்யமடையப் பார்க்கிறான் என்ற ஒரே பல்லவியைப் பாடுவது 

தனது கொள்கைக்கு சார்பாக பேசிவிட்டால் கண்ணை மூடிக்கொண்டே மாஷா அல்லாஹ் , அல்லாஹு அக்பர் என்று வாழ்த்துப் பாடுவதா ?

எது உளத்தூய்மை..?

மனிதர்களை வைத்து சத்தியத்தை புரிந்து கொள்வதா ?

சத்தியத்தை வைத்து மனிதர்களை புரிந்து கொள்வதா ?

எது சத்தியம் ? 

மார்க்கத்தை சிந்திக்காமல் 
படித்தது தவறில்லை
படித்த பிறகு சிந்திக்காமல் இருப்பதுதான் தவறு.

2 comments:

  1. மார்க்கம் சில நம்பர்களுக்குள் சுருக்கப்பட்டதால் மக்கள் சில பள்ளிகளுக்குள் மட்டும் முடங்கிவிடுகிறார்கள். பாவம் எமது மக்கள்.....

    ReplyDelete
  2. A Muslims scale is sunrise prayer!

    ReplyDelete

Powered by Blogger.