Header Ads



ஓய்வுபெறும் வயதை தாண்டியவரை செயலாளராக வைத்துள்ள கல்வியமைச்சு புத்திஜீவிகளை பழிவாங்குகிறது

தேசிய கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்திலிருந்து பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான கடிதங்களை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சிவில் சமூக அமைப்புகளின் ஊடாக நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதில் பாரிய பங்களிப்பை நல்கியதன் காரணமாக மேற்குறித்த இருவரும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் சிற்சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தினால் இருவருடைய பதவியும் தற்போது பறிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஓய்வு பெறும் வயதையும் தாண்டிய ஒருவரை செயலாளராக வைத்துக் கொண்டுள்ள கல்வி அமைச்சு, புத்திஜீவிகளை பழிவாங்கிக் கொண்டிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. So after 60 u are completely worn out u mean to say.

    ReplyDelete
  2. They are intellectuals. They Eve r against the corruption.but this government will not accept them fully

    ReplyDelete

Powered by Blogger.