July 13, 2016

இலவச விளம்பரம்

-அஹ்மத் கபீர்-

இஸ்லாமிய போதகர் ஜாஹீர் நாயக்கின் வீடியோக்களை ஆய்வு செய்த மும்பை காவல்துறை ஜாஹீர் நாயக்கின் பேச்சில் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் எவ்வகையான கருத்துக்களையும் காணமுடியவில்லை என்றும் அவரை கைது செய்வதற்கு முகாந்திரம் இல்லை என்றும் அறிவித்து விட்டது காவல்துறை.

இதன் மூலம் ஜாஹீர் நாயக்கை பயங்கரவாதி என்று மக்களிடம் கொண்டு போக எத்தனித்த டைம்ஸ் நவ் உள்ளிட்ட காவி பயங்கரவாத ஊடகங்களின் முகத்தில் கரியைப் பூசியுள்ளது மும்பை காவல்துறை. மும்பை காவல்துறைக்கு மிக்க நன்றிகள். ஜாஹீர் நாயக்கின் இஸ்லாமிய பிரச்சாரத்துக்கு அரசே தன் செலவைச் செய்து ஒரு வாரம் இலவச விளம்பரம் செய்து விட்டார்கள்.

ஜாஹீர் நாயக் விவகாரங்களை ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்களும் அவர்களுக்கு கால் கழுவி விட்ட தமிழகத்தைச் சேர்ந்த கல்யாணராமன் போன்ற காவி அயோக்கிய பயங்கரவாதிகளும் குத்தாட்டம் போட்டு குதியாட்டம் போட்டார்கள். அதுவும் பாஜகவின் தேசியச் செயலாளர் என்று சொல்லிக் கொள்ளும் எச்.ராசா அவர்கள் ஜாஹீர் நாயக்கை கைது செய்ய வேண்டும் என்று ஸ்டேட்டஸ் போட்டு விட்டு அவரை கமெண்டில் காரித்துப்பாத நபர்களே இல்லை!

இதில் ஒரு காமெடி என்னவென்றால் எச்.ராசா அவர்களின் பதிவில் பல முஸ்லிம் அல்லாத எங்களின் தொப்புள் கொடி சகோதரர்கள் எச்.ராசாவைப் போட்டு கிழி கிழி என கிழிக்கின்றார்கள். உலகத்திலேயே இவ்வளவு கேவலப்பட்டும் திருந்தாத ஒரே தேசியச் செயலாளர் அண்ணன் எச்.ராசாவாகத்தான் இருப்பார். ஆனால் அதே நேரம் அண்ணன் எச்.ராசா அவர்களை யாராவது திட்டினால் முகம் தெரியாத ஐடியில் வந்து அவர்களை அந்த மவனே இந்த மவனே என்று வசை பாடும் வேலையையும் அண்ணன் எச்.ராசா அவர்களே செய்வதாகவும் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

காவிகள் கடித்துப் போட்ட எலும்புத்துண்டை கவ்விக் கவ்வி நக்கி நக்கி கடித்து கடித்து ருசிக்கும் கல்யாணராமன் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஸ்டேட்டஸை போட்டிருந்தான். அதாவது தமிழக தாலிபான்களின் உரைகளையும் ஆராய வேண்டுமாம்.

சபாஷ்! பிரமாதம் கல்யாணராமா! தமிழகம் மட்டுமல்ல! ஒட்டு மொத்த இந்தியாவின் இஸ்லாமிய மத பிரச்சாராங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல RSS, VHP, பஜ்ரங்தள் மற்றும் பிஜேபியைச் சேர்ந்த காவி பயங்கரவாதிகளின் உரைகளையும் ஆய்வு செய்ய வேண்டும். பொதுக்கூட்டம் முதல் மாநாடு வரை மதரஸா முதல் ஷாக்கா பயிற்சி வகுப்பு வரை ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து அதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். தயாரா? அப்போது தெரியும் மக்களுக்கு யார் ஒரிஜினல் தீவிரவாதிகள் என்று!

