Header Ads



மைத்திரி மஹிந்தவை இணைக்கவும், பசில் விமலை கைதுசெய்யவும் முயற்சி..!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஞாயிறு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியையும் தற்போதைய ஜனாதிபதியையும் இணைப்பதற்கு புதிய வழிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இருவரையும் ஒற்றுமைப்படுத்தும் நடவடிக்கைகளின் பொறுப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர்களில் ஒருவரான ஜோன் செனவிரட்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடியின் இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இங்கு கட்சியையும் கட்சித் தலைமையையும் விமர்சனம் செய்வதனால் நாட்டுக்கோ, கட்சிக்கோ எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என அமைச்சர் ஜோன் செனவிரட்ன இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அனைத்து தரப்பினரையும் இணைத்து கொள்வதன் மூலமே கட்சியை வெற்றியீட்டச் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார் என்று குறித்த பத்திரைகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2

விரைவில் பசில் ராஜபக்ச மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் கைதுசெய்யப்படுவார்கள் என கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

திவிநெகும அபிவிருத்தி திட்டத்தின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் நாளையதினம் பசில் ராஜபக்சவிடம் விசாரணைகள் மேற்கொள்ள இருப்பதாக நிதி மோசடி விசாரணைபிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை விமல் வீரவன்சவின் பல குற்றச் செயல்கள் காரணமாக ஜூலை 26ம் திகதிபொலிஸ் நிலையத்தி்ல் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக பாத யாத்திரை நடாத்துவதற்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.