Header Ads



நான் விளையாடிய அணியில் உப தலைவர், ஒரு முஸ்லிம் சகோதரர் - அர்ஜூன

புதிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் போது பௌத்த மதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காராம விகாரையில்  நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இன, ஜாதி,மத பேதங்களை புறந்தள்ளி விட்டு ஒத்துழைப்புடன் நல்லிணக்கமாக செயற்படும் காலம் வந்துள்ளது.

இலங்கை தற்போது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாக மாறியுள்ளது.

நான் பாடசாலை செல்லும் போது நான் விளையாடிய அணியில் உப தலைவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு முஸ்லிம் சகோதரர். நாங்கள் ஒன்றாக படித்தோம். ஒன்றாக பழகினோம்.

கடந்த காலங்களில் இனங்களுக்கு இடையில் பேதங்கள் ஏற்படுத்தப்பட்டன. மதங்களுக்கு இடையில் பேதங்கள் ஏற்படுத்தப்பட்டன. எனினும் தற்போது இவை அனைத்தும் இல்லாமல் போயுள்ளன.

நானும் அரசாங்கத்தின் அமைச்சர் என்ற வகையில் இந்த விடயம் தொடர்பில் மிகவும் கவனமாக பணியாற்றி வருகின்றேன் எனவும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.