மதரஸாவில் பயங்கரவாதம் பயிற்றுவிக்கப்படுகின்றது என்ற விஷப்பிரச்சாரம் நீண்ட நாட்களாக காவி பயங்கரவாதிகளால் பரப்பப்பட்டு வருகின்றது. அதையும் ஆய்வு செய்ய வேண்டும். மதரஸாவில் என்ன போதிக்கப்படுகின்றது என்பதை நடுநிலை மக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். மதரஸாவில் பயிற்சி பெற்றவன் தான் மழை வெள்ளத்தில் நிவாரணப் பணி செய்தவன். ஷாக்காவில் பயிற்சி பெற்ற பல அப்பாவிகளை அடித்தே கொன்றவன்.

உரசிப் பார்ப்போமா? மதரஸா பயிற்சி எப்படி ஷாக்கா பயிற்சி எப்படி என்று ஆய்வு செய்யலாமா? முஸ்லிம்கள் எந்த இடத்திலும் ஆயுதங்களைக் கொண்டு பயிற்சி எடுப்பதும் இல்லை, பயிற்சி கொடுப்பதும் இல்லை. ஆனால் இந்த காவி பயங்கரவாதிகள் அரிவாள் முதல் கோடாரி வரை பயங்கர ஆயுதங்களுடன் பயிற்சி கொடுத்து முஸ்லிம்களையும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் நடுநிலை ஹிந்துக்களையும் எப்படி கொலை செய்வது என்பதைத்தான் போதிக்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் நடத்தும் எந்த ஒரு மாநாட்டுக்குள்ளும் அரங்கு நிகழ்ச்சிகளுக்குள்ளும் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் ஆனால் RSS, VHP மற்றும் சங்கபரிவார மாநாட்டுகளுக்குள் பத்திரிகையாளர்களை அனுமதிப்பதில்லையே ஏன்? ஜாஹீர் நாயக் தீவிரவாதியா என்று போட்டி போட்டு விவாதம் நடத்திய டைம்ஸ் நவ் போன்ற காவி பயங்கரவாத ஊடகங்கள் இது குறித்து விவாதம் நடத்தத் தயரா?

யாரைடா சொல்றீங்க தீவிரவாதின்னு காவி பயங்கரவாதிகளா? பாம்பு தன் பசிக்கு தன் குட்டியைச் சாப்பிடுவது போல உங்களின் அரசியல் பசிக்கு ஹிந்து மக்களையே பலி கொடுத்து அதன் மூலம் கலவரத்தை தூண்டும் கலவர கபோதிகளா! காவி பயங்கரவாத ஊடகங்களா? சமர்பதி ரயிலை முஸ்லிம்கள் எரித்து விட்டார்கள் என்று ஓலமிட்ட்டு மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்றொழித்தார்களே! இப்போது சமர்பதி ரயிலின் எரிந்து போன S.6 பெட்டியில் உள்ள 4 கதவுகளும் உள் பக்கமாக தாழ் போடப்பட்டு இருந்தாக புலனாய்வு செய்திகள் வெளியானதே! அது குறித்து யாராவது விவாதம் செய்தீர்களா? எஸ்.6 பெட்டி ஏன் உள் பக்கமாகப் பூட்டப்பட்டது என்று விவாதித்தீர்களா?

யாரை பயங்கரவாதி என்கின்றீர்கள்? காவி பயங்கரவாதி கல்யாணராமன் தேர்தலில் சீட்டு கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இஸ்லாமியர்களின் உணர்சியைத் தூண்டும் வகையில் எழுதினானே! இப்போதும் எழுதுகின்றானே! அவனை யாராவது கண்கானித்தீர்களா?

இஸ்லாமியர்களும் ஹிந்துக்களும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். இந்த மண் பெரியார் பிறந்த மண். பெரியார் போட்ட அஸ்திவாரத்தை அசைத்து கலவரத்தை தூண்டி இஸ்லாமியர்களையும் ஹிந்துச் சகோதரர்களையும் பிரித்து விடலாம் என காத்திருக்கும் காவி பயங்கரவாதிகளின் கனவு ஒருக்காலும் பலிக்காது.

4 கருத்துரைகள்:

Alhamdulillah ! Masha Allah ! Allah is Great ! Only the Truth will win. This is the great victory for all Muslim ummah.

Masha Allah . Alhamdulillah. Allahu akbar..........
Siranda oru katturi......

ALMIGHTY IS GREAT HE WILL NOT LET DOWN HIS TRUE BELIVERS.lETS PRAY FOR DR.ZAKIR NAIK'S SAFETY.

Post a Comment