Header Ads



இந்திய ராணுவம் காஷ்மீர் மக்களை, கொன்று குவிப்பதை உடனே நிறுத்த வேண்டும் - அல்தாஃபி

காஷ்மீரில் இந்திய ராணுவம் கொடூரமான முறையில் பொதுமக்களை கொன்று குவிப்பதை கண்டித்தும், அதற்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூன்று தினங்களுக்கு முன் போராட்டம் அறிவித்தது.

போராட்ட நாளான இன்று போராட்டம் தொடங்குவதற்கு முன்பே போராட்ட களத்தில் மக்கள் வெள்ளம் போல் குவியத்தொடங்கினர்.

போராட்டத்தில் ஈவு இரக்கமற்ற இந்திய ராணுவத்தை கண்டித்தும், துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் விண்ணை முட்டும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி கண்டன உரையாற்றினார்.

அவரது உரையில்....

காஷ்மீர் வரலாற்றை சுட்டிக்காட்டி காஷ்மீர் தனி நாடாக இருப்பதோ, இந்தியாவுடன் இணைந்து இருப்பது அல்லது பாகிஸ்தானோடு இணைந்து இருப்பதோ அது அந்நாட்டு மக்களின் உரிமை என்றும், அந்த உரிமையை நிலைநாட்ட இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாக வாக்குறுதி அளித்து விட்டு கொடுத்த வாக்கை இந்திய அரசு தவறி வருவதாக குற்றம் சாட்டினார்.

இந்திய ராணுவம் காஷ்மீர் மக்களை கொன்று குவிப்பதை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும் என்று இப்போராட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்வதாக கூறினார்.

போராட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காவல்துறையினர் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.


No comments

Powered by Blogger